Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. சோமு ஓர் உந்து வண்டியை மற்றொருவரிடமிருந்து ரூ.28,000 க்கு வாங்கி, அதனைப் பழுது பார்க்க ரூ.2000 செலவு செய்தார். பிறகு அதனை ரூ.30,000 க்கு விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  2. முத்து ஒரு மகிழுந்து வண்டியை ரூ.8,50,000 க்கு வாங்கினார். அதை ரூ.25,000 இலாபத்திற்கு விற்பனை செய்ய விரும்பினார் எனில் மகிழுந்தின் விற்பனை விலை என்னவாக இருக்கும் ?

  3. பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?

  4. சிதம்பரம், மருது நூல் அங்காடியிலிருந்து 12.04.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கு 507 ஆம் எண்ணுடைய  பட்டியல் தயாரிக்க.
    ஒன்று ரூ.55 வீதம் சுப்பிரமணியப் பாரதியார் நூல்கள் 10, ஒன்று ரூ.75 வீதம் திருவள்ளுவர் நூல்கள் 15, ஒன்று ரூ.60 வீதம் வீரமாமுனிவர் நூல்கள் 12 மற்றும் ஒன்று ரூ.70 வீதம் தி.ரு.வி.க நூல்கள் 12.

  5. இராணி ஒரு சோடி வளையல்களை ரூ.310க்கு வாங்கினார்.அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையல்களை ரூ.325க்கு விற்றார் எனில் இராணியின் இலாபம் அல்லது நட்டம் காண்க.

  6. 5 x 5 = 25
  7. இரம்யா  சில ஒப்பனைப்  பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.

                                ரொக்கப் பட்டியல்
           சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர் 
    பட்டியல் எண்:100                                                           நாள் : 15.05.2018
    வ.எண் பொருள்கள்  விலை(ரூ.இல்) அளவு  தொகை(ரூ.இல்)
    1.
    2.
    3.
    4.
    தலைமுடிக் கவ்வி (Hair clip)
    தலைமுடிச் செருகி(Hair pin)
    நாடா(Ribbon)
    கைக்குட்டை(Hand kerchief)
    15 /ஒன்று
    10 /ஒன்று
    12 /மீட்டர்
    25 /ஒன்று
    6
    4
    3
    2
    90
    40
    36
    50
      மொத்தம்      216

    பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
    (i) பட்டியல் எண் என்ன ?
    (ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
    (iii) வாங்கப்பட்ட வெவ்வேறு  பொருள்கள் எத்தனை ?
    (iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன ?
    (v) நாடாவின் மொத்த விலை என்ன ?

  8. கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
    (i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள்  5
    (ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள்   5
    (iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்   6
    (iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள்  5

  9. பின்வரும் அட்டவணையில் பொருத்தமான விவரங்களை நிரப்புக.

      அடக்க விலை  விற்பனை விலை  இலாபம்  நட்டம் 
    (i) ரூ.50 ரூ.60    
    (ii) ரூ.70 ரூ.60    
    (iii) ரூ.100   ரூ.20  
    (iv) ரூ.80     ரூ.15
    (v)   ரூ.70 ரூ.25  
    (vi)   ரூ.100   ரூ.30
  10. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.

  11. பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    குறித்த விலை 
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
    (ரூ.இல்) 
    இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    110 130   5    
    ii 110 130   20    
    iii   130   15 30  
    iv    130   இல்லை    25
      125   இல்லை  இல்லை  இல்லை 
    vi     350 50 100 இல்லை 

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Bill, Profit And Loss Three and Five Marks Questions )

Write your Comment