செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
  30 x 1 = 30
 1. கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியதைக் குறிப்பிடவும்.

  (a)

  பித்தநீர் கொழுப்பை  பால்மமாக்குகிறது

  (b)

  கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள சேர்க்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்

  (c)

  கணையநீர் லிபிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.

  (d)

  என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது

 2. கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்

  (a)

  ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின்

  (b)

  கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின்

  (c)

  கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்

  (d)

  இன்சுலின் மற்றும் குளுக்கான்

 3. சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.

  (a)

  குளுக்கோஸ்

  (b)

  அமினோ அமிலங்கள்

  (c)

  சோடியம்அயனிகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 4. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது

  (a)

  குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்

  (b)

  இரைப்பை சுவர்

  (c)

  பெருங்குடல்

  (d)

  குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

 5. கொழுப்பு செரிமானத்தின் முதல் படி

  (a)

  பால்மமாதல்

  (b)

  நொதி செயல்பாடு

  (c)

  லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்

  (d)

  அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு

 6. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

  (a)

  பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்

  (b)

  ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்

  (c)

  கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்

  (d)

  உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

 7. சரியான இணைகளை உருவாக்குக

  வரிசை –I வரிசை –II
  P) சிறுகுடல் i) மிகப்பெரிய தொழிற்சாலை
  Q) கணையம்  ii) குளுக்கோஸ் உட்கிரகித்தல்
  R) கல்லீரல் iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல்
  S) பெருங்குடல் iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல்
  (a)

  ( P- iv ) ( Q- iii) ( R- i ) ( S- ii )

  (b)

  ( P- iii ) (Q- ii ) ( R- i ) ( S- iv )

  (c)

  ( P- iv ) ( Q- iii ) ( R- i ) (S- ii )

  (d)

  ( P- ii) (Q-iv ) ( R- iii ) ( S- i )

 8. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

  (a)

  இன்சுலின் உற்பத்தி

  (b)

  நச்சு நீக்கம்

  (c)

  கிளைக்கோஜின் சேமிப்பு

  (d)

  பித்த நீர் உற்பத்தி

 9. அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
  காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது

  (a)

  A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.

  (b)

  A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை.

  (c)

  A சரி ஆனால் R தவறு

  (d)

  A தவறு ஆனால் R சரி

 10. ஹெட்டிரோடான்ட் பல் அமைப்பு என்பது

  (a)

  பற்கள் தாடை எலும்பில் உள்ள குழியினுள் பதிந்துள்ள முறை.  

  (b)

  நான்கு வகையான பற்களைப் பெற்றிருப்பது (வெட்டும், கோரை, முன்கடைவாய், பின்கடைவாய்பற்கள்) 

  (c)

  வாழ்நாளில் இருமுறை பற்கள் முளைக்கும் தன்மை

  (d)

  இருதாடைகளிலும் பற்கள் அமைந்திருக்கும் முறை 

 11. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

  (a)

  கார்டியாக் சுருக்குத் தசை - உணவுகுழலும் இரைப்பையும் இணையுமிடம்

  (b)

  பைலோரிக் சுருக்குத் தசை - இரைப்பையும் முன் சிறு குடலும் இணையுமிடம்

  (c)

  ஓட்டி சுருக்குத் தசை - கல்லீரல் கணைய பொது நாளமும் முன் சிறுகுடல் இணையுமிடம்  

  (d)

  அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டுள்ளது.

 12. ஹாஸ்டிரா இங்கு காணப்படுகின்றன. இவைகள் பைபோன்ற அமைப்புகள்

  (a)

  முன் சிறுகுடல்

  (b)

  இடைச் சிறுகுடல்

  (c)

  பின் சிறுகுடல்

  (d)

  மலக்குடல்

 13. சரியானவற்றைப் பொறுத்துக.

  வ. எண் வரிசை I   வரிசை II
  1 கணையம் a. வார்டனின் நாளம் 
  2. மேலண்ணச் சுரப்பி b. பர்தோலின் நாளம்
  3. நாவடிக் சுரப்பி c. ஸ்டென்சன் நாளம்
  4. கீழ்த் தாடை சுரப்பி d. விர்தங் நாளம் 
  (a)
  1 2 3 4
  d c b a
  (b)
  1 2 3 4
  a c d b
  (c)
  1 2 3 4
  d b a c
  (d)
  1 2 3 4
  e a b d
 14. பர்தோலினின் நாளம் இதனோடு தொடர்புடையது  

  (a)

  கல்லீரல் 

  (b)

  கணையம்

  (c)

  இரைப்பை

  (d)

  நாவடி உமிழ் நீர்ச் சுரப்பி

 15. வைட்டமின் B12 ஐ உட்கிரகிக்கத் தேவையான காசிலின் உள்ளமைக் காரணியை சுரப்பது 

  (a)

  பெரைட்டல் செல்கள்

  (b)

  கல்லீரல் செல்கள் 

  (c)

  உமிழ்நீர்ச் சுரப்பி

  (d)

  குடல் உறிஞ்சிகள்

 16. இழப்பு மீட்டல் பண்பு அதிகம் உள்ள உறுப்பு ____________

  (a)

  இரைப்பை

  (b)

  கணையம்

  (c)

  கல்லீரல்

  (d)

  நாக்கு

 17. கீழ்க்கண்டவைகள் அனைத்தும் கல்லீரலின் பணிகளாகும். இதனைத் தவிர.

  (a)

  யூரியாவை உற்பத்தி செய்கிறது.

  (b)

  வயதான பழுதுபட்ட இரத்த செல்களை அழிக்கிறது

  (c)

  அவசியமான அமினோ அமிலத்தை உற்பத்தி செய்கிறது

  (d)

  கிளைக்கோஜனை சேமிக்கிறது. 

 18. கூற்று:கணையம் ஒரு கூட்டுச் சுரப்பியாகும். காரணம்: கணையத்தில் நாளமுள்ள சுரப்பி பகுதி நொதிகளையும் நாளமில்லா சுரப்பி  பகுதி ஹார்மோன்களையும் சுரக்கிறது. 

  (a)

  கூற்றும் சரி, காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்றும் சரி, காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி, காரணம் தவறு.

  (d)

  கூற்று மற்றும், காரணம் தவறு. 

 19. இது ஒரு அனிச்சை செயலாகும்

  (a)

  பெரிஸ்டால்சிஸ் 

  (b)

  விழுங்குதல்

  (c)

  மெல்லுதல்

  (d)

  உமிழ்நீர் உற்பத்தி 

 20. லாக்டோஸ் குளுக்கோஸ் + X?

  (a)

  மால்டோஸ்

  (b)

  ஃபிரக்டோஸ்  

  (c)

  காலக்டோஸ்

  (d)

  குளுக்கோஸ்

 21. முன் சிறுகுடலில் காணப்படும் உணவின் அமில காரத்தன்மை

  (a)

  pH 1.5

  (b)

  pH 7.8

  (c)

  pH 5

  (d)

  pH 8.8

 22. பெப்ஸின் புரதத்தின் மீது செயல்பட தேவையான ஊடகம்

  (a)

  அமிலத்தன்மை 

  (b)

  காரத்தன்மை

  (c)

  நடுநிலை

  (d)

  எதுவுமில்லை

 23. ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது

  (a)

  Na+

  (b)

  K+

  (c)

  CI-

  (d)

  HCO3-

 24. கைலோ மைக்ரான்கள் என்பது

  (a)

  ஸ்டார்ச் துகள்கள்

  (b)

  பெப்டோன்கள் 

  (c)

  செரிக்காத உணவு

  (d)

  கொழுப்புத் துகள்கள்

 25. உட்கிரகிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்த இரத்த நாளத்தின் மூலம் சிறுகுடலில் இருந்து கல்லீரலை அடைகிறது. 

  (a)

  கல்லீரல் சிரை

  (b)

  கல்லீரல் போர்ட்டல் சிரை 

  (c)

  கல்லீரல் தமனி 

  (d)

  கல்லீரல்போர்ட்டல் தமனி

   

 26. கொழுப்பின் கலோரி மதிப்பு _______________ கி.கலோரிகள்/ கிராம்

  (a)

  9.45

  (b)

  9

  (c)

  4.1

  (d)

  5.65

 27. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

  (a)

  கண்

  (b)

  சிறுநீரகம்

  (c)

  தோல்

  (d)

  கல்லீரல்

 28. பித்தக் கற்கள் எதனால் ஆனது?

  (a)

  பித்த உப்புகள்

  (b)

  பித்த நிறமிகள்

  (c)

  பித்த நீர்

  (d)

  கொலஸ்டிரால்

 29. வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? 

  (a)

  மலச்சிக்கல்

  (b)

  வயிற்றுப்போக்கு

  (c)

  வாந்தி

  (d)

  அஜீரணம்

 30. பாலுவின் உடல் எடை 80 கிலோகிராம் மற்றும் அவருடைய உயரம் 1.7 மீட்டர் ஆகும். அவருடைய உடல் எடைக் குறியீட்டைக் கண்டுபிடி

  (a)

  25.3

  (b)

  27.6

  (c)

  26.4

  (d)

  24.6

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 11th Standard Biology Bio - Zoology - Digestion and Absorption One Marks Question and Answer )

Write your Comment