காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு _______ ஆகும்.

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  2. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது? 

    (a)

    நகர்வதற்கான உறுப்புகள் இல்லை. 

    (b)

    செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது 

    (c)

    உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை    

    (d)

    ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.    

  3. கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு _______.

    (a)

    வளைத் தசைப் புழுக்கள்   

    (b)

    முட்தோலிகள் 

    (c)

    கணுக்காலிகள் 

    (d)

    குழியுடலிகள் 

  4. தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது

    (a)

    பைசாலியா

    (b)

    ஆடம்சியா

    (c)

    பென்னாட்டுலா

    (d)

    மியான்ட்ரினா

  5. எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.

    (a)

    உணவுக் குழல்

    (b)

    மூச்சுக் குழல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்

  6. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.

    (a)

    இறுக்கமான சந்திப்புகள்

    (b)

    ஒட்டும் சந்திப்புகள்

    (c)

    இடைவெளி சந்திப்புகள்

    (d)

    மீள் தன்மை சந்திப்புகள்

  7. மண்புழுவைப் பற்றிய கீழ்கண்ட வாக்கியத்தில் தவறானதை கண்டுபிடி

    (a)

    உணவுகுழல் மேல் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (b)

    உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (c)

    முதுகுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.

    (d)

    வயிற்றுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

  8. தவளையின் கண்களைப் பாதுகாப்பது

    (a)

    மேல் இனம்

    (b)

    கீழ் இமை

    (c)

    நிக்டிடேடிவ் சவ்வு

    (d)

    இவை அனைத்தும்

  9. கோழையைச் சுரக்கும் செல்கள் எவை?

    (a)

    முதன்மை செல்கள்

    (b)

    பெப்ட்டிக் செல்கள் 

    (c)

    சைமோஜன் செல்கள் 

    (d)

    கோப்பை வடிவ செல்கள்

  10. உணவிலுள்ள ஸ்டார்ச்சை சிதைப்பது

    (a)

    லிபேஸ்

    (b)

    பெப்ஸின்

    (c)

    அமைலேஸ்

    (d)

    லாக்டேஸ்

  11. ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது

    (a)

    Na+

    (b)

    K+

    (c)

    CI-

    (d)

    HCO3-

  12. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

    (a)

    இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

    (b)

    இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

    (c)

    இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

    (d)

    இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால் 

  13. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ  நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?

    (a)

    A-

    (b)

    AB

    (c)

    O+

    (d)

    O-

  14. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.

    (a)

    லைகேஸ்சுகள் 

    (b)

    லையேஸ்கள் 

    (c)

    ஹைட்ரோலேசுகள்

    (d)

    ஐசோமியரேசுகள்

  15. கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

    (a)

    சிலிக்கேட்டுகள்

    (b)

    தாது உப்புகள்

    (c)

    கால்சியம் கார்பனேட் 

    (d)

    கால்சியம் ஆக்சலேட்

  16. 6 x 2 = 12
  17. எண்ணிக்கை அடிப்படையிலான வகைப்பாடு என்பது யாது?

  18. தங்களது கருவளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பி கருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகளைப் பட்டியலிடு.

  19. திசுக்கள் ஏதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?

  20. பைலோரிக் சுருக்குத் தசையின் வேலை யாது?

  21. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

  22. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  23. 6 x 3 = 18
  24. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

  25. ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும். 

  26. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

  27. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.

  28. ஏமைட்டாசிஸ் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் மறுபெயர் யாது?

  29. நிகர அழுத்தமே சிறுநீரக நுண் வடிகட்டுதல் நிகழ்வுக்கு காரணமாக அமைகிறது. விளக்குக.

  30. 5 x 5 = 25
  31. கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

    அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
    ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
    இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
    ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
    உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
    ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?

  32. தவளையின் செரிமான மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

  33. திசு வேதியலில் பயன்படுத்தப்படும் சாயங்கள் எவை ?  

  34. DNA-வின் பண்பினை எழுது

  35. B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.    

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Biology Quarterly Model Question Paper )

Write your Comment