" /> -->

11th Second Revision Test 2019

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  16 x 1 = 16
 1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

  (a)

  இனப்பெருக்கம் 

  (b)

  வளர்ச்சி

  (c)

  வளர்சிதை மாற்றம் 

  (d)

  இடப்பெயர்ச்சி 

  (e)

  கொடுக்கப்பட்ட அனைத்தும்

 2. நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்ற உடற்குழியை உடைய விலங்கு ___________ என அழைக்கப்படுகின்றன.

  (a)

  என்டிரோசீலோமேட்டுகள்

  (b)

  சைசோசீலோமேட்டுகள்

  (c)

  உண்மையான உடற்குழியுடையவைகள்

  (d)

  போலியான உடற்குழி உடையவைகள்

 3. ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

  (a)

  கல்லீரல் - கணைய நாளம்

  (b)

  பொதுப் பித்த நாளம்

  (c)

  கணைய நாளம்

  (d)

  சிஸ்டிக் நாளம்

 4. அனோஸ்டாமோசிஸ் என்பது 

  (a)

  நுண்தமனி இரத்தக்குழாய்களும், நுண் சிறைகளும் இணைவது 

  (b)

  கீழ் பெருஞ்சிரையும் மேல் பெருஞ்சிரையும் இணைவது 

  (c)

  நுரையீரல் தமனியும் நுரையீரல் சிரையும்  இணைவது 

  (d)

  சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது 

 5. வைரஸின் உயிரற்ற பண்பினைக் கன்டுபிடி.   

  (a)

  உறுத்துணர்வு உள்ளவை 

  (b)

  படிகங்களாக்க முடியும் 

  (c)

  திடீர் மாற்றம் அடையும் திறன் 

  (d)

  உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன் 

 6. வேர்கள் என்பவை

  (a)

  கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

  (b)

  கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

  (c)

  மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

  (d)

  மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

 7. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன

  (a)

  குரோட்டலேரியா ஜன்சியா

  (b)

  சைகஸ் ரெவலூட்டா 

  (c)

  சைசர் அரிட்டினம்

  (d)

  கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

 8. யூகேரியோட்டுகளில் காணப்படும் இந்த நுண்ணுறுப்புகள் உள்ளுறை கூட்டுயிர் வாழ்க்கை கோட்பாட்டை உறுதி படுத்துகின்றன.             

  (a)

  லைசோசோம்கள் , ரைபோசோம்கள்     

  (b)

  மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்       

  (c)

  எண்டோபிளாசவலை , கோல்கை உடலம்   

  (d)

  உட்கரு , சென்ட்ரியோல்   

 9. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்

  (a)

  கோலிசிஸ்டோகைனின்

  (b)

  ஆஞ்சியோடென்சின் II

  (c)

  ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

  (d)

  பான்கிரியோசைமின்

 10. முதல் 7 இணை விலா எலும்புகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.

  (a)

  அட்லஸ்

  (b)

  அச்சு முள்ளெலும்பு

  (c)

  தட்டையான மார்பெலும்பு

  (d)

  முள்ளெலும்புகள் விலா எலும்புகள்

 11. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.   

  (a)

  ஒழுங்குப்படுத்துதல் 

  (b)

  உடல் சமநிலை பேணுதல் 

  (c)

  ஒருங்கிணைப்பு 

  (d)

  ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

 12. கூட்டைக் கட்டி முடிக்க _____ ஆகிறது  

  (a)

  ஒழுங்கற்று

  (b)

  ஒழுங்கானதாக

  (c)

  3 நாட்கள் 

  (d)

  10 முதல் 12 நாட்கள்

 13. ______ இறந்த செல்களாகும்.

  (a)

  செல்

  (b)

  எளியத்திசு

  (c)

  இடியோபிளாஸ்ட்கள்

  (d)

  ஸ்கிலிரைடுகள்

 14. சரியானவற்றைப் பொருத்துக.

    தனிமங்கள்   பணிகள்
  A மாலிப்டினம் 1 பச்சையம்
  B துத்தநாகம் 2 மெத்தியோனின்
  C மெக்னீசியம் 3 ஆக்சின்
  D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
  (a)

  A-1 B-3 C-4 D-2

  (b)

  A-2 B-1 C-3 D-4

  (c)

  A-4 B-3 C-1 D-2

  (d)

  A-4 B-2 C-1 D-3

 15. ஆற்றல் மிகுந்த ATP-களை அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியங்கள் உருவாக்குவதால் இவை ________ என அழைக்கப்படுகிறது.

  (a)

  வீரிய சுவாசம்

  (b)

  செல்லின் ஆற்றல் நிலையம் 

  (c)

  பைருவேட் 

  (d)

  ஈஸ்ட் 

 16. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது

  (a)

  எத்தனால்

  (b)

  சைட்டோகைனின்

  (c)

  ABA

  (d)

  ஆக்சின்

 17. 8 x 2 =16
 18. மோனோடைப்பிக் பேரினம் என்பது யாது? எ.கா. தருக.

 19. எலும்பு மீன்களில் காணப்படும் காற்றுப்பைகளின் பயன் யாது?

 20. பெருங்குடலில் உருவாகும் பொருட்கள் யாவை? எவ்வாறு உருவாகிறது? 

 21. விரியான் என்பது யாது? 

 22. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

 23. புளுமோஸ் சூல்முடி என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.

 24. சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?

 25. மேல் நோக்கு கற்றைகள் என்றால் என்ன?

 26. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி

 27. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

 28. ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.

 29. ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக. 

 30. 6x 3 = 18
 31. பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை்பாதை்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.

 32. கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலையை எழுது.

 33. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

 34. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 35. செல்சவ்வு தேர்வு கடத்துச் சவ்வாக செய்லபட உதவுவது எது?  

 36. புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து

 37. கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.    

 38. கோண கோலங்கைமா பற்றி எழுதுக.

 39. நீர் வடிதல் என்றால் என்ன ?

 40. வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.

 41. 4x 5 = 20
 42. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

 43. கரப்பான் பூச்சியின் பெண் இனப்பெருக்க மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்கு.

 44. பூஞ்சைகளின் பொதுப்பண்புகள் யாவை? 

 45. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

 46. உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. உடற்சமநிலை பேணுதல், கழிவு நீக்கம், கிளாமருளஸ், யூரியா, கிளாமருலார் வடிகட்டல், சிறுநீர் நாளங்கள், சிறுநீர் பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், வெளிச்செல் நுண்தமனி வழி கிளாமருலர் இரத்த நுண் நாளங்கள், புரதங்கள்.
  i) சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
  ii) பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
  iii) சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
  iv) இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
  v) கிளாமருலார் வடிதிரவத்தை சிறுநீராக மாற்றும் செயல்.
  vi) தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
  vii) ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
  viii) சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
  ix) யூரியா மற்றும் பயனுள்ள பல பொருட்களைக் கொண்டுள்ளது.
  x) இதன் சுவர்கள் வழியாக பௌமான் கிண்ணத்தினுள் இரத்தமானது வடிகட்டப்பட்டுள்ளது.
  xi) சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
  xii) இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்தல்.
  xiii) சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
  xiv) கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
  xv) அண்மை சுருண்ட குழல்களில் நீர் கடத்தப்படும் நிகழ்ச்சி
  xvi) அண்மை சுருண்ட குழல்களைச் சூழ்ந்து காணப்படும் இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்தம் எங்கிருந்து வருகிறது?
  xvii) இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?

 47. முன் மூளை அமைப்பை விவரி?

 48. இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும்  இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.

 49. கிரப்ஸ் சுழற்சி அல்லது சிட்ரிக் அமிலச் சுழற்சி படம் வரைக?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Biology Model Exam Question Paper 2019 )

Write your Comment