11th Full Test Model Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I.மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  20 x 1 = 20
 1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

  (a)

  அங்காடி

  (b)

  சந்தை

  (c)

  நாளங்காடி

  (d)

  அல்லங்காடி

 2. இந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?

  (a)

  கர்த்தா 

  (b)

  கூட்டு வாரிசுதார் 

  (c)

  தலைமுறை 

  (d)

  கூட்டாளிகள் 

 3. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

  (a)

  வரம்பற்ற உறுப்பினர் 

  (b)

  ரொக்க வியாபாரம் 

  (c)

  தவறான நிர்வாகம் 

  (d)

  இழப்பு ஏற்படுவதால் 

 4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

  (a)

  பிரதமர்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  இந்தியத் தலைமை நீதிபதி

  (d)

  மாநில முதலமைச்சர்

 5. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?

  (a)

  1978

  (b)

  1979

  (c)

  1980

  (d)

  1981

 6. பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.

  (a)

  சந்தையிடுதல்

  (b)

  வரிசைப்படுத்துதல்

  (c)

  விநியோகம்

  (d)

  விற்பனை செய்தல்

 7. ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.

  (a)

  வழிச் சீட்டு

  (b)

  சரக்கு குறிப்பு

  (c)

  சார்ட்டர்

  (d)

  ஒப்பந்த இரசீது

 8. பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?

  (a)

  பணம் திருப்பத் திட்டாவணம்

  (b)

  மருத்துவ கோருரிமை

  (c)

  கப்பல் சார் காப்பீடு

  (d)

  காஸ்கோ காப்பீடு

 9. பணியமர்த்தல், கடன் சேகரிப்பு, ஆலோசனை போன்ற முழுமையான சேவைகள் வழங்குவதற்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு நிபந்தனை _______ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  முதிர்வு ஏட்டுக்கடன் தரகு வணிகம்

  (b)

  தேசிய ஏட்டுக்கடன் வணிகம்

  (c)

  அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்

  (d)

  துணை நாடாத ஏட்டுக்கடன் வணிகம்

 10. பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை

  (a)

  ஒரு வெளியீட்டின் குறியீடு 

  (b)

  பணியாளர்களின் ஈடுபாடு

  (c)

  இணக்க வழிமுறைகளை நிறுவுதல் 

  (d)

  இவற்றில் எதுவும் இல்லை.

 11. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

  (a)

  பங்காதாயம் 

  (b)

  இலாபம் 

  (c)

  வட்டி 

  (d)

  இவை எதுவும் இல்லை

 12. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

  (a)

  10

  (b)

  20

  (c)

  25

  (d)

  50

 13. உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்

  (a)

  மூன்று

  (b)

  நான்கு 

  (c)

  இரண்டு

  (d)

  ஐந்து

 14. _____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும்  பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை

  (a)

   தரகர் 

  (b)

  தன் பொறுப்பு முகவர்

  (c)

  பண்டகசாலை வைத்திருப்பவர்

  (d)

  கழிவு முகவர்

 15. இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.

  (a)

  இடாப்பு

  (b)

  சரக்காணை 

  (c)

  விசாரணை 

  (d)

  கப்பல் வாடகை முறி

 16. உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது 

  (a)

  மேலாண்மைக்குழு

  (b)

  பொதுக்குழு

  (c)

  நிர்வாகக்குழு 

  (d)

  பொதுச்சபை

 17. அலுவல் சார்ந்த மூலதனம் என்பது 

  (a)

  இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு

  (b)

  அரசின் சிறப்பு எடுப்பு உரிமை

  (c)

  அ மற்றும் ஆ இரண்டும்

  (d)

  அயல் நாட்டு மூலதனம் 

 18. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

  (a)

  அறுதியிட்டுக் கூறுதல்

  (b)

  தகுதியற்றது

  (c)

  அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

  (d)

  நிபந்தனையுடையது.

 19. மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?

  (a)

  வாக்குறுதி அளிப்பவர்

  (b)

  வாக்குறுதி பெறுபவர்

  (c)

  முகவர்

  (d)

  சட்டரீதியான பிரதிநிதி

 20. வருமான வரி என்பது

  (a)

  வியாபார வரி

  (b)

  நேரடி வரி

  (c)

  மறைமுக வரி

  (d)

  சேவை வரி

 21. II.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

  7 x 2 = 14
 22. சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?

 23. போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.

 24. சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் யாது?

 25. TVS நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கு மோட்டார் பைக்குகளை விற்பது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு

 26.  தவணை முறை விற்பனை என்றால் என்ன?

 27. ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

 28. இறக்குமதி வணிகத்தில் பயன்படுத்தபப்டும் ஆவணங்கள் யாவை?

 29. ஏற்பு என்றால் என்ன?

 30. பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?

 31. மறைமுக வரியின் வரைவிலக்கணம் தருக.

  1. III.எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

  7 x 3 = 21
 32. தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?

 33. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

 34. அரசு நிறுமம் என்றால் என்ன?

 35. பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகளை விவரி.

 36. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

 37. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

 38. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

 39. பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.

 40. உலகளாவிய  வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

 41. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

 42. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி

  2. வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி 

  1. வணிக வங்கிகளால் வழங்கப்படும்  குறுகிய கால நிதி ஆதாரங்களை சுருக்கமாக விளக்குக

  2. அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?

  1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

  2. சில்லறை வியாபாரிகளின் பண்பு நலன்கள் யாவை?

  1. துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.

  2. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  1. கப்பல் இரசீதிற்கும் கப்பல் வாடகை முறிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  2. பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகள் யாவை?

  1. செலுத்தல் சம நிலைக்கும் வாணிபச் சம நிலைக்கு உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  2. சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்தம் ஒன்றின் இன்றியமையாத கூறுகள் யாவை?

  1. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

  2. வரி என்பதற்கு வரைவிலக்கணம் தந்து நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் முழுத் மாதிரி தேர்வு ( 11th Commerce Full Test Model Question )

Write your Comment