பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

    (a)

    குறித்த விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    இலாபம்

  2. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

    (a)

    விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    இலாபம் 

    (d)

    நட்டம் 

  3. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  4. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  5. 8 x 2 = 16
  6. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.

  7. அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு ரூ.300 என விலை குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் ரூ.275 க்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு அவரால் அளிக்கப்பட தள்ளுபடி எவ்வளவு ? 

  8. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள்  நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம்  அல்லது நட்டம்  காண்க.

  9. மணிமேகலை ரூ.25,52,500க்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ரூ.2,28,350 செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ரூ.30,52,000க்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க. 

  10. ஒரு பழ வணிகர் ஒரு டசன் ஆப்பிள்களை ரூ.84 க்கு வாங்கினார். 2 ஆப்பிள்கள் அழுகிவிட்டன. அவருக்கு  ரூ.16 இலாபம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு அப்பிளின் விற்பனை விலையைக் காண்க.

  11. ஒரு விற்பனையாளர் மூன்று பொருட்களை ரூ.325, ரூ.450 மற்றும் ரூ.510 என வாங்கினார். அவற்றை முறையே ரூ.350, ரூ.425 மற்றும் ரூ.525 என விற்பனை செய்தார். அவருடைய மொத்த இலாபம் அல்லது நட்டம் காண்க.

  12. ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ. 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார்.ஒரு வாழைப்பழம் ரூ. 3 வீதம் அவற்றை விற்பனை செய்தார். எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  13. ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு ரூ.8 வீதம் 15 கி.கி தக்காளிவாங்கினார்.வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளிரூ.20 வீதம் விற்பனை செய்கிறார். எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

  14. 5 x 3 = 15
  15. சோமு ஓர் உந்து வண்டியை மற்றொருவரிடமிருந்து ரூ.28,000 க்கு வாங்கி, அதனைப் பழுது பார்க்க ரூ.2000 செலவு செய்தார். பிறகு அதனை ரூ.30,000 க்கு விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  16. குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக்  காண்க.

  17. பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?

  18. மணி ஓர் அன்பளிப்புப் பொருளை ரூ.1500 க்கு வாங்கினார். அப்பொருளை விற்பனை செய்யும் போது ரூ.150 இலாபம் பெற விரும்பி ரூ.1800 என விலை குறிக்கிறார்.அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி தர வேண்டும் ?

  19. இராணி ஒரு சோடி வளையல்களை ரூ.310க்கு வாங்கினார்.அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையல்களை ரூ.325க்கு விற்றார் எனில் இராணியின் இலாபம் அல்லது நட்டம் காண்க.

  20. 3 x 5 = 15
  21. கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
    (i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள்  5
    (ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள்   5
    (iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்   6
    (iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள்  5

  22. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.

  23. பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.

    வ.எண்  அடக்க விலை
    (ரூ.இல்)
    குறித்த விலை 
    (ரூ.இல்)
    விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
    (ரூ.இல்) 
    இலாபம்
    (ரூ.இல்) 
    நட்டம் 
    (ரூ.இல்)
    110 130   5    
    ii 110 130   20    
    iii   130   15 30  
    iv    130   இல்லை    25
      125   இல்லை  இல்லை  இல்லை 
    vi     350 50 100 இல்லை 

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - Bill, Profit and Loss Model Question Paper )

Write your Comment