எண்கள் இரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கொடுத்துள்ளதை வரிசைப்படுத்தி முடிக்க.
    பத்துக் கோடி, கோடி, பத்து இலட்சம், _____, _____, _____, _____, _____, _____.

  2. 5, 2, 0, 7, 3 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய ஐந்திலக்க எண்ணையும்,மிகச் சிறிய ஐந்திலக்க எண்ணையும் எழுதுக.

  3. காற்புள்ளியை உற்றுநோக்கி பின்வரும் எண்களில் 7 இன் இடமதிப்பை எழுதுக.
    567,456,345

  4. ஓர் ஆண்டில், ஒரு மொத்த -காகித விற்பனை நிறுவனம் (Whole-sale) 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  5. 12 − [3 − {6 − (5 − 1)}]

  6. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    44,555; ஆயிரம்

  7. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    50,81,739; இலட்சம்

  8. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    (12 \(\times\) 4) \(\times\)8 = 12 \(\times\) (4 \(\times\) 8)

  9. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2

  10. செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - எண்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Maths - Numbers Two Marks Model Question Paper )

Write your Comment