VI Maths Information Processing Solutions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75
    10 x 2 = 20
  1. பின்வரும் அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.
    i) 1 x 1 = 1
    11 x 11 = 121
    111 x 111 = 12321
    1111 x 1111 = ?
    11111 x 11111 = ?
    ii) 

  2. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  3. 1, 1, 2, 3,... என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.

    படி அமைப்பு 1 அமைப்பு 2
    i) 1 + 3 = 4 5 - 1 = 4
    ii) 1 + 3 + 8 = __________ ?
    iii) 1 + 3 + 8 + 21 =__________ ?
    iv) ? ?
  4. கீழ்க்கண்ட அமைப்பை நிறைவு செய்க.

  5. யூக்ளிடின் விளையாட்டு மூலம் கீழ்க்கண்ட சோடி எண்களுக்கு மீ.பொ.கா.வைக் காண்க.
    i) 25 மற்றும் 35
    ii) 36 மற்றும் 12
    iii) 15 மற்றும் 29

  6. 48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.

  7. ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.

  8. உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.

  9. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
    i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10 ஐ எழுதுக.
    ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5 ஐ எழுதுக.
    iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7 ஐ எழுதுக.
    iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2 ஐ எழுதுக.
    v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அடையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக.

  10. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.

  11. 10 x 3 = 30
  12. 16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க

  13. கொடுக்கப்பட்ட புதிரில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைவரும் ஒரே எண்ணை (36) பெறுக.
    அறிவுறுத்தல்கள்:
    1. 1 முதல் 9 வரையிலான ஏதேனும் ஓர் எண்ணை நினைத்துக் கொள்க.
    2. அதனை 9 ஆல் பெருக்குக.
    3. ஈரிலக்க எண் கிடைத்தால் அவ்விலக்கணங்களைக் கூட்டுக.
    4. கூடுதலில் இருந்து 3ஐ கழிக்க.
    5. வரும் எண்ணை அதே எண்ணால் பெருக்குக.

  14. OMR தாளை நிரப்புவதற்கு முன், அறிவுறுத்தல்களை நீங்கள் கவனமாகப் படிக்கவும், கொடுக்கப்பட்ட OMR தாளில் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி நிழலிடுக.
    அறிவுறுத்தல்கள்:
    பந்துமுனை எழுது கோலை மட்டுமே பயன்படுத்தி வட்டங்களை நிழலிடுக.
    மேல் வரிசையில் சேர்க்கை எண்ணை எழுதவும்.
    எண்கள் இடமிருந்து வலமாக நிழலிடப்பட்ட வேண்டும்.
    ஒவ்வொரு எண் கட்டத்திற்கும் கீழே உள்ள அதற்குரிய வட்டத்தை நிழலிடுக.
    ஒவ்வொரு நிரலிலும் ஒரே ஓர் எண் மட்டுமே நிழலிடப்பட வேண்டும்.

  15. கொடுக்கப்பட்ட 4 x 4 சதுரக் கட்டத்தை உற்றுநோக்குக, மேலும் கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எண் வரிசை அடுக்குகளின் தனித்தன்மையானது 139 என்ற கூடுதலைத் தருகிறது என்பதனை அறிக.
    அறிவுறுத்தல்கள்:
    எண்களை நிரை வாயிலாகக் கூட்டுக.
    எண்களை நிரல் வாயிலாகக் கூட்டுக.
    எண்களை மூலை விட்டங்களின் வாயிலாகக் கூட்டுக.
    சதுரத்தின் நான்கு மூலையில் உள்ள எண்களைக் கூட்டுக.
    கொடுக்கப்பட்ட சதுரத்தை நான்கு 2 x 2 சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு சதுரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எண்களையும் கூட்டுக.

  16. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத நாள்காட்டி அட்டையை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.
    i) நாள்காட்டியில் இருந்து பகா எண்கள் மற்றும் பகு எண்களை வகைப்படுத்துக.
    ii) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைப் வகைப்படுத்துக.
    iii) 6 மற்றும் 4 இன் மடங்குகளையும் அவற்றின் பொது மடங்குகளையும் அவ்விரு எண்களின் மீ.சி.ம-வையும் வகைப்படுத்துக.
    iv) திங்கட்கிழமை வரும் தேதிகளை வகைப்படுத்துக.

    ஜனவரி 2019
    ஞா தி செ பு வி வெ
        1 2 3 4 5
    6 7 8 9 10 11 12
    13 14 15 16 17 18 19
    20 21 22 23 24 25 26
    27 28 29 30 31    
  17. 188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  18. 1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்கண்டவற்றை கண்டறிக.
    i) 2 மற்றும் 7 ஆலும் வகுப்படாத எண்கள்
    ii) 25 மற்றும் 40 க்கும் இடைப்பட்ட பகா எண்கள்
    iii) 50 க்குள் உள்ள சதுர எண்கள்

  19. ஆங்கில எழுத்துக்களில் A க்கு 1, B க்கு 2, C க்கு 3 என்பதுபோல் Z க்கு 26 எனக்கொள்க. இந்த விளக்கத்தைக் காண்க.

  20. A க்கு பதில் + எனவும் B க்கு பதில் - எனவும் C க்கு பதில் x எனவும் ட க்கு பதில் \(\div\)எனவும் எடுத்துக்கொண்டால் 4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையை காண்க.

  21. கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை மூத்தவரிலிருந்து இளையவரை வரிசைப்படுத்துக. உங்களுக்கு என்ன கிடைக்கிறது?

  22. 5 x 5 = 25
  23. உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.

  24. வடிவியல் அமைப்பை உற்று நோக்குக. மேலும் கீழ்கண்ட வினாகளுக்கு விடையளிக்க 

    i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கை?
    ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பய்னபடுத்தப்பட்டுள்ளன எனக் காண்க.

  25. 28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  26. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
    இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
    கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
    பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்

  27. அஞ்சல் அட்டையில் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொள்க. அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு எவ்வாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன ?
    604506 ; 604516 ; 604560 ; 604506 ; 604516 ; 604516 ; 604560 ; 604516 ; 604505 ; 604470 ; 604515 ; 604520 ; 604303 ; 604509 ; 604470.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் தகவல் செயலாக்கம் கேள்வித்தாள் ( 6th Standard Maths Information Processing Questions )

Write your Comment