Important Question Part-V

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    9 x 1 = 9
  1. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தல் அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு

    (a)

    180000

    (b)

    165000

    (c)

    140000

    (d)

    155000

  2. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  3. ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?

    (a)

    ரூ. 480

    (b)

    ரூ. 800

    (c)

    ரூ. 1000

    (d)

    ரூ. 200

  4.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5.  என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    9

    (d)

    10

  6. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  7. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

    (a)

    4 ஆண்டுகள் 

    (b)

    2 ஆண்டுகள் 

    (c)

    1 ஆண்டு

    (d)

    3 ஆண்டுகள் 

  8. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

    (a)

    குறித்த விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    இலாபம்

  9. பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?

    (a)

    6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ

    (b)

    5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ

    (c)

    6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ

    (d)

    4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ

  10. Section - II

    16 x 2 = 32
  11. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2

  12. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க. 

  13. கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக. 
    \(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)

  14. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

    (i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
    (ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
    (iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
    (iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
    (v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி

  15. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  16. உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை  ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.

  17. கீழக்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா காண்க.
    (i) 18,24
    (ii) 51,85
    (iii) 61,76
    (iv) 84,120
    (v) 27,45,81
    (vi) 45,55,95

  18. இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?

  19. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

  20. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை  வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.

    நிலையம்  வந்து சேரும் நேரம்  புறப்படும் நேரம் 
    சென்னை எழும்பூர் - 13:40
    தாம்பரம் 14:08 14:10
    செங்கல்பட்டு  14:38 14:40
    விழுப்புரம்  15:50 15:55
    விருத்தாசலம்  16:28 16:30
    அரியலூர்  17 :04 17 :05
    திருச்சி  18:30 18:35
    திண்டுக்கல்  20:03 20:05
    சோழவந்தான்  20:34 20:35
    மதுரை  21:20 -

    i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ? 
    ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன ?
    iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?
    iv) சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?
    v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.

  21. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20 ஆம் தேதி என்ன கிழமை ?

  22. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.

  23. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள்  நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம்  அல்லது நட்டம்  காண்க.

  24. ஒரு பல்பொருள் அங்காடி  விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள்  ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது  எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  25. நான், மூன்று கோணங்களும் 60ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?

  26. பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
    அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
    ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.

  27. Section - III

    12 x 3 = 36
  28. முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
    4 \(\times\) 132 \(\times\) 25

  29. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

    வடிவங்கள் முதலாம் அமைப்பு இரண்டாம் அமைப்பு  மூன்றாம் அமைப்பு நான்காம் அமைப்பு ஐந்தாம் அமைப்பு
    சதுரங்கள் 1 2

    3

       
    வட்டங்கள் 1 2 3    
    முக்கோணங்கள் 2 4 6    
  30. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
    3 : 4 அல்லது 7 : 8

  31. பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 135°

  32. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).

    இடம் மகாபலிபுரம் வேடந்தாங்கல் ஓகேனக்கல் ஊட்டி
    பயணிகளின் எண்ணிக்கை 20,000 15,000 40,000 35,000
  33. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  34. 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4-ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.

  35. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?

  36. மேலின அலகாக மாற்றுக:
    (i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ)
    (ii) 8257 மி.லி (கி.லி, லி)

  37. 2லி கொள்ளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்கண்ட கொள்ளவுகளில் உள்ள குவளையில் எத்தனை முறை தண்ணீர் உற்ற வேண்டும்?
    (i) 100 மி.லி
    (ii) 50 மி.லி
    (iii) 500 மி.லி
    (iv) 1 லி
    (v) 250 மி.லி

  38. வளர்மதி தன்னுடைய முத்து மாலையை ரூ.30,000 க்கு விற்பனை செய்து, அதனால் இலாபம் ரூ.5000 பெறுகிறார் எனில் முத்து மாலையின் விலையைக் காண்க. 

  39. 7 செ.மீ, 10 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? 

  40. Section - IV

    10 x 5 = 50
  41. ஒரு கோழிப்பண்ணையிலிருந்து 15472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?

  42. ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
      

  43. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படத்தில் உள்ள கோணத்திற்கும் பல வழிமுறைகளில் பெயரிடுக.

  45. 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு.
    11 12 13 12 12 15 16 17 18 12
    20 13 13 14 14 14 15 15 15 15
    16 16 16 15 14 13 12 11 19 17
    நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

  46. 1 இலிருந்து 12 வரை எண்களைப் பயன்படுத்தி 12 வட்டங்களில் நிரப்ப வேண்டும். ஓர் எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் 6 பக்கங்களிலும் தனித்தனியாகக் கூடுதல் 26 என வருமாறு எத்தனை வழிகளில் அமைக்கலாம்?

  47. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?

  48. ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்தற்கு 6 மணி 20 நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக்கொள்கிறார்  எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட சமாதத மொத்த நேரம் எவ்வளவு ?

  49. பின்வரும் அட்டவணையில் பொருத்தமான விவரங்களை நிரப்புக.

      அடக்க விலை  விற்பனை விலை  இலாபம்  நட்டம் 
    (i) ரூ.50 ரூ.60    
    (ii) ரூ.70 ரூ.60    
    (iii) ரூ.100   ரூ.20  
    (iv) ரூ.80     ரூ.15
    (v)   ரூ.70 ரூ.25  
    (vi)   ரூ.100   ரூ.30
  50. ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணம் காண்க.
    (i) 80°, 60°
    (ii) 75°, 35°
    (iii) 52°, 68°
    (iv) 50°, 90°
    (v) 120°, 30°
    (vi) 55°, 85°

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 6th Standard Mathematics Tamil Medium Important Question All Chapter 2020 )

Write your Comment