Important Question Part-III

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    9 x 1 = 9
  1. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

    (a)

    1489000 மற்றும் 1492540

    (b)

    1489000 மற்றும் 1490540

    (c)

    1490000 மற்றும் 1490100

    (d)

    1480000 மற்றும் 1490000

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  4.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  6. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  7. எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.

    (a)

    0.07 செ.கி

    (b)

    0.007 கி

    (c)

    70 மி.கி

    (d)

    அனைத்தும் சமம் 

  8. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

    (a)

    விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    இலாபம் 

    (d)

    நட்டம் 

  9. கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?

    (a)

    இருசமபக்கச் செங்கோண முக்கோணம்

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    இருசமபக்கக் விரிகோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க விரிகோண முக்கோணம் 

  10. Section - II

    16 x 2 = 32
  11. ஓர் ஆண்டில், ஒரு மொத்த -காகித விற்பனை நிறுவனம் (Whole-sale) 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  12. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க. 

  13. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    (i) 15 : 20

  14. கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

  15. தாமரை நூல்களை ப் படிப்பதில் ஆர்வமுடையவள். 40 நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்ப ட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்.
    1 3 5 6 6 3 5 4 1 6 2 5 3 4 1 6 6 5 5 1
    1 2 3 2 5 2 4 1 6 2 5 5 6 5 5 3 5 2 5 1

  16. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  17. பகு எண்கள் ஒவ்வொன்றும் குறைந்தது மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  18. 10 முதல் 20 வரையுள்ள அனைத்துப் பகா எண்களின் கூடுதலானது அனைத்து ஓரிலக்க எண்களால் வகுபடுமா என ஆராய்க.

  19. மூன்று தொடர்ச்சியான எண்களின் பெருக்கற்பலன் ஏப்போதும் 6 ஆல் வகுபடும் என்பதை ஓர்  எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  20. மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.

  21. முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேலைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செய்க.

  22. ஒரு பல்பொருள் அங்காடி  விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள்  ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது  எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  23. நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து ரூ.800 க்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார்.அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை ரூ.100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  24. ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ. 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார்.ஒரு வாழைப்பழம் ரூ. 3 வீதம் அவற்றை விற்பனை செய்தார். எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  25. பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.

  26. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?

  27. Section - III

    12 x 3 = 36
  28. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
    7345671

  29. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

    வடிவங்கள் முதலாம் அமைப்பு இரண்டாம் அமைப்பு  மூன்றாம் அமைப்பு நான்காம் அமைப்பு ஐந்தாம் அமைப்பு
    சதுரங்கள் 1 2

    3

       
    வட்டங்கள் 1 2 3    
    முக்கோணங்கள் 2 4 6    
  30. சில விலங்குகளின் அதிகளவு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.
    யானை = 20 கிமீ/மணி, சிங்கம் = 80 கிமீ/மணி, சிறுத்தை = 100 கிமீ/மணி.
    (i) யானை மற்றும் சிங்கம்
    (ii) சிங்கம் மற்றும் சிறுத்தை 
    (iii) யானை மற்றும் சிறுத்தை
    ஆகியவற்றின் விகிதங்களை எளிய வடிவில் காண்க. மேலும், எந்த விகிதம் மிகச் சிறியது எனக் காண்க.

  31. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°

  32. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.

    வகுப்பு VI VII VIII IX X
    இனிப்புகளின் எண்ணிக்கை 70 60 45 80 55

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.

  33. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  34. வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.

  35. இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?

  36. குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
    (i) 10 லி 5 மி.லி - லிருந்து மி.லி
    (ii) 4 கி.மீ 300 மீ - லிருந்து மீ
    (iii) 300 மி.கி - லிருந்து கி

  37. கீதா 2 லி 250 மி.லி கொள்ளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு ?

  38. இராகு ஒரு நாற்காலியை ரூ.3000 க்கு வாங்கினார்.அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

  39. கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சோடி கோடுகளும் இடையேயான தொலைவை இரு வேறு புள்ளிகளில் மூலைமட்டத்தைப் பயன்படுத்தி கண்டறிக. அவை இணைகோடுகளா ? என்பதைச் சோதித்தறிக.

  40. Section - IV

    10 x 5 = 50
  41. எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக
    இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது

  42. ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
      

  43. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள இணைக்கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் காண்க.

  45. 40 குழந்தைகளின் உயரங்கள் (செ .மீ.இல்) பின்வருமாறு
    110 112 112 116 119 111 113 115 118 120
    110 113 114 111 114 113 110 120 118 115
    112 110 116 111 115 120 113 111 113 120
    115 111 116 112 110 111 120 111 120 111
    நேர்கோட்டு குறி அட்டவணை அமைக்கவும்.

  46. 1 இலிருந்து 7 வரை எண்களைப் பயன்படுத்தி வட்டங்களை  நிரப்பி, ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் கூடுதல் ஓரே எண்ணாக வருமாறு அமைக்க.

  47. 18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.

  48. முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.

  49. இரம்யா  சில ஒப்பனைப்  பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.

                                ரொக்கப் பட்டியல்
           சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர் 
    பட்டியல் எண்:100                                                           நாள் : 15.05.2018
    வ.எண் பொருள்கள்  விலை(ரூ.இல்) அளவு  தொகை(ரூ.இல்)
    1.
    2.
    3.
    4.
    தலைமுடிக் கவ்வி (Hair clip)
    தலைமுடிச் செருகி(Hair pin)
    நாடா(Ribbon)
    கைக்குட்டை(Hand kerchief)
    15 /ஒன்று
    10 /ஒன்று
    12 /மீட்டர்
    25 /ஒன்று
    6
    4
    3
    2
    90
    40
    36
    50
      மொத்தம்      216

    பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
    (i) பட்டியல் எண் என்ன ?
    (ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
    (iii) வாங்கப்பட்ட வெவ்வேறு  பொருள்கள் எத்தனை ?
    (iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன ?
    (v) நாடாவின் மொத்த விலை என்ன ?

  50. அட்டவணையை நிறைவு செய்க:

    முக்கோணத்தின் வகைகள்/கோணங்கள்  குறுங்கோண முக்கோணம்  செங்கோண முக்கோணம்  விரிகோண முக்கோணம் 
    எவையேனும் இரு கோணங்கள்  எப்பொழுதும் குறுங்கோணங்கள்  i)  எப்பொழுதும் குறுங்கோணங்கள்
    மூன்றாவது கோணம்  ii) செங்கோணம்  iii)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 (6th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020)

Write your Comment