11th Biology - Important 3 mark questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 90
    Answer any 30 of the following questions
    30 x 3 = 90
  1. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  2. இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?

  3. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

  4. வட்டவாயின வகுப்பைச் சார்ந்த விலங்குகளில் இனப்பெருக்கத்தில் காணப்படும் சிறப்பு பண்ணப்பு யாது?

  5. மீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து

  6. அடிபோஸ் திசு என்பது யாது?

  7. தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக. 

  8. தவளையின் பால் வழி வேறுபாட்டு தன்மைகள் எப்பொழுது தெளிவாகக் காணப்படும்? அவைகள் யாவை?

  9. ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.

  10. வயிற்றுப்போக்கு என்பது யாது?

  11. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

  12. மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?

  13. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  14. எந்த சிரையில்  யூரியா அதிகமாக இருக்கும். ஏன்?

  15. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.

  16. ஐந்து உலக வகைப்பாட்டின் குறைக்கள் யாவை?

  17. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  18. பிரையோஃபைட்கள் வாஸ்குல திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் என அழைக்கக் காரணம் யாது?

  19. முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?   

  20. கைரை மற்றும் சல்சி இவற்றை வேறுபடுத்துக்க. அவற்றின் பணியைக் குறிப்பிடுக.

  21. இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும். 

  22. அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன் செயல்பாடுகளைக் குறிப்பிடுக.

  23. ஷெல்லாக்கின் பயன்களில் ஏதேனும் மூன்றை வரிசைப்படுத்துக

  24. மண்புழு உரம் குறிப்பு வரைக.

  25. வழிசெல்கள் பற்றி எழுதுக.

  26. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்? 

  27. நுனி மற்றும் பக்க அக்குத்திசு பற்றி எழுதுக.

  28. சாறேற்றம் என்றால் என்ன?

  29. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  30. பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.

  31. உருமாறும் தன்மை என்றால் என்ன?

  32. மூப்படைதல் என்றால் என்ன?    

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் -3 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology - Important 3 mark questions )

Write your Comment