Term 1 புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

    (a)

    7

    (b)

    (c)

    (d)

  2.  என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    9

    (d)

    10

  3. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  4. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

    (a)

    நேர்கோட்டுக் குறிகள்

    (b)

    பிக்டோ வேர்டு

    (c)

    அளவிடுதல்

    (d)

    நிகழ்வெண்

  5. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

    (a)

    பிக்டோ வேர்டு

    (b)

    பிக்டோ கிராம்

    (c)

    பிக்டோ ப்ரேஸ்

    (d)

    பிக்டோ கிராப்ட்

  6. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  7. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

    (a)

    வெவ்வேறாக இருக்கும்

    (b)

    சமமாக இருக்கும்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    இவை அனைத்தும்

  8. 3 x 2 = 6
  9. தாமரை நூல்களை ப் படிப்பதில் ஆர்வமுடையவள். 40 நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்ப ட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்.
    1 3 5 6 6 3 5 4 1 6 2 5 3 4 1 6 6 5 5 1
    1 2 3 2 5 2 4 1 6 2 5 5 6 5 5 3 5 2 5 1

  10. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
    1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
    4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

  11. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  12. 4 x 3 = 12
  13. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
    உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.

    மாதம் ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர்
    விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை 300 450 600 550
  14. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).

    இடம் மகாபலிபுரம் வேடந்தாங்கல் ஓகேனக்கல் ஊட்டி
    பயணிகளின் எண்ணிக்கை 20,000 15,000 40,000 35,000
  15. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.

    வகுப்பு VI VII VIII IX X
    இனிப்புகளின் எண்ணிக்கை 70 60 45 80 55

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.

  16. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
    மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

  17. 5 x 5 = 25
  18. 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு.
    11 12 13 12 12 15 16 17 18 12
    20 13 13 14 14 14 15 15 15 15
    16 16 16 15 14 13 12 11 19 17
    நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

  19. ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.

    அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை ?
    (iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?

  20. ஓர் ஆண்டில் விற்பனையான வண்டிகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விளக்கப்படத்தைப் பார்த்துப் பின் வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) ஓர் ஆண்டில் விற்பனையான இருசக்கர வண்டிகள் எத்தனை ?
    (ii) ஓர் ஆண்டில் 20 பேருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியா, தவறா எனக் கூறுக.
    (iii) எத்தனை மிதிவண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
    (iv) எத்தனை மகிழுந்துகள் மற்றும் சுமையுந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
    (v)மொத்தம் எத்தனை வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?

  21. 40 குழந்தைகளின் உயரங்கள் (செ .மீ.இல்) பின்வருமாறு
    110 112 112 116 119 111 113 115 118 120
    110 113 114 111 114 113 110 120 118 115
    112 110 116 111 115 120 113 111 113 120
    115 111 116 112 110 111 120 111 120 111
    நேர்கோட்டு குறி அட்டவணை அமைக்கவும்.

  22. மாணவர்கள் பள்ளியில் விளையாடும் பல விளையாட்டுகளை இந்தப் பட விளக்கப்படம் காட்டுகிறது. 

    கீழே  உள்ள வினாக்களுக்கு   விடையளிக்கவும்.
    (i) மாணவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு எது?
    (ii) கபடி விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
    (iii) மாணவர்கள் சம எண்ணிக்கையில் விளையாடும் இரு விளையாட்டுகள் எவை?
    (iv) கோ-கோ மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் எவ்வளவு?
    (v) மாணவர்களிடையே மிகக் குறைந்த விருப்பத்தைப் பெற்ற விளையாட்டு எது?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Statistics Model Question Paper )

Write your Comment