All Chapter 5 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 03:00:00 Hrs
Total Marks : 160
    Answer All The Following Question:
    32 x 5 = 160
  1. சுருக்குக  : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]

  2. பின்வரும் அட்டவணையை உற்றுநோக்கி, கீழேயுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்

    ஆண்டு புலிகளின் எண்ணிக்கை
    1990 3500
    2008 1400
    2011 1706
    2014 2226

    (i) 2011 இல் இருந்த புலிகள் எத்தனை ?
    (ii) 1990 ஐ விட 2008 இல் எத்தனை புலிகள் குறைந்துள்ளன?
    (iii) 2011 மற்றும் 2014 இக்கும் இடையே உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்ல து குறைந்துள்ளதா?

  3. பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.

  4. பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    அணிகள் A B C D E F G H
    பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை 8 7 n a 9 10 8 y
    வெற்றிப் பெற்றப் போட்டிகள் 5 6 4 7 b 6 x 3
    தோல்வி அடைந்த போட்டிகள் k m 6 2 3 c 4 6

    அட்ட வணை யில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.

  5. என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன எனில்
    (அ) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
    (ஆ) பச்சை மற்றும் நீலம் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
    (இ) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்.

  6. ஒரு பையிலுள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 எனில்,
    (அ) பையில், எடுக்க அதிக வாய்ப்புடைய பந்து எது ?
    (ஆ) பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
    (இ) பச்சை மற்றும் மஞ்சள் பந்துகளின் எண்ணிக்கையைக் காண்க.

  7. கொடுக்கப்பட்ட படங்களில் விரிகோணங்களைக் கண்டறிக.

  8. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், நிரப்புக் கோணங்கள் அல்லது மிகை நிரப்புக் கோணங்களைக் கண்டறிக.

  9. 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு.
    11 12 13 12 12 15 16 17 18 12
    20 13 13 14 14 14 15 15 15 15
    16 16 16 15 14 13 12 11 19 17
    நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

  10. செப்டம்பர் மாதத்தில் கணிக்கப்பட்ட வெப்பநிலை அட்டவணை பின்வருமாறு.

    (i) நாட்காட்டியை கவனித்து வானிலை வகைகளின் நிகழ்வெண் அட்டவணை அமைக்க
    (ii) எத்தனை நாட்கள் மேக மூட்டமாகவோ அல்லது பகுதி  மேக மூட்டமாகவோ இருக்கும்?
    (iii) எத்தனை நாட்களில் மழை இருக்காது?இரு வழிகளில் விடையைக் காண வழியை கூறுக 
    (iv) சூரிய ஒளிமிக்க நாட்களுக்கும் மழை நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

  11. 1 இலிருந்து 9 வரை எண்களைப் பயன்படுத்தி

    (அ) மாய முக்கோணத்தை அமைக்க முடியுமா?
    (ஆ) எத்தனை மாய முக்கோணங்களை அமைக்கலாம்?
    (இ) மாய முக்கோணத்தில் பக்கங்களின் கூடுதலை எழுதுக.

  12. 1 இலிருந்து 12 வரை எண்களைப் பயன்படுத்தி 12 வட்டங்களில் நிரப்ப வேண்டும். ஓர் எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் 6 பக்கங்களிலும் தனித்தனியாகக் கூடுதல் 26 என வருமாறு எத்தனை வழிகளில் அமைக்கலாம்?

  13. 156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.சி.ம காண்க.

  14. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?

  15. ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்தற்கு 6 மணி 20 நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக்கொள்கிறார்  எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட சமாதத மொத்த நேரம் எவ்வளவு ?

  16. 6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால  இடைவெளியைக் காண்க.

  17. பின்வரும் அட்டவணையில் பொருத்தமான விவரங்களை நிரப்புக.

      அடக்க விலை  விற்பனை விலை  இலாபம்  நட்டம் 
    (i) ரூ.50 ரூ.60    
    (ii) ரூ.70 ரூ.60    
    (iii) ரூ.100   ரூ.20  
    (iv) ரூ.80     ரூ.15
    (v)   ரூ.70 ரூ.25  
    (vi)   ரூ.100   ரூ.30
  18. பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    குறித்த விலை 
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
    (ரூ.இல்) 
    இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    110 130   5    
    ii 110 130   20    
    iii   130   15 30  
    iv    130   இல்லை    25
      125   இல்லை  இல்லை  இல்லை 
    vi     350 50 100 இல்லை 
  19. AB = 6.5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டிற்கு மேலே M என்ற புள்ளியைக் குறிக்க. M வழியே AB கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.

  20. PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.

  21. பின்வரும் வினாக்களை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (ii) இராம் வங்கியில் சேமிப்பாக ரூ.7,55,250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ரூ.5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க.
    (iii) ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்?
    (iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) ரூ.90,000 ஐ 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு ?  

  22. ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3 ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது. அக்குழு பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.

  23. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  24. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

  25. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

    இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
    குறிப்புகள்:
    i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
    v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
    vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
    viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
    ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
    x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

  26. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
    C1 : முதல் குறையற்ற முழு எண்.
    C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
    C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
    C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
    C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
    C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

  27. ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும் ?

  28. இரண்டு வீட்டு மனைகள் ஒரே சுற்றளவைப் பெற்றுள்ளன. அதில் ஒன்று 10 மீ பக்கம் கொண்ட சதுர வடிவமாகும். மற்றொன்று 8 மீ அகலம் கொண்ட செவ்வக வடிவமாகும் எனில் எந்த வீட்டுமனை அதிகப் பரப்பளவு பெற்றுள்ளது ? எவ்வளவு அதிகம் ?

  29. ஒரு கட்டத்தை மட்டும் நிழலிட்டுப் பின்வருவனவற்றைப் பெறச் செய்க
    i) ஒரு சமச்சீர்க் கோடு
    ii) சுழல் சமச்சீர் வரிசை 2

  30. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

  31. உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.

  32. 28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment