தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 3 = 30
 1. கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
  (i) 8 + (6 x 2) (ii) 9 − (2 x 3)
  (iii) (3 x 5) − (4 ÷ 2) (iv) [(2 x 4)+2] x (8 ÷ 2)
  (v) [(6 +4) x 7] ÷ [ 2 x (10 −5)]
  (vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]

 2. கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தில் விடுபட்ட கணிதக் குறியீடுகளை எழுதுக.

 3. பின்வரும் மரவுரு வரைபடங்கள் சமமா இல்லையா என ஆராய்க.

 4. ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மற்றும் நான்காவது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,010. 75,070, 25,720, 30,636 ஆகும். 4 நாட்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட மொத்த நுழைவுச் சீட்டுகள் எத்தனை? 

 5. வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் 9 தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை Rs.6 எனில் வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி Rs.84 கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா Rs.59 கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி?

 6. ஒரு நியாய விலைக் கடையில் 5000 குடும்பங்களுக்கு 1,00,000 கிலோ கிராம் அரிசி வழங்கப்படுகிறது எனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட அரிசியின் அளவைக் காண்க?

 7. [8+(5x 2)] − [(2x3) + 5] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

 8. 20+[8x 2+{(6x3)−(10÷5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

 9. 5a ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக. 

 10. கீழே கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தை இயற்கணிதக் கோவையாக மாற்றுக.

 11. 4 x 5 = 20
 12. பின்வரும் இயற்கணிதக் கோவையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
  (i) 10v
  (ii) 3a−b
  (iii) 5x + y
  (iv) 20t x p
  (v) 2(a+b)
  (vi) (x x y) − (y x z)
  (vii) 4 x + 5y
  (viii) (lm − n) ÷ (pq + r)

 13. பின்வரும் வினாக்களை மரவுரு வரைபடமாக மாற்றுக.
  (i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
  (ii) இராம் வங்கியில் சேமிப்பாக Rs.7,55,250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக Rs.5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க.
  (iii) ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்?
  (iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) Rs.90,000 ஐ 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு?  

 14. 10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

 15. ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3 ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது. அக்குழு பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Information Processing Model Question Paper )

Write your Comment