All Chapter 3 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 96
    Answer All The Following Question:
    32 x 3 = 96
  1. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
    7345671

  2. ஓர் அரசுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ரூ 10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.

  3. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.

  4. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 11 + 10x 

  5. சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கிமீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத் தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு ?

  6. ஒரு பள்ளியில் 1500 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் மற்றும் 5 நிர்வாகிகள் என உள்ளனர்.பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால், மேறற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர் எனக் காண்க.

  7. பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக.
    (i) \(\angle NAS \)
    (ii) \(\angle BIG \)
    (iii) \(\angle SMC \)

  8. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 38°

  9. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
    உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.

    மாதம் ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர்
    விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை 300 450 600 550
  10. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.

    வகுப்பு VI VII VIII IX X
    இனிப்புகளின் எண்ணிக்கை 70 60 45 80 55

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.

  11. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  12. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  13. கீழக்காணும் கூற்றுகளுக்கு ஏற்ப A இன் மதிபபைக் காண்க
    (i) 2 ஆல் வகுபடும் மிகப்பெரிய ஈரிலக்க எண் 9A ஆகும்.
    (ii) 3 ஆல் வகுபடும் மிகச்சிறிய எண் 567A ஆகும்.
    (iii) 6 ஆல் வகுபடும் மிகப்பெரிய மூன்றிலக்க எண் 9A6 ஆகும்.
    (iv) 4 மற்றும் 9 ஆல் வகுபடும் எண் AO8 ஆகும்.
    (v) 11 ஆல் வகுபடும் எண் 225A85 ஆகும்.

  14. 564872 என்ற எண்ணானது 88 ஆல் வகுபடுமா என ஆராய்க. (8 மற்றும் 11 இன் வகுபடுந்தன்மை  விதி்களைப் பயன்படுதத்லாம்)

  15. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை  எனில் 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?

  16. கீழ்கண்டவற்றைக்  24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
    (i) 3 : 15 மு.ப
    (ii) 12 : 35 பி.ப
    (iii) 12 : 00 நண்பகல்
    (iv) 12 : 00 நள்ளிரவு 

  17. பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?

  18. பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    100 120    
    ii 110 120    
    iii 120   20  
    iv  100 90    
    120   25  
  19. 7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.

  20. 7 செ.மீ, 7 செ.மீ மற்றும் 7 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  21. கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட எண்களை எழுதுக.

  22. 20 + [8 x 2 + {(6 x 3) − (10 ÷ 5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  23. சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் \(2\frac { 3 }{ 4 } \) மீ  2\(\frac {1}{2}\) மீ மற்றும் 1\(\frac{1}{4}\) மீ எனில் அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க ? 

  24. எண்ணெய் தகரப் பெட்டியில் 7\(\frac {1}{2}\) லிட்டர் எண்ணெய்  இருக்கிறது. அதை 2\(\frac {1}{2}\) லிட்டர் அளவுடைய புட்டியில் ஊற்றினால்,  7\(\frac {1}{2}\) லிட்டர் எண்ணெயை நிரப்ப எத்தனை புட்டிகள் தேவைப்படும் ?

  25. ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.

  26. செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடியளிக்கவும் .
    i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன ?
    ii) வெப்பமானியில் 0oC இக்குக் கீழே 5oC ஐ எங்கு குறிப்பாய் ?
    iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10oC குறைத்தல் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன ?
    iv) வெப்பமானியில் 15oC இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.

  27. 15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க.

  28. ஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும் ?
    i) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்

  29. கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணப் பகுதியை முதலில் l என்ற கோட்டைப் பொருத்தும் எதிரொளிப்பு செய்க.

  30. கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

  31. 16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க

  32. கீழே கொடுக்கப்பட்ட அமைப்புகளை நிரப்புக
    i) 1 + 2 + 3 + 4 = 10
    2 + 3 + 4 + 5 = 14
    __ + 4 + 5 + 6 =__
    4 + 5 + 6 +__=__
    ii) 1 + 3 + 5 + 7 = 16
    __ + 5 + 7 + 9 = 24
    5 + 7 + 9 +__=__
    7 + 9 +__+ 13 =__
    iii) AB, DEF, HIJK, __, STUVWX
    iv) 20, 19, 17, ___, 10, 5

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment