Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 41
    7 x 3 = 21
  1. ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.

  2. பின்வரும் சூழல்களை முழுக்களாகக் குறிப்பிடுக.
    1) ரூ.1000 இலாபம் 
    2) 0o இக்குக் கீழ் 20o
    3) கி.மு. (பொ.ஆ.மு) 1990
    4) ரூ. 15,847 வைப்புத்தொகை 
    5) இயல்பான எடையை விட 10 கி.கி குறைவு 

  3. ஓர் எண்கோட்டில், 0 மற்றும் -8 ஆகிய எண்களின் முன்னி மற்றும் தொடரியைக் காண்க.

  4. -14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.

  5. பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
    i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
    ii) −99, −120, 65, −46, 78, 400, −600
    iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888

  6. முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.

  7. P, Q, R மற்றும் S ஆகியன ஓர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.
    i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.
    ii) R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.
    iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சம தூரத்தில் உள்ளன.
    iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.

  8. 4 x 5 = 20
  9. கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
    ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
    iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
    iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
    v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?

  10. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.

    இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
    குறிப்புகள்:
    i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
    iv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
    v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
    vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
    vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
    viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.
    ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
    x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

  11. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
    C1 : முதல் குறையற்ற முழு எண்.
    C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
    C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
    C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
    C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
    C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

  12. கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (-) விளக்குகிறது.

    i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
    ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபம, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
    iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.
    iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா ? தவறா ?
    v) நிரப்புக : 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும் _______.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three and Five Marks Question Paper )

Write your Comment