நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. காதிலுள்ள எப்பகுதி அழுத்த அலைகளைச் செயல்நிலை மின்னழுத்தமாக மாற்றுகிறது?  

    (a)

    செவிப்பறை சவ்வு  

    (b)

    கார்ட்டை உறுப்பு 

    (c)

    நீள் வட்டப் பலகணி(oval window) 

    (d)

    அரைவட்டக் குழல்கள் 

  2. நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடு.     

    (a)

    P=அசிட்டைல் கோலைன் Q=Ca++   

    (b)

    P=அசிட்டைல் கோலைன் Q=Na+   

    (c)

    P=GABA Q=Na+   

    (d)

    P=கோலைன்எஸ்ட்ரேஸ் Q=Ca++     

  3. மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது? 

    (a)

    சிறுமூளை 

    (b)

    பெருமூளை 

    (c)

    முகுளம் 

    (d)

    ஹைப்போதலாமஸ்    

  4. சுவாச மையம் காணப்படுமிடம் ______.

    (a)

    முகுளம் 

    (b)

    ஹைப்போதலாமஸ் 

    (c)

    சிறுமூளை 

    (d)

    தலாமஸ் 

  5. செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது? 

    (a)

    H+ 

    (b)

    K+ 

    (c)

    Na+ 

    (d)

    Ca++ 

  6. கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மீதி மயலின் உறையுடன் தொடர்புடையது.அந்த ஒன்று எது?  

    (a)

    நரம்புத் தூண்டல் விரைவாகக் கடத்தப்படும். 

    (b)

    ரான்வியர் கணு ஆக்ஸான்களில் ஆங்காங்கே இடைவெளிகளை ஏற்படுத்துகின்றன.  

    (c)

    நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல் 

    (d)

    செயல் மின்னழுத்தம் தாவுதல் வழி கடத்தப்படுகிறது. 

  7. கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது? 

    (a)

    எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன. 

    (b)

    இதன் வழித்தொடர்பு பொதுவாக விருப்ப இயக்கமாகும். 

    (c)

    இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.   

    (d)

    இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.

  8. ஆக்ஸான் படலத்திற்கிடையேயான மின்னழுத்தம் ஓய்வு நிலை மின்னழுத்தத்தைவிட அதிக எதிர் மின்தன்மையுடையதாகக் காணப்பட்டால் நியூரான் எந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும்?  

    (a)

    மின்முனைப்பியக்க நீக்கம் 

    (b)

    உச்ச மின்முனைப்பியக்கம் 

    (c)

    மின் முனைப்பியக்க மீட்சி 

    (d)

    குறை மின்முனைப்பியக்கம் 

  9. அதிக கிளைகளுடைய மூளை நரம்பு

    (a)

    செவி நரம்பு

    (b)

    முக்கிளை நரம்பு

    (c)

    வேகஸ்  நரம்பு

    (d)

    முக  நரம்பு

  10. 8 x 2 = 16
  11. குருட்டுப்புள்ளி எனப்படுவது எது?ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?  

  12. தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது.இக்கோட்பாட்டின் பெயர் என்ன?

  13. மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?  

  14. நரம்பு மண்டலம் என்றால் என்ன?

  15. உட்செல் நியூரான்கள்-குறிப்பு வரைக.

  16. இடை நியூரான்கள் என்றால் என்ன?

  17. ரான்வியர் கணு -வரையறு.

  18. எந்நிலைகளில் தூண்டல்கள் கடத்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது?

  19. 5 x 3 = 15
  20. நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?  

  21. நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
     

  22. லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?  

  23. தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து. 

  24. முதல் ஐந்து மூளை நரம்புகளின் பெயர்கள் யாவை?அதன் இயல்பு மற்றும் பணிகள் யாவை?  

  25. 2 x 5 = 10
  26. நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி. 

  27. மூளையின் அமைப்பை படத்துடன் விவரி?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - Bio - Zoology - Neural Control and Coordination Model Question Paper )

Write your Comment