முக்கிய வினாவிடைகள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    35 x 1 = 35
  1. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  2. (53 + 49) \(\times\) 0 என்பது

    (a)

    102

    (b)

    0

    (c)

    1

    (d)

    53 + 49 \(\times\) 0

  3. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

    (a)

    0 \(\times\) 0

    (b)

    0 + 0

    (c)

    2 / 0

    (d)

    0 / 2

  4. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  5. \(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில்  'c' இன் மதிப்பு 

    (a)

    c = 15

    (b)

    c = 21

    (c)

    c = 24

    (d)

    c = 27

  6. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  7. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?

    (a)

    3 : 5 , 6 : 11

    (b)

    2 : 3, 9 : 6

    (c)

    2 : 5, 10 : 25

    (d)

    3 : 1, 1 : 3

  8. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  9. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  10. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  11. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

    (a)

    7

    (b)

    (c)

    (d)

  12. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

    (a)

    நேர்கோட்டுக் குறிகள்

    (b)

    பிக்டோ வேர்டு

    (c)

    அளவிடுதல்

    (d)

    நிகழ்வெண்

  13. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

    (a)

    வெவ்வேறாக இருக்கும்

    (b)

    சமமாக இருக்கும்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    இவை அனைத்தும்

  14. 6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  15. 120- ஐ மீ.சி.ம- ஆகக் கொண்ட எங்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா-ஆக இருக்க இயலாது?

    (a)

    60

    (b)

    40

    (c)

    80

    (d)

    30

  16. 1006 கிராமுக்குச் சமமானது

    (a)

    1 கி.கி 6 கி

    (b)

    10 கி.கி 6 கி

    (c)

    100 கி.கி 6 கி

    (d)

    1 கி.கி 600 கி

  17. எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.

    (a)

    0.07 செ.கி

    (b)

    0.007 கி

    (c)

    70 மி.கி

    (d)

    அனைத்தும் சமம் 

  18. 3 வாரங்கள் =  ________  நாள்கள்

    (a)

    21

    (b)

    7

    (c)

    14

    (d)

    28

  19. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  20. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  21. கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?

    (a)

    இருசமபக்கச் செங்கோண முக்கோணம்

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    இருசமபக்கக் விரிகோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க விரிகோண முக்கோணம் 

  22. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  23. பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?

    (a)

    6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ

    (b)

    5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ

    (c)

    6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ

    (d)

    4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ

  24. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  25. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  26. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  27. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  28. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  29. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  30. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  31. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

    (a)

    A

    (b)

    P

    (c)

    T

    (d)

    U

  32. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  33. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

    (a)

    DAD

    (b)

    NUN

    (c)

    MAM

    (d)

    EVE

  34. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  35. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

  36. Part - B

    31 x 2 = 62
  37. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    33,75,98,482; பத்துக் கோடி

  38. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    75 + 34 = 34 + 75

  39. ஏழு இலக்க எண் 29,75,842 ஐ இலட்சம் மற்றும் பத்து இலட்சத்துக்கு முழுமையாக்குக. அம்மதிப்புகள் சமமாக இருக்குமா?

  40. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.  

  41. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

  42. அட்டவணையை நிறைவு செய்க.

    நாட்க ள் 28 21 ? 63
    வாரங்கள் 4 3 2 ?
  43. கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
    5 : 4

  44. மலர்க்கொடியிடம் 10 ஆரஞ்சுகள் உள்ளன. அவள் 4 ஆரஞ்சுப் பழங்களை உண்டுவிட்டால், உண்ணாத பழங்களின் பின்னம் என்ன?

  45. தடித்து வரையப்பட்ட கோடுகளை (இணை , வெட்டு அல்லது செங்குத்துக் கோடுகள்) என வகைப்படுத்தி எழுதுக.

  46. எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?

  47. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  48. உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை  ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.

  49. ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப்படுத்துக.
    (i) 60
    (ii) 128
    (iii) 144
    (iv) 198
    (v) 420
    (vi) 999

  50. n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?

  51. 10 முதல் 20 வரையுள்ள அனைத்துப் பகா எண்களின் கூடுதலானது அனைத்து ஓரிலக்க எண்களால் வகுபடுமா என ஆராய்க.

  52. கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்படட கால இடைவெளியைக் காண்க
    (i) 5.30 மு.ப. முதல் 12.40 பி.ப வரை 
    (ii) 1.30 பி.ப முதல் 10.25 பி.ப வரை
    (iii) 20 மணி முதல் 4 மணி வரை
    (iv) 17 மணி முதல் 5.15 மணி வரை

  53. சரவணன் என்பவர் 5 கி.மீ தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக் கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை ?

  54. பாரி ஓர் உந்து வண்டியை ரூ. 55,000 க்கு வாங்கி ரூ. 55,00 இலாபத்திற்கு விற்பனை செய்தார். எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன ?

  55. மணிமேகலை ரூ.25,52,500க்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ரூ.2,28,350 செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ரூ.30,52,000க்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க. 

  56. மங்கை ஓர் அலைபேசியை ரூ.12585 க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதை சரி செய்ய ரூ.500 செலவு செய்து அவர் ரூ.7500 க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  57. பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.

  58. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?

  59. பின்வரும் சமான பின்னங்களில் விடுபட்ட எண்களைக் காண்க.
    i) \(\frac { 3 }{ 5 } =\frac { 9 }{ } \)
    ii) \(\frac { }{ 7 } =\frac { 16 }{ 28 } \)
    iii) \(\frac { }{ 3 } =\frac { 10 }{ 15 } \)
    iv) \(\frac { 42 }{ 48 } =\frac { }{ 8 } \)       

  60. சுருக்குக : 35 x \(\frac { 5 }{ 7 } \)  

  61. 18 ல் எத்தனை 6 கள் உள்ளன? 

  62. எண் கோட்டில் -4 ஐ  அடைய  3 இன்  இடதுபுறம்  நீ எத்தனை அலகுகள் நகர வேண்டும் ?    

  63. பின்வரும் சூழ்ல்களை  முழுக்களாக  குறிப்பிடுக.
    i) ரூ 2000 நட்டம் ,
    ii) கி.பி  (பொ . ஆ.பி ) 2018
    iii) மீன்கள்  கடல் மட்டத்திலிருந்து 60 மீ  கீழே காணப்படுவது.
    iv) 0C  இக்குக் கீழ் 18
    v) 13 புள்ளிகள்  இலாபம் அடைதல்
    vi) ஒரு விசைப்பிறி (jet ) விமானம்  2500 மீ  உயரத்தில் இருப்பது                      

  64. ஒரு சதுரத்தின் பக்கம் பாதியாக்கப்பட்டால்  கிடைக்கப்பெற்ற  சதுரத்தின்  சுற்றளவு என்ன ?         

  65. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  66. ஒவ்வொரு படத்திலும் குறிக்கப்பட்டுள்ள புள்ளிக்கோடு அதற்குச் சமச்சீர்க்கோடு ஆகுமா ? ஆம் எனில் '✔️' குறிப்பிடுக, இல்லையெனில் x குறியிடுக. உனது விடையை நியாயப்படுத்துக.

  67. 48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.

  68. Part - C

    25 x 3 = 75
  69. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
    1234567890

  70. முல்லைக்கொடி, ஒவ்வொரு பையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்திருந்தாள். அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களைப் பெற்றிருப்பர் ? ஆப்பிள்கள் மீதமிருக்க வாய்ப்புண்டா ? உண்டெனில் எத்தனை ?

  71. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?   

  72. 'u' என்பது இரட்டை எண் எனில் பின்வருவனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
    (i) 'u' இன் அடுத்த பெரிய இரட்டை எண்  எது?
    (ii) 'u' இன் முந்தைய சிறிய இரட்டை எண் எது?

  73. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
    3 : 4 அல்லது 7 : 8

  74. விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.

  75. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. 
    (i) \(\bar { AB } \) = 7.5 செ.மீ.
    (ii)  \(\bar { CD } \) = 3.6 செ.மீ.
    (iii)  \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  76. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  77. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
    மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

  78. படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  79. 62, 78 மற்றும் 109- ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?

  80. எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை  எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  81. ஒரு செயற்கைக்கோள் 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடிகள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைகிறது. இதனை வினாடிகளில் கணக்கீடுக.

  82. மலரின் பிறந்த நாள் 20.11.1999 ஆகும். 05.10.2018 அன்று உள்ளபடி அவளுடைய வயதைக் கணக்கிடுக.

  83. குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக்  காண்க.

  84. 7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.

  85. (10 x 9) - (8 x 2) + 3 ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  86. 3a + b ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக. 

  87. சுருக்குக : \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)

  88. 5\(\frac {3}{7}\) ஐத் தகா பின்னமாக மாற்றுக.

  89. முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.

  90. செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடியளிக்கவும் .
    i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன ?
    ii) வெப்பமானியில் 0oC இக்குக் கீழே 5oC ஐ எங்கு குறிப்பாய் ?
    iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10oC குறைத்தல் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன ?
    iv) வெப்பமானியில் 15oC இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.

  91. விடுபட்ட இடங்களை நிரப்புக
    i) 5 செ.மீ= ________ மி.மீ2
    ii) 26 மீ=________ செ.மீ2
    iii) 8 கி.மீ=________ மீ2

  92. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கத்தை மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(ஏதேனும் 3 வழிகளில்).

  93. 188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  94. Part - D

    16 x 5 = 80
  95. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

  96. ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
      

  97. உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?

  98. கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல். 

  99. 30 மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது.அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

    தொழில் நேர்கோட்டுகுறிகள்
    ஆசிரியர்
    விமானி
    வங்கி மேலாளர்
    மருத்துவர்
    பொறியாளர்
    மற்ற தொழில்கள்

    இத்தரவுகளுக்கு பட விளக்கப்படம் வரைக

  100. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

  101. 18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.

  102. சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    நிலையம்  வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம்
    சென்னை எழும்பூர்  - 20.30
    செங்கல்பட்டு  21.30 21.32
    விழுப்புரம் சந்திப்பு  23.15 23.25
    விருத்த்தச்சலம் சந்திப்பு  00.07 00.10
    திருச்சி 04.30 -

  103. கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
    (i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள்  5
    (ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள்   5
    (iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்   6
    (iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள்  5

  104. பின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக்  குறிப்பிடுக.
    (i) 60°, 60°, 60°
    (ii) 90°, 55°, 35°
    (iii) 60°, 40°, 42°
    (iv) 60°, 90°, 90°
    (v) 70°, 60°, 50°
    (vi) 100°, 50°, 30°

  105. பின்வரும் மரவுரு வரைபடத்தை இயற்கணித கோவையாக மாற்றி எழுதுக.

  106. வண்ணம் பூசுபவர் சுவற்றின் \(3\over 8\) பகுதியை வண்ணம் பூசினார். அதில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் நிற வண்ணம் பூசினார் எனில், மொத்த சுவற்றில் மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் என்ன ?

  107. கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
    ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
    iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
    iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
    v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?

  108. ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.

  109. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

  110. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
    இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
    கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
    பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard maths important questions )

Write your Comment