11th Biology Model Test-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150

    2 மதிப்பெண் வினாக்கள் 

    36 x 2 = 72
  1. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

  2. பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப் பொருட்களாக இருப்பவை யாவை?

  3. மெடுல்லரி பிரமிடுகள் என்பது யாது?

  4. வடிபிளவுகள் என்பது யாது?

  5. சார்கோமியரிலுள்ள  தசையிழைகளின் பெயர்களைக் கூறுக

  6. சறுக்கும் இழை கோட்பாட்டை விளக்குக.

  7. வெண்மை நிறத் தசையிழைகள் -வரையறு.

  8. காரையெலும்பு என்றால் என்ன? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

  9. மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?  

  10. வெளிச்செல் நியூரான்கள் - ஒரு குறிப்பு வரைக.

  11. கீழ் நோக்கு கற்றைகள் என்றால் என்ன?

  12. அனிச்சை வில் என்றால் என்ன>

  13. தானியங்கு நரம்பு செல் திரள்  பற்றி குறிப்பு வரைக.

  14. அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.

  15. ஹைப்போதலாமஸ் என்பது யாது?அது இவற்றை இணைகிறது.?

  16. கேஸ்ட்ரின் பணி யாது?

  17. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி

  18. உள்நாட்டு நீர் நிலைகள் யாவை?

  19. உட்கருவை உள்ளே நுழைப்பது எவ்வாறு?

  20. அறுவடை செய்தல் என்றால் என்ன?

  21. ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

  22. கூட்டுத்திசு என்றால் என்ன?

  23. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

  24. துளைக்கட்டை மற்றும் துளைகளற்ற கட்டைகளுக்கிடையேயான வேறுப்பாட்டினை எழுதுக. 

  25. தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?

  26. சவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன?

  27. தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.

  28. அமைனோ மாற்றம் பற்றி எழுதுக.

  29. லைக்கன்கள் பற்றி எழுதுக.

  30. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.   

  31. சாந்தோஃபில்கள் பற்றி எழுதுக.

  32. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?  

  33. கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?

  34. கிராப்ஸ் சுழற்சி பற்றி எழுதுக.

  35. வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?       

  36. முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.           

  37. 3 மதிப்பெண் வினாக்கள் 

    26 x 3 = 78
  38. பிளாஸ்மாவிலிருந்து  பெளமானின் உட்பகுதிக்குள் நுழையும் கரைபொருட்கள் எதிர்கொள்ளும் மூன்று வடிகட்டல் தடை காரணிகளின் பெயர்களை குறிப்பிடுக.இரத்தத்திலுள்ள எவ்வகை பகுதிப்பொருட்கள் இந்த சிறுநீரக படலங்களால் வெளியேற்றப்படுகின்றன?  

  39. குழல்களில் சுரத்தல் நிலையை விளக்குக.

  40. சம நீளச் சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?

  41. தசைச்செயலிழப்பு நோயைப் பற்றி குறிப்பு எழுதுக.      

  42. லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?  

  43. நியூரானின் செல் உடல்பகுதியைப் பத்தி குறிப்பிடுக.

  44. தலாமஸின் செயல்பாடுகளை எழுதுக.

  45. ஹைபோதலாமஸின் செயல்பாடுகளை எழுதுக.

  46. தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக. 

  47. வளர்ச்சி ஹார்மோன் பணிகளைக் குறிப்பிடுக.

  48. தைராய்டு சுரப்பியின் அமைப்பைக் குறிப்பிடுக.

  49. மண்புழு உரத்தின் பயன்களை எழுதுக.

  50. வேலைக்காரத்தேனீ தனது வாழ்நாளில் செய்யும் பல பணிகள் யாவை? 

  51. பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் பற்றி எழுதுக.

  52. சைலம் வரையறு.

  53. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்? 

  54. கற்றைசார் கேம்பியம் மற்றும் கற்றையிடைக் கேம்பியத்திற்கு இடையேயான வேறுபாட்டை எழுதுக?

  55. கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?

  56. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?

  57. பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக 

  58. ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.

  59. ஒளி வினையின் உயிர் ஆற்றல் அளவீட்டினை எழுதுக.

  60. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  61. எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி என்றால் என்ன?

  62. உருமாறும் தன்மை என்றால் என்ன?

  63. ஒளிக்காலத்ததூண்டல் பற்றி எழுதுக.      

*****************************************

Reviews & Comments about பதினொன்றாம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடை ( 11th standard biology important questions and answers )

Write your Comment