" /> -->

11th Biology - Important 2 mark questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100
  Answer any 50 of the following questions
  50 x 2 = 100
 1. பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

 2. வகைப்பாட்டின் பெரும் படிநிலைகளைக் குறிப்பிடுக.

 3. பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 4. தாடையுடைய  விலங்கு பிரிவில் காணப்படும் மேல் வகுப்பு யாவை?

 5. இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்ததிசு என்றழைக்கப்படுகிறது?

 6. உறுப்பு மண்டலம் என்றால் என்ன?

 7. அலரி தசையின் வேலைகளை விளக்கவும்.

 8. மான்டிபுலேட் வாய் உறுப்புகள் என்றால் என்ன?

 9. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சி்கள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

 10. என்டிரோகைனேஸின் மற்றும் டிரிப்ஸினின் வேலை யாது?

 11. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

 12. ஆக்ஸிஜன் ஹீமோகுளோபின் பிரிகை வளைவு என்பது யாது?  

 13. மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.

 14. ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?

 15. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

 16. உயிரினங்களில் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறும் முறைகளைக் கூறு. 

 17. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

 18. பாலிசைக்ளிக்ஸ்டீல் என்பது யாது?

 19. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

 20. கிழங்குகளில் 'கண்கள்' என்பது எதனைக் குறிக்கிறது?

 21. கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
  அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
  ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
  இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

 22. கனிவளர் புல்லி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 23. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை  எவ்வாறு வகைப்படுத்துவாய்

 24. குடும்பம் என்றால் என்ன?   

 25. புரோடோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

 26. தாவர செல்லினுள் புதிய கனிமங்கள் எவ்வாறு தோன்றுகின்றன? 

 27. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

 28. மனிதனின் G0 நிலையில் காணப்படும் செல்கள் யாவை?

 29. உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

  பிரிவு சேர்மம்
  கொலஸ்டிராஸ்  குவானைன்
  அமினனோ  அமிலம் NH2
  நியூக்ளியோடைடு அடினைன்
  நியூக்ளியோசைடு யூராசில்
 30. மனித மற்றும் தாவர செல்லில் காணப்படும் நீரின் அளவுகள் யாது?

 31. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

 32. கார்டிகல் நெஃப்ரான்கள் என்பது யாது?

 33. டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?

 34. சேண  மூட்டு என்பது யாது? 

 35. மனிதரின்  கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?  

 36. டூயூராமேட்டர் கீழ் இடைவெளி என்றால் என்ன?

 37. உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக. 

 38. தாது கலந்த கார்டிகாய்டு ஹார்மோன் பற்றி குறிப்பு வரைக.

 39. தேனீக்களின் மூவகை சமூக கட்டமைப்பின் பெயர்களை கூறு 

 40. வோல்டினிசம் என்றால் என்ன? அவை யாவை? 

 41. ஸ்கிலிரன்கைமா  மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

 42. அகத்தோல் என்றால் என்ன?

 43. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

 44. பெரிடர்ம் என்றால் என்ன?

 45. தாவரத்தில் சுக்ரோஸினை பெறும் ஒளிச்சேர்க்கை செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.

 46. இலைத்துளையின்  அமைப்பு பற்றி எழுதுக.

 47. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

 48. அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?

 49. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

 50. சாந்தோஃபில்கள் பற்றி எழுதுக.

 51. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?  

 52. பைருவேட் ஆக்ஸிஜனேற்றம் என்றால் என்ன?

 53. வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?       

 54. விவசாயத்தில் ஏத்திலினின் பங்கு யாது?      

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology - Important 2 mark questions )

Write your Comment