11th Biology Volume1-One mark test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 85

  மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் சேர்த்து எழுதுக:

  85 x 1 = 85
 1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

  (a)

  இனப்பெருக்கம் 

  (b)

  வளர்ச்சி

  (c)

  வளர்சிதை மாற்றம் 

  (d)

  இடப்பெயர்ச்சி 

  (e)

  கொடுக்கப்பட்ட அனைத்தும்

 2. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

  (a)

  பிரைமேட்டா  

  (b)

  ஆர்த்தோப்டீரா   

  (c)

  டிப்டிரா  

  (d)

  இன்செக்டா   

 3. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?  

  (a)

  வளர்சிதைமாற்றத்தைக் கொண்டுள்ளன  

  (b)

  நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும் 

  (c)

  DNA அல்லது RNA -வை கொண்டுள்ளன. 

  (d)

  நொதிகள் காணப்படுகின்றன  

 4. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.  

  (a)

  டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை  

  (b)

  செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.   

  (c)

  செல்சுவர் ஓரடுக்கல் ஆனது 

  (d)

  லீப்போபாலிசாக்கரைட்டுகள் கொண்ட செல்சுவர்      

 5. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது? 

  (a)

  நகர்வதற்கான உறுப்புகள் இல்லை. 

  (b)

  செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது 

  (c)

  உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை    

  (d)

  ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.    

 6. எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம்  கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?      

  (a)

  வளைத்தசைப் புழுக்கள்

  (b)

  துளையுடலிகள் 

  (c)

  கணுக்காலிகள் 

  (d)

  முட்தோலிகள் 

 7. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

  (a)

  சலமான்டர்   

  (b)

  தவளை 

  (c)

  தண்ணீர் பாம்பு 

  (d)

  மீன்

 8. நான்கு அரை இதயம் இதில் காணப்படும். 

  (a)

  பல்லி 

  (b)

  பாம்பு 

  (c)

  தேள் 

  (d)

  முதலை 

 9. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.  

  (a)

  மனிதர்கள் -யூரியோடெலிக்   

  (b)

  பறவைகள் -யூரியோடெலிக்   

  (c)

  பல்லிகள் -யூரிகோடெலிக்   

  (d)

  திமிங்கலம் - அம்மோனோடெலிக்   

 10. ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது

  (a)

  புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.

  (b)

  புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது

  (c)

  மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது

  (d)

  தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்

 11. உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது

  (a)

  உடற்குழி திரவம்

  (b)

  போலி உடற்குழி திரவம்

  (c)

  இரத்தம்

  (d)

  நிணநீர்

 12. கீழ்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

    விலங்கு தொகுதி பண்புகள்
  I பிளாட்டிஹெல்மின்தஸ் a. உயிரொளிர்தல்
  II அன்னலிடா b. மெட்டாஜெனிசிஸ்
  III. நிடோரியா c. மெட்டாமெரிசம்
  IV. டினோஃபோரா d. சுடர் செல்கள்
  (a)
  I II III IV
  a b d c
  (b)
  I II III IV
  d c b a
  (c)
  I II III IV
  b d c b
  (d)
  I II III IV
  c a b d
 13. கீழ்க்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

    தொகுதி கழிவு நீக்க உறுப்பு
  I கணுக்காலிகள் a. தொண்டை சுரப்பி
  II பிளாட்டிஹெல்மின்தஸ் b. நெஃப்ரீடியம்
  III மெல்லுடலிகள் c. பச்சை சுரப்பி
  IV ஆஸ்ஹெல்மின்தஸ் d. சுடர் செல்கள்
  (a)
  I II III IV
  a b c d
  (b)
  I II III IV
  b c a d
  (c)
  I II III IV
  c d b a
  (d)
  I II III IV
  d a b c
 14. வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.

  (a)

  பாலூட்டிகள்

  (b)

  பறப்பன

  (c)

  ரெப்டிலியா

  (d)

  இருவாழ்விகள்

 15. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்

  (a)

  தோல்

  (b)

  செரிப்புபாதை

  (c)

  பித்தப்பை

  (d)

  மூச்சுக்குழல்

 16. பயன்படுத்தப்படாத அதிகப்படியான உணவுப்பொருட்களை கொழுப்பாக மாறி இங்கு சேமித்து வைக்கப்படுகிறது

  (a)

  சுரப்பு எபிதீலியம்

  (b)

  அடிபோஸ் திசு

  (c)

  ரெட்டிகுலார் திசு

  (d)

  ஏரியோலார் திசு

 17. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சி்றப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது.

  (a)

  13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

  (b)

  14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

  (c)

  12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

  (d)

  14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

 18. மண்புழுக்களின் பால் தன்மை  

  (a)

  தனிப்பால் உயிரிகள் 

  (b)

  இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை  

  (c)

  சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் 

  (d)

  கன்னி இனப்பெருக்க உயிரிகள் 

 19. கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.

  (a)

  முப்பரிமாணம்

  (b)

  இருபரிமாணம்

  (c)

  மொசைக்  

  (d)

  கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.

 20. மண்புழுவில் உடற்குழி திரவத்தின் பயன்கள் இவைகள் இதனைத்தவிர

  (a)

  உடற்குழியை நிரப்புகிறது

  (b)

  உடலினை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது.

  (c)

  நீர்மச்சட்டமாக செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்கு உதவுகிறது.

  (d)

  இழப்பு மீட்டல். நொஇத்டடைக்காப்பு மற்றும் காயங்கள் குணமாதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

 21. மண்புழுவின் தோல்  ஈரப்பதத்துடன் காணப்படும் அதற்கான காரணம்

  (a)

  சுவாசித்தலுக்கு

  (b)

  இடப்பெயர்ச்சிக்கு

  (c)

  வளைகளை ஏற்படுத்த

  (d)

  கழிவு நீக்கத்திற்கு

 22. மண்புழுவின் மூளை எனப்படுவது

  (a)

  தொண்டைமேல் நரம்பு செல்

  (b)

  தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்

  (c)

  தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்

  (d)

  மைய நரம்பு மண்டலம்

 23. தரமான தொழு உரங்களை கீழ்கண்ட இந்த மண்புழு தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கலாம்.

  (a)

  வெர்மிகம்போஸ்டிங்

  (b)

  வாம்பின்

  (c)

  மண்புழு வளர்ப்பு

  (d)

  மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் தயாரிப்பு

 24. கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.

  (a)

  புரதம்

  (b)

  கியூட்டின்

  (c)

  செல்லுலோஸ்

  (d)

  கைட்டின்

 25. ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

  (a)

  கல்லீரல் - கணைய நாளம்

  (b)

  பொதுப் பித்த நாளம்

  (c)

  கணைய நாளம்

  (d)

  சிஸ்டிக் நாளம்

 26. சரியான இணைகளை உருவாக்குக

  வரிசை –I வரிசை –II 
  P) சிறுகுடல் i) 23 செ.மீ
  Q)பெருகுடல் ii) 4 மீட்டர்
  R) உணவுக்குழல் iii) 12.5 செ.மீ
  S)தொண்டை iv) 1.5 மீ
  (a)

  ( P- iv ) ( Q- ii) ( R- i ) ( S- iii )

  (b)

  ( P- ii ) (Q- iv ) ( R- i ) ( S- iii )

  (c)

  ( P- i ) ( Q- iii ) ( R- ii ) (S- iv )

  (d)

  ( P- iii) ( Q- i ) ( R- ii ) ( S- iv )

 27. குடலுறிஞ்சி பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடவும்

  (a)

  குடல்நுண்ணூறுஞ்சிகளை கொண்டுள்ளன

  (b)

  இவை புறப்பரப்பை அதி்கரிக்கின்றன

  (c)

  இவற்றில் இரத்த நுண்நாளங்களும் நிணநீர் குழல்களும் உள்ளன

  (d)

  இவைகொழுப்பு செரித்தலில் பங்கேற்கின்றன

 28. உணவை விழுங்கும் செய்யலின்போது, மூச்சுக்குழலுக்குள் உணவு சென்றுவிடாமல் தடுப்பது.

  (a)

  கல்லட் 

  (b)

  கிளாஸ்டிஸ்

  (c)

  எப்பிகிளாட்டிஸ்

  (d)

  டான்சில்கள்

 29. கோழையைச் சுரக்கும் செல்கள் எவை?

  (a)

  முதன்மை செல்கள்

  (b)

  பெப்ட்டிக் செல்கள் 

  (c)

  சைமோஜன் செல்கள் 

  (d)

  கோப்பை வடிவ செல்கள்

 30. வைட்டமின் B12 ஐ உட்கிரகிக்கத் தேவையான காசிலின் உள்ளமைக் காரணியை சுரப்பது 

  (a)

  பெரைட்டல் செல்கள்

  (b)

  கல்லீரல் செல்கள் 

  (c)

  உமிழ்நீர்ச் சுரப்பி

  (d)

  குடல் உறிஞ்சிகள்

 31. கீழ்க்கண்டவைகள் அனைத்தும் கல்லீரலின் பணிகளாகும். இதனைத் தவிர.

  (a)

  யூரியாவை உற்பத்தி செய்கிறது.

  (b)

  வயதான பழுதுபட்ட இரத்த செல்களை அழிக்கிறது

  (c)

  அவசியமான அமினோ அமிலத்தை உற்பத்தி செய்கிறது

  (d)

  கிளைக்கோஜனை சேமிக்கிறது. 

 32. கொழுப்பின் கலோரி மதிப்பு _______________ கி.கலோரிகள்/ கிராம்

  (a)

  9.45

  (b)

  9

  (c)

  4.1

  (d)

  5.65

 33. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

  (a)

  கண்

  (b)

  சிறுநீரகம்

  (c)

  தோல்

  (d)

  கல்லீரல்

 34. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் 

  (a)

  சிக்மாய்டு 

  (b)

  நேர்க்கோடு 

  (c)

  வளைந்தது 

  (d)

  நீள்சதுர மிகை வளைவு 

 35. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை 

  (a)

  கார்பானிக் அமிலம் 

  (b)

  ஆச்சிஹீமோகுளோபின் 

  (c)

  கர்பமினோஹீமோகுளோபின் 

  (d)

  கார்பாக்சி ஹீமோகுளோபின் 

 36. பத்தி I இல்நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு

  பத்தி- I பத்தி-II
  P) ஆஸ்துமா i) அடிக்கடி உருவாகும்
  மார்புசளி
  Q) எம்ஃபைசீமா ii) கா ற்று
  நுண்ணறைகளில்
  வெள்ளையணுக்கள்
  குழுமுதல்
  R) நிமமோனியா iii) ஒவ்வாமை
  (a)

  P = iii Q = ii R = i

  (b)

  P=iii Q = i R = ii

  (c)

  P=ii Q = iii R = i

  (d)

  P=ii Q = i R = iii

 37. மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________

  (a)

  தொண்டை

  (b)

  மூச்சுக்குழல்

  (c)

  காற்று நுண்ணறை

  (d)

  மூச்சுக்கிளை நுண்குழல்

 38. இதனுடன் O2 இணைவதில்லை.

  (a)

  ஆக்ஸிஹீமோகுளோபின் 

  (b)

  கார்பாக்ஸி ஹீமோகுளோபின்

  (c)

  கார்பமினோ ஹீமோகுளோபின் 

  (d)

  மெட் ஹீமோகுளோபின்

 39. இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் அயனியின் அளவுகளை உணரும் பகுதி எது?  

  (a)

  சுவாச சீரியக்க மையத்தின் அருகில் காணப்படும் வேதி உணர்வுப்பகுதி

  (b)

  தமனி வளைவு

  (c)

  தலைத்தமனி

  (d)

  இவை அனைத்தும்

 40. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான மலையில் நீண்ட காலமாக வாழும் மனிதனில் ஏற்படும் மாற்றம்

  (a)

  சுவாசவீதம் அதிகரிக்கிறது

  (b)

  சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது 

  (c)

  உடல் வெப்பநிலை குறைகிறது

  (d)

  இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

 41. நுரையீரல்கள் மற்றும் எழும்புகளைப் பாதிக்கும் நோய் 

  (a)

  எம்ஃபைசீமா

  (b)

  காசநோய்

  (c)

  நிமோனியா

  (d)

  ஆஸ்துமா

 42. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்

  (a)

  நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்

  (b)

  திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்

  (c)

  திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்

  (d)

  எவ்வித மாற்றமும் நிகழவில்லை

 43. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

  (a)

  50

  (b)

  100

  (c)

  150

  (d)

  400

 44. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது

  (a)

  மென்மையான தசைகள் இல்லாமை

  (b)

  வால்வுகள் இருப்பதால்

  (c)

  சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்

  (d)

  மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.

 45. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?

  (a)

  அல்புமின் 

  (b)

  குளோபுலின் 

  (c)

  ஃபைப்ரினோஜன் 

  (d)

  புரோத்ராம்பின் 

 46. இரத்தம் உறைதலை ஆரம்பிப்பது எது?

  (a)

  இரத்தக் குழாயிலுள்ள எண்டோதீலியம் சிதைவடைவது 

  (b)

  கொல்லஜன் இழைகள் தோன்றுவது 

  (c)

  ஃபைப்ரின் தோன்றல் 

  (d)

  ஹிப்பாரின் தோற்றம் 

 47. அனோஸ்டாமோசிஸ் என்பது 

  (a)

  நுண்தமனி இரத்தக்குழாய்களும், நுண் சிறைகளும் இணைவது 

  (b)

  கீழ் பெருஞ்சிரையும் மேல் பெருஞ்சிரையும் இணைவது 

  (c)

  நுரையீரல் தமனியும் நுரையீரல் சிரையும்  இணைவது 

  (d)

  சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது 

 48. சிரை இரத்தக் குழாய்களில் காணப்படும் வால்வு எது?

  (a)

  மூவிதழ் வால்வு 

  (b)

  ஈரிதழ் வால்வு 

  (c)

  அரிச்சந்திர வால்வு 

  (d)

  மிட்ரல் வால்வு 

 49. மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ  பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.

  (a)

  60

  (b)

  70

  (c)

  80

  (d)

  90

 50. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக

  (a)

  ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்புநோய்

  (b)

  மைக்கோ பிளாஸ்மா-கழலைத் தாடதாடை நோய்

  (c)

  பாக்டீரியங்கள்- நுனிக்கழலை நோய்

  (d)

  பூஞ்சைகள்- சந்தனக் கூர்நுனி நோய்

 51. ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட  ஃபாஜ் DNA ஆகும்.    

  (a)

  செல்சுவர் 

  (b)

  குரோமோசோம் 

  (c)

  DNA 

  (d)

  உட்கரு 

 52. பாக்டீரியவிரிடின் எனும் நிறமி இந்த பாக்டீரியாவில் காணப்படுகிறது.

  (a)

  பசும் கந்தக பாக்டிரீயா

  (b)

  இளஞ்சிவப்பு கந்தக  பாக்டிரீயா

  (c)

  இளஞ்சிவப்பு கந்தகம்சாரா  பாக்டிரீயா

  (d)

  கந்தக  பாக்டிரீயா     

 53. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியம் எது?

  (a)

  லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

  (b)

  லாக்டோபேசில்லஸ் அசிடோஃபோபஸ்

  (c)

  லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ்

  (d)

  ஸ்ட்ரெப்கோகாக்கஸ் லாக்டிஸ்

 54. N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
  (I) பாக்டீரியா  
  (II) பூஞ்சைகள்
  (III) மைக்கோபிளாஸ்மா 
  (IV) தாவரசெல்           

  (a)

  I,III

  (b)

  II,III

  (c)

  III,IV

  (d)

  I,II

 55. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது

  (a)

  முன்உடலம்

  (b)

  உடலம்

  (c)

  கூம்பு

  (d)

  வேர்த்தாங்கி

 56. எம்பிரியோஃபைட்டாதாவர பிரிவில் வகைப்படுத்த பட்டுள்ளவைகள்.

  (a)

  ஜிம்னோஸ்பெர்மே மற்றும் ஆஞ்சியோஸ்பெர்மே

  (b)

  டெரிடோஃபைட்டா மற்றும் டிரக்கியோஃபைட்டா

  (c)

  பிரையோஃபைட்டா மற்றும் டிரக்கியோஃபைட்டா

  (d)

  கிரிப்டோகேமே மற்றும் பெனரோகேமே

 57. பொருத்துக: பாசிகளை அதனுடைய வாழிடத்தோடு பொருத்துக.

  வ.எண் பாசிகள்    வாழிடம் 
  I. குளோரெல்லா  a.  மெல்லுடலிகளின் ஓடுகள் 
  II. கிரிஸ்பேட்டா  b.  நிலம் 
  III. டுனாலியல்லா சலைனா c. ஹைட்ராவில் அக உயிரி 
  IV. வவுச்சீரியா  d. உப்பளம்  
  (a)

  I.b,II.d,III.c,IV.a

  (b)

  I.c,II.a,III.d,IV.b

  (c)

  I.d,II.b,III.c,IV.a

  (d)

  I.a,II.b,III.d,IV.c

 58. சைக்கஸ் தாவரத்தில் காணப்படும் பவழவேர்கள் ____________உடன் ஒருங்குயிரி வாழ்க்கை மேற்கொள்கிறது?

  (a)

  சயனோபாக்டீரியா 

  (b)

  மைக்கோபிளாஸ்மா 

  (c)

  ஆக்டினோமைசீட்ஸ்   

  (d)

  பூஞ்சைகள் 

 59. இவை அடர்த்தியான, சதைப்பற்றுள்ள, குறிப்பிட்ட வடிவமற்ற வேர்களாகும்.

  (a)

  முடிச்சு வேர்கள்

  (b)

  கிழங்கு வேர்கள் 

  (c)

  மணி வடிவ வேர்கள்

  (d)

  தொகுப்பு வேர்கள்

 60. பிஸ்டியா, ஐக்கோர்னிய போன்றத் தாவரங்களின் வேர்களில் _____ காணப்படுகிறது.

  (a)

  வேர்மூடி

  (b)

  வேர் முடிச்சுகள்

  (c)

  வேர் தூவிகள்

  (d)

  வேர்ப்பைகள்

 61. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

  (a)
  வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
  அ. முடிச்சு வேர்கள் குர்குமா அமாடா
  (b)
  வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
  ஆ. மணிமாலை வேர்கள் வைடிஸ்
  (c)
  வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
  இ. வளைய வேர்கள் ருயில்லா
  (d)
  வ.எண் வேற்றிட வேர் வகை எடுத்துக்காட்டு
  ஈ. தொகுப்பு வேர்கள் அஸ்பராகஸ்
 62. பொருத்துக: இன்றியமையா பணி வேர்களின் வகைகளை அவை காணப்படும் தாவரங்களோடு பொருத்துக.

  வ.எண் வேர்களின் வகை எடுத்துக்காட்டு
  I ஒளி ச்சேர்க்கை வேர்கள் a. கஸ்கியூட்டா
  II. தொற்றுவேர்கள் b. டைனோஸ்போரா
  III. இலைவேர்கள் c. வாண்டா
  IV. ஒட்டுண்ணி வேர்கள் d. பிரையோஃபில்லம்
  (a)

  I, b, II, c, III. a, IV. d

  (b)

  I, b, II, c, III. d, IV. a

  (c)

  I, c, II, c, III. a, IV. d

  (d)

  I, d, II, c, III. c, IV. b

 63. இலை அதைப்பு என்பது லெகூம் வகைத் தாவரங்களின் இலைகள் _____ 

  (a)

  தண்டோடு இணைந்து உள்ள பகுதி

  (b)

  கணுக்களை உருவாக்கும் பகுதி

  (c)

  இலையடி உறைபோன்று தண்டினை சூழ்ந்து காணப்படுவது

  (d)

  இலையடிப் பகுதி அகன்றும், பருத்தும் காணப்படுவது

 64. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது

  (a)

  பல இணையாச் சூலகஇலை சூலகப்பை

  (b)

  பல இணைந்த சூலகஇலை சூலகப்பை

  (c)

  பல சூலகஇலை சூலகப்பை

  (d)

  முழு மஞ்சரி

 65. தனி டைக்கேஷியம் வகை மஞ்சரியில் காணப்படும் மலர்களின் எண்ணிக்கை 

  (a)

  3

  (b)

  5

  (c)

  6

  (d)

  8

 66. இத்தாவரத்தில் கனி உருவாகும்போது புல்லிவட்டம் தொடர்ந்து வளர்ந்து கனியை முழுவதும் அல்லது பகுதியை மூடியிருக்கும்.

  (a)

  கத்தரி 

  (b)

  நிலம்போ 

  (c)

  பைசாலிஸ் 

  (d)

  பப்பாவர் 

 67. பொய்க்கனியான பலாவில் உண்ணும் பகுதி, மலரின் __________ ஆகும்.

  (a)

  சூற்பை 

  (b)

  பூத்தளம் 

  (c)

  பூவிதழ்கள் 

  (d)

  பூவடிச் செதில்கள் 

 68. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

  (a)

  ஹோலோடைப் 

  (b)

  நியோடைப்

  (c)

  ஐசோடைப்

  (d)

  பாராடைப்

 69. கரோலஸ் லின்னேயஸின் இறங்கு வரிசை வகைப்பாடு படி நிலைகளின், சரியாக உள்ளதை குறிப்பீடு.          

  (a)

  துறை \(\rightarrow \) வகுப்பு\(\rightarrow \)பெரும்பிரிவு\(\rightarrow \)பிரிவு பேரினம் \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) குடும்பம் 

  (b)

  பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)  சிற்றினம் \(\rightarrow \) வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பெரும்பிரிவு   

  (c)

  குடும்பம் \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)பெரும்பிரிவு

  (d)

  பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) குடும்பம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) சிற்றினம் 

 70. பாலினபெருக்கம் செய்யும் உயிரினங்களில் இவை இயற்கையில் தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் திறன் பெற்றவை              

  (a)

  பேரினம் 

  (b)

  துறை 

  (c)

  சிற்றினம்     

  (d)

  குடும்பம் 

 71. பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் துணை வகுப்பு அல்லி தனித்தவையின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ள வரிசை             

  (a)

  பூத்தளக் குழுமம்    

  (b)

  பூத்தட்டுக் குழுமம்     

  (c)

  கோப்பை வடிவ பூத்தளக் குழுமம்    

  (d)

  இவை அனைத்தும் 

 72. தாவரிங்களில் வரி குறியடுதலுக்குப் பயன்படுத்தக் கூடிய பயனுள்ள ஜின் பகுதியான mat k ,vbe L _____ இரண்டு மரபணுக்களில் உள்ளது.        

  (a)

  மைட்டோகாண்ட்ரியா      

  (b)

  பசுங்கணிகம்   

  (c)

  உட்கரு 

  (d)

  குரோமோசோம் 

 73. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?

  (a)

  பிளாஸ்மா சவ்வு

  (b)

  சைட்டோஸ்கெலிட்டன்

  (c)

  மைட்டோகாண்டிரியா

  (d)

  கணிகங்கள்

 74. பொறுத்துக .பகுதி I ல் உள்ளவைகளுக்கு பகுதி II ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உண்டு.

  பகுதி I  பகுதி II 
  I . முதன்மை உருப்பெருக்கம்    a . கண்ணீருக்கு லென்ஸ் மூலம் 
  II . இரண்டாம் நிலை உருப்பெருக்கம்  b . பொருளருகு லென்ஸ் மூலம்  
    c . தலைகிழானா பிம்பம்      
  d . மெய்பிமபம் தோன்றுகிறது   
  e .உண்மையான பிம்பம் தோன்றுகிறது        
  f . மாயபிம்பம் தோன்றுகிறது     
  (a)
  I b d e
  II a c f
  (b)
  I b d e f
  II a c
  (c)
  I b e d
  II a c f
  (d)
  I e d f
  II a b c
 75. வழவழப்பான எண்டோபிளாசா வலையின் பணியல்ல     

  (a)

  தீமை விளைவிக்கும் சில வேதிச் சேர்மங்களை நொதிகள் மூலம் நீக்குகிறது     

  (b)

  லிப்பிடில் கரையும் மருந்துப் பொருட்களை நொதிகள் மூலம் நீக்குகிறது.    

  (c)

  நச்சுப் பொருட்களை நீக்க உதவும் நொதிகளைப் பெற்று இருக்கிறது.    

  (d)

  புரதச் சேர்க்கை நடைபெறும் இடமாக உள்ளது  

 76. புரதம் மொழி பெயர்பிற்குப் பின் புரத மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழ _________ உதவுகின்றன.    

  (a)

  ரைபோசோம்கள் 

  (b)

  எண்டோபிளாசா வலை  

  (c)

  கோல்கை உடலம்  

  (d)

  லைசோசோம்   

 77. ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்டுள்ள இந்து நுண் ணுறுப்பு எண்ணெய் விதிகளில் உள்ள கருவுன் செல்களில் கொழுப்பு பொருளை சேமிக்கிறது.     

  (a)

  ஸ்ஃபீரோசோம்கள்     

  (b)

  கிளையாக்ஸிசோம்கள்     

  (c)

  பெராக்ஸிசோம்கள்     

  (d)

  நுண் உடலங்கள் 

 78. யூகேரியோட்டிக் குரோமோசோமில் (DNA) எந்த நிலையில் mRNA எடுத்தால் நடைபெறுவதில்லை         

  (a)

  இடைக்கால நிலை 

  (b)

  பகுப்பிடைக்காலம்     

  (c)

  அனாஃபேஸ்    

  (d)

  டீலோஃபேஸ்    

 79. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

  (a)

  டிப்ளோட்டீன்

  (b)

  பாக்கிடீன்

  (c)

  லெப்டோட்டீன்

  (d)

  சைக்கோட்டீன்

 80. மைட்டாசிஸ் என்ற பதத்தை உருவாக்கியவர் இவர். மேலும் இவர் குரோமோசோம்களின் செயல்பாட்டை விளக்கினார்.

  (a)

  தியோடர் போவிரி

  (b)

  வாழ்த்தார் பிளம்மிங் 

  (c)

  எட்வர்ட் வான் பெனிடென்

  (d)

  இராபர்ட் பிரௌன் 

 81. மனிதனில் G0 நிலையில் நிலைத்துக்காணப்படும் செல்கள் யாவை?
  (I) எபிதீலிய செல்கள்
  (II) முதிர்ந்த நியூரான்கள்
  (III) இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
  (IV) எலும்புத்தசை செல்கள்

  (a)

  I, III

  (b)

  II, IV 

  (c)

  I, III

  (d)

  III, IV

 82. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்

  (a)

  சைட்டோகுரோமில் சையனைடு வினை

  (b)

  ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை

  (c)

  குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது

  (d)

  சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது

 83. கீழ்க்கண்ட வாக்கியங்களின் சரியானவற்றை தேர்ந்தெடு.
  (I) வைட்டமின்கள் A,B மற்றும் C ஆகியவை முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்களாகும்
  (II) புரோமின்,லியூசின் ஆகியவை இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களாகும்.
  (III) கரோட்டினாய்டுகள் மற்றும் ஆந்தோசயனின்கள் நிறமிகளாகும்.
  (IV)அபரின், ரைசின் ஆகியவை நச்சுப் பொருட்களாகும்.

  (a)

  I,III  

  (b)

  II,IV  

  (c)

  I,II  

  (d)

  III,IV   

 84. இரட்டைச்சாக்கரைடு தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்கள் யாவும் சரியானது.இதனைத் தவிர அதாவது குளுக்கோஸ் மூலக்கூறும், பிரக்டோஸ் மூலக்கூறும் இணையும் பொழுது 

  (a)

  நீர் மூலக்கூறு வெளியேற்றப்படுகிறது

  (b)

  கிளைக்கோசைடின் பிணைப்பு ஏற்படுகின்றது.

  (c)

  இரட்டைச் சாக்கரைடின் இனிப்புச் சுவை அதிகரிக்கிறது.

  (d)

  சுக்ரோஸ் எனும் இரட்டைச்சாக்கரைடுஉருவாகிறது.

 85. லிப்பிடுகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கரைப்பான்களில் கரையவை இதனைத் தவிர 

  (a)

  ஈத்தர் 

  (b)

  நீர் 

  (c)

  பென்சீன் 

  (d)

  குளோரோஃபார்ம்    

*****************************************

Reviews & Comments about 11th Biology Volume1-One mark test

Write your Comment