கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

    (a)

    பெளமானின் கிண்ணம்

    (b)

    ஹென்லே வளைவின் நீளம்

    (c)

    அண்மை சுருள் நுண்குழல்

    (d)

    கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

  2. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

    (a)

    கார்பன் டை ஆக்ஸைடு

    (b)

    யூரிக் அமிலம்

    (c)

    யூரியா

    (d)

    அம்மோனியா

  3. போடோ சைட்டுகள் காணப்படுவது______.

    (a)

    பெளமானின் கிண்ண வெளிச்சுவரில்

    (b)

    பெளமானின் கிண்ண உட்சுவரில்

    (c)

    நெஃப்ரானின் கழுத்து பகுதியில்

    (d)

    கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

  4. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையையுடைய உயிரிகள் ______.

    (a)

    யூரியா நீக்கிகள்

    (b)

    அம்மோனியா  நீக்கிகள்

    (c)

    யூரிக்அமில  நீக்கிகள்

    (d)

    இரசாயன  நீக்கிகள்

  5. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்  ______.

    (a)

    கோலிசிஸ்டோகைனின்

    (b)

    ஆஞ்சியோடென்சின் II

    (c)

    ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

    (d)

    பான்கிரியோசைமின்

  6. சிறுநீரக நுண்குழல்களின் முக்கியப் பணி

    (a)

    சிறுநீரை அடர்தியாக்கல்

    (b)

    சிறுநீரின் பாதை

    (c)

    இரத்தத்திலிருந்து யூரியா மற்றும் கழிவுகளை நீக்குதல்

  7. கிளாமருலஸிலிருந்து மீள் உறிஞ்சுதலை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது?

    (a)

    ஆக்ஸிடோசின்

    (b)

    வாஸோப்ரஸ்ஸின்

    (c)

    ரிலாக்ஸின்

    (d)

    கால்சிடோனின்

  8. 9 x 2 = 18
  9. இருவாழ்வி மற்றும் முதிர் உயிரிகள் வெளியேற்றும் நைட்ரஜன் கழிவுப்பொருட்கள் யாவை?

  10. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

  11. சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?

  12. சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?

  13. அயனிகள் கட்டுப்பாடுகுறிப்பு வரைக.

  14. யூரியா நீக்கிகள் என்பது யாது?

  15. சுடர் செல்கள் எங்கு காணப்படும்? அவற்றின் பணிகள் யாது?

  16. சிறுநீரகத்தின் செயல் அலகு யாது?

  17. பிரைட்டின் நோய் என்பது யாது?

  18. 5 x 3 = 15
  19. நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி எது?வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுங்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது எங்கு செல்கிறது?

  20. மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?

  21. கீழ்கண்ட பதங்களை பொருத்துக

    அ) உணரவேற்பி -உட்செல் நுண்தமனி
    ஆ) சுயநெறிப்படுத்துதல் -அடிப்படைச்சவ்வு (basal lamina)
    இ) பெளமானின் கிண்ணம் -இரத்த நுண்நாளங்களின் இரத்த அழுத்தம்
    ஈ) காப்சூல் திரவ அழுத்தம் -கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம்
    உ) கிளாமருலஸ் -கிளாமருலார் வடிதிரவ வீதம் (GFR)
    ஊ) போடோசைட் -ஜக்ஸ்டா கிளாமருலார் செல்கள்
    எ) இரத்தக்குழாய் சுருக்கம் -பிளாஸ்மா புரதங்கள், நார்எபிநெஃப்ரின்
  22. புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து

  23. நெஃப்ரானின் அமைப்பை பற்றி விளக்குக.

  24. 2 x 5 = 10
  25. குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.

  26. சிறுநீர்பெருக்கெதிர் ஹார்மோனின் பணி யாது?அது எங்கே உருவாக்கப்படுகிறது?இதன் சுரப்பை அதிகரிக்கவும்,குறைக்கவும் தூண்டுவது எது?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Excretion Model Question Paper )

Write your Comment