உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. நிணநீரின் பணி யாது?

    (a)

    மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

    (b)

    CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

    (c)

    செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

    (d)

    இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

  2. மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?

    (a)

    ஈயோசினோஃபில்

    (b)

    நியூட்ரோஃபில்

    (c)

    பேசோஃபில்

    (d)

    மானோசைட்

  3. இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?

    (a)

    ஃபைப்ரின்

    (b)

    கால்சியம்

    (c)

    இரத்தத் தட்டுகள்

    (d)

    பிலிரூபின்

  4. நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம் ______.

    (a)

    இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால்

    (b)

    இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால்

    (c)

    ஹீமோகுளோபின் இல்லாததால்

    (d)

    இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்

  5. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

    (a)

    A

    (b)

    B

    (c)

    AB

    (d)

    O

  6. இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.

    (a)

    ஆரிக்குலோ – வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்

    (b)

    அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால்

    (c)

    அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்

    (d)

    ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்

  7. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?

    (a)

    வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.

    (b)

    இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது

    (c)

    இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது

    (d)

    இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை.

    (e)

    இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயஸ்டோலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.

  8. கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

    (a)

    நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது 

    (b)

    புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.

    (c)

    நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும் 

    (d)

    நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர்  மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.

  9. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

    (a)

    50

    (b)

    100

    (c)

    150

    (d)

    400

  10. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.

    (a)

    மென்மையான தசைகள் இல்லாமை

    (b)

    வால்வுகள் இருப்பதால்

    (c)

    சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்

    (d)

    மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.

  11. உணவு உண்ட பிறகு, ______ ல் குளுகோஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.

    (a)

    மேற் பெருஞ்சிரை மற்றும் கீழ் பெருஞ்சிரை

    (b)

    கல்லீரல் தமனி 

    (c)

    கல்லீரல் சிரை 

    (d)

    கல்லீரல் போர்ட்டல் சிரை 

  12. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    அல்புமின் 

    (b)

    குளோபுலின் 

    (c)

    ஃபைப்ரினோஜன் 

    (d)

    புரோத்ராம்பின் 

  13. இரத்தச் சிவப்பணுக்கனுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம்

    (a)

    சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில்  காணப்படுவதால் 

    (b)

    சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால் 

    (c)

    சிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால் 

    (d)

    சிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால் 

  14. சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____ 

    (a)

    எலும்பு மஜ்சை  

    (b)

    கல்லீரல் 

    (c)

    தண்டு செல்கள் 

    (d)

    சிறுநீரகம் 

  15. கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்த வெள்ளை அணுக்கள் 

    (c)

    இரத்தத் தட்டுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  16. மனித இரத்த வகை 'O' பிரிவில் காணப்படும் ஆன்டிஜன் எது?

    (a)

    A  ஆன்டிஜன்

    (b)

    B ஆன்டிஜன்

    (c)

    A மற்றும் B ஆன்டிஜன்

    (d)

    ஆன்டிஜன்  இல்லை 

  17. இரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.

    (a)

    இரத்தத் தட்டுகள் 

    (b)

    ஃபைப்ரின் 

    (c)

    புரோத்ரோம்பின் 

    (d)

    வைட்டமின் K 

  18. குடலுறிஞ்சிகளின்  உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது 

    (a)

    குளுக்கோஸ் 

    (b)

    அமினோ அமிலங்கள் 

    (c)

    கொழுப்பு அமிலங்கள் 

    (d)

    வைட்டமின்கள் 

  19. இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது 

    (a)

    மென் தசைச்செல்கள் 

    (b)

    எண்னோதீலியம் 

    (c)

    கொலாஜன் இழைகள் 

    (d)

    இதயத்தசை செல்கள் 

  20. இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?

    (a)

    பெருந்தமனி 

    (b)

    நுரையீரல் தமனி 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கரோனரி தமனி 

  21. இதயத்தின் சுவரில் காணப்படும் நடு அடுக்கு எது?

    (a)

    பெரிகார்டியம் 

    (b)

    எபிகார்டியம் 

    (c)

    மயோகார்டியம் 

    (d)

    எண்டோகார்டியம் 

  22. இதயத்துடிப்பைத் துவங்குவது 

    (a)

    இதயத்தசைகள் 

    (b)

    சைனு ஆரிக்குலால் கணு  

    (c)

    ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் கணு 

    (d)

    ஹிஸ்ஸின் கற்றை 

  23. மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ  பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.

    (a)

    60

    (b)

    70

    (c)

    80

    (d)

    90

  24. மாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால் 

    (a)

    கரோனரி தமனி 

    (b)

    மேற்பெருஞ்சிரை 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கீழ்பெருஞ்சிரை 

  25. ருமாட்டிக் இதய நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டடீரியா  உடலின் இப்பகுதியைத் தாக்குவதால் ஏற்படுகிறது.

    (a)

    இதயம் 

    (b)

    இரத்தக் குழாய்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    தொண்டைப்பகுதி 

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Bio - Zoology Body Fluids and Circulation One Marks Question And Answer )

Write your Comment