Important Question Part-I

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    9 x 1 = 9
  1. 3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.

    (a)

    5

    (b)

    7

    (c)

    8

    (d)

    1

  2. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  3. ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______________

    (a)

    1 : 5

    (b)

    1 : 2

    (c)

    2 : 1

    (d)

    5 : 1

  4. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

  5. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  6. 27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.

    (a)

    28

    (b)

    37

    (c)

    40

    (d)

    31

  7. 1006 கிராமுக்குச் சமமானது

    (a)

    1 கி.கி 6 கி

    (b)

    10 கி.கி 6 கி

    (c)

    100 கி.கி 6 கி

    (d)

    1 கி.கி 600 கி

  8. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  9. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  10. Section - II

    16 x 2 = 32
  11. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2

  12. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'q' இன் 4 மடங்கு. 

  13. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    7 : 15

  14. கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

  15. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
    1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
    4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

  16. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
    (i)

    (ii)

    (iii)

    (iv)

  17. எவையேனும் மூன்று ஒற்றை இயல் எண்களின் கூடுதலானது ஓர் ஒற்றை எண்ணாகும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் உறுதிப்படுத்துக்க.

  18. மூன்று பகா எண்களின் கூடுதல் 80. அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில், அந்த எண்களைக் காண்க.

  19. மூன்று தொடர்ச்சியான எண்களின் பெருக்கற்பலன் ஏப்போதும் 6 ஆல் வகுபடும் என்பதை ஓர்  எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  20. ஒரு முட்டையில் 81 கி.கி.சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?

  21. உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.

  22. மங்கை ஓர் அலைபேசியை ரூ.12585 க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதை சரி செய்ய ரூ.500 செலவு செய்து அவர் ரூ.7500 க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  23. ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ. 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார்.ஒரு வாழைப்பழம் ரூ. 3 வீதம் அவற்றை விற்பனை செய்தார். எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  24. ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு ரூ.8 வீதம் 15 கி.கி தக்காளிவாங்கினார்.வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளிரூ.20 வீதம் விற்பனை செய்கிறார். எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

  25. இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124எனில் மற்ற இரு கோணங்களைக்  கண்டுபிடி.

  26. பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
    அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
    ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.

  27. Section - III

    12 x 3 = 36
  28. 5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பைக் காண்க

  29. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக. 70s

  30. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
    (i) 4 : 5 அல்லது 8 : 15

  31. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°

  32. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).

    இடம் மகாபலிபுரம் வேடந்தாங்கல் ஓகேனக்கல் ஊட்டி
    பயணிகளின் எண்ணிக்கை 20,000 15,000 40,000 35,000
  33. படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  34. நூல் விற்பனையாளர்  175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதி்கபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும். ஒரு பெட்டியில் உள்ள ஒவ்வொரு பாட நூல்களின் எண்ணிக்கையைக் காண்க.

  35. எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை  எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  36. இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு நாள் முகாமில், ஒரு மாணவருக்கு 150 கி அரிசி மற்றும் 15 மி.லி எண்ணெயும் தேவைப்படுகின்றன.அந்த முகாமில் 40 மாணவர்கள் பங்கேற்றனர் எனில், அவர்களுக்கு எத்தனை கி.கி அரிசியும், எத்தனை லிட்டர் எண்ணெயும் தேவைப்படும் ?

  37. 2லி கொள்ளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்கண்ட கொள்ளவுகளில் உள்ள குவளையில் எத்தனை முறை தண்ணீர் உற்ற வேண்டும்?
    (i) 100 மி.லி
    (ii) 50 மி.லி
    (iii) 500 மி.லி
    (iv) 1 லி
    (v) 250 மி.லி

  38. பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    குறித்த விலை 
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
    (ரூ.இல்) 
    இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    110 130   இல்லை     
    ii 110 130   10    
    iii 110 130   30    
    iv  100 120     இல்லை  10
      120   10 20 இல்லை 
  39. 8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  40. Section - IV

    10 x 5 = 50
  41. என்னுடைய பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க

  42. பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.

  43. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

  44. கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல். 

  45. பின்வரும் வண்ணங்கள் 25 மாணவர்களால் விரும்பப்படுகின்றன. அத்தரவுக்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

    சிவப்பு நீலம் வெள்ளை சாம்பல் வெள்ளை
    பச்சை     சாம்பல் நீலம் பச்சை     சாம்பல்
    நீலம் சாம்பல் சிவப்பு பச்சை சிவப்பு
    நீலம் நீலம் பச்சை         நீலம் பச்சை
    சாம்பல் சாம்பல் பச்சை     சாம்பல் சிவப்பு
  46. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

  47. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?

  48. முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.

  49. பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    குறித்த விலை 
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
    (ரூ.இல்) 
    இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    110 130   5    
    ii 110 130   20    
    iii   130   15 30  
    iv    130   இல்லை    25
      125   இல்லை  இல்லை  இல்லை 
    vi     350 50 100 இல்லை 
  50. ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கு மேலே 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 6th Standard Mathematics Tamil Medium Model Questions For All Chapter 2020 )

Write your Comment