Important Question Part-IV

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  9 x 1 = 9
 1. 10 மில்லியனின் தொடரி

  (a)

  1000001

  (b)

  10000001

  (c)

  9999999

  (d)

  100001

 2. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

  (a)

  y = 5

  (b)

  y = 6

  (c)

  y = 7 

  (d)

  y = 8

 3. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?

  (a)

  50

  (b)

  4

  (c)

  10

  (d)

  8

 4. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

  (a)

  A, B, C

  (b)

  A, F, C

  (c)

  B, C, D

  (d)

  A, C, D

 5. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

  (a)

  பிக்டோ வேர்டு

  (b)

  பிக்டோ கிராம்

  (c)

  பிக்டோ ப்ரேஸ்

  (d)

  பிக்டோ கிராப்ட்

 6. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும்?

  (a)

  51, 63

  (b)

  52, 91

  (c)

  71, 81

  (d)

  81, 99

 7. 2 நாள்கள் = ________ மணி

  (a)

  38

  (b)

  48

  (c)

  28

  (d)

  40

 8. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

  (a)

  விற்பனை விலை 

  (b)

  அடக்க விலை 

  (c)

  இலாபம் 

  (d)

  நட்டம் 

 9. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

  (a)

  குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

  (b)

  குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

  (c)

  செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

  (d)

  குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

 10. Section - II

  16 x 2 = 32
 11. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
  50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2

 12. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

 13. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
  75 : 100

 14. இரண்டு கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு கோணத்தை விட 20° அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.

 15. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
  1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
  4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

 16. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

 17. ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப்படுத்துக.
  (i) 60
  (ii) 128
  (iii) 144
  (iv) 198
  (v) 420
  (vi) 999

 18. n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n-1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?

 19. மூன்று பகா எண்களின் கூடுதல் 80. அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில், அந்த எண்களைக் காண்க.

 20. ஒரு விவசாயி தன்னுடைய மின்சார மோட்டாருகாகத் திங்கள் மட்டும் செவ்வாய் கிழமைகளில் மின்சாரத்தை பயன்படுத்திய நேரம் முறையே 7 மணி 20 நிமிடம் 35 வினாடி மற்றும் 3 மணி 44 நிமிட 50 வினாடி எனில் அவர் மின்சாரத்தை பயன்படுத்திய மொத்த நேரத்தைக் கணக்கீடுக.

 21. ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை  இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும்.அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கீடுக.

 22. ஒருவர் ஒரு நாற்காலியை Rs.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி Rs.100 அளித்த பின் Rs.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு?

 23. அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு Rs.300 என விலை குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் Rs.275 க்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு அவரால் அளிக்கப்பட தள்ளுபடி எவ்வளவு? 

 24. ஒரு பல்பொருள் அங்காடி  விற்பனையாளர் ரூ.750க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள்  ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது  எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

 25. கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.

 26. நான், மூன்று கோணங்களும் 60ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார்?

 27. Section - III

  12 x 3 = 36
 28. பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
  345,678

 29. ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + க்ஸ் எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?  

 30. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
  1 : 2 அல்லது 2 : 1

 31. பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°

 32. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
  மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

  இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

   

 33. கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை  மாற்றி அணியலாம்?

 34. வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.

 35. வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை  முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினாள், அவர்கள் மீண்டும் எப்பபோது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?

 36. குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
  (i) 10 லி 5 மி.லி-லிருந்து மி.லி
  (ii) 4 கி.மீ 300 மீ-லிருந்து மீ
  (iii) 300 மி.கி-லிருந்து கி

 37. மேலின அலகாக மாற்றுக:
  (i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ)
  (ii) 8257 மி.லி (கி.லி, லி)

 38. பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

  வ.எண்  அடக்க விலை
  (ரூ.இல்)
  குறித்த விலை 
  (ரூ.இல்)
  விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
  (ரூ.இல்) 
  இலாபம்
  (ரூ.இல்) 
  நட்டம் 
  (ரூ.இல்)
  110 130   இல்லை     
  ii 110 130   10    
  iii 110 130   30    
  iv  100 120     இல்லை  10
    120   10 20 இல்லை 
 39. AB=7 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

 40. Section - IV

  10 x 5 = 50
 41. அன்பு, அறிவுச்செல்வி ஓர் ஐந்து இலக்க ஒற்றைப்படை எண்ணை நினைவில் கொள்ளக் கூறினான். மேலும் பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறான்.
  (i)1000 ஆவது இட மதிப்பில் உள்ள இலக்கம் 5 ஐ விடக் குறைவு.
  (ii)100 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 6 ஐ விடக் குறைவு.
  (iii)10 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 8.
  அறிவுச்செல்வி விடை என்னவாக இருக்கும்? அவள் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைக் கூறுவாளா?

 42. பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் '\(\frac { k }{ 3 } \)' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.

  k 3 6 9 12 15 18
  \(\frac { k }{ 3 } \) 1 2        
 43. ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு படத்தின் அளவு பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

  படத்தில் வடிவம் மற்றும் அளவில் மாற்றம் உள்ளதை உங்களால் கவனிக்க முடிகிறதா? குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தி இரு படங்களின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதங்கள், விகித சமத்தில் உள்ளதா என ஆராய்க.

 44. கொடுக்கப்பட்ட படங்களில் விரிகோணங்களைக் கண்டறிக.

 45. செப்டம்பர் மாதத்தில் கணிக்கப்பட்ட வெப்பநிலை அட்டவணை பின்வருமாறு.

  (i) நாட்காட்டியை கவனித்து வானிலை வகைகளின் நிகழ்வெண் அட்டவணை அமைக்க
  (ii) எத்தனை நாட்கள் மேக மூட்டமாகவோ அல்லது பகுதி  மேக மூட்டமாகவோ இருக்கும்?
  (iii) எத்தனை நாட்களில் மழை இருக்காது?இரு வழிகளில் விடையைக் காண வழியை கூறுக 
  (iv) சூரிய ஒளிமிக்க நாட்களுக்கும் மழை நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

 46. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

 47. ஒரு வீடடில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?

 48. 6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால  இடைவெளியைக் காண்க.

 49. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு
  ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.

 50. PQ =12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 6th Standard Mathematics Tamil Medium Important Question 2019-2020 )

Write your Comment