தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.
    வசந்தகாலத்தில் கேம்பியம்
    (i) குறைவான செயல்பாடு கொண்டது.
    (ii) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன.
    (iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.

    (a)

    (i) சரியானது ஆனால் (ii) & (iii) சரியானவையல்ல

    (b)

    (i) சரியானதல்ல ஆனால் (ii) & (iii) சரியானவை

    (c)

    (i) & (ii) சரியானவை ஆனால் (iii) சரியானதல்ல

    (d)

    (i) & (ii) சரியானவையல்ல ஆனால் (iii) சரியானது

  2. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால் _______.

    (a)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது.

    (b)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை

    (c)

    கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது

    (d)

    அனைத்தும் சரியானவை

  3. முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி _______.

    (a)

    அல்பர்னம்

    (b)

    பாஸ்ட்

    (c)

    கட்டை

    (d)

    டியூரமென்

  4. இருவிதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிபாட்டில் முதல் நிலை சைலம் என்ன?

    (a)

    மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.

    (b)

    நசுக்கப்படும்

    (c)

    நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.

    (d)

    முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

  5. கூற்று-இருவிதையிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சியானது வாஸ்குலக் கேம்பியம், ஃபெல்லோஜெனால் நடைபெறுகிறது.
    காரணம்-வாஸ்குலக் கேம்பியம் முழுவதும் முதல் நிலை தோற்றமாகும்.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

    (b)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு

  6. 6 x 2 = 12
  7. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

  8. தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?

  9. காட்டில், மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும்பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.

  10. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

  11. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

  12. நீ புதிதாக வீடு கட்ட மரக்கட்டைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  13. 1 x 3 = 3
  14. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்? 

  15. 2 x 5 = 10
  16. தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.

  17. ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி Book Back Questions ( 11th Botany - Secondary Growth Book Back Questions )

Write your Comment