" /> -->

Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 70
  70 x 1 = 70
 1. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்

  (a)

  கோலிசிஸ்டோகைனின்

  (b)

  ஆஞ்சியோடென்சின் II

  (c)

  ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

  (d)

  பான்கிரியோசைமின்

 2. கீழ்வருவனவற்றுள் ஊடு கலப்பு ஒழுங்குபடுத்தியாகவும்,நைட்ரஜன்விளை பொருளாகவும் உள்ளது

  (a)

  NH3

  (b)

  யூரியா

  (c)

  யூரிக் அமிலம்

  (d)

  இவை அனைத்தும்

 3. கடல் மீன்களில் உள்ள கிளாமருலஸ் அற்ற சிறுநீரகங்களிலிருந்து உருவாகும் மிகக் குறைவான சிறுநீரின் அடர்த்தி ______ 

  (a)

  மிகக்குறைந்த அளவு நீர்த்த சிறுநீர்

  (b)

  அடர்த்தி மிகுந்த நீர்த்த சிறுநீர்

  (c)

  சமமாகும்

  (d)

  சிறுநீரகங்கள்

 4. ____ அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுகிறது 

  (a)

  பைகார்பனேட்

  (b)

  செயல்மிகு கடத்தல்

  (c)

  நீரை ஊடுருவ அனுமதிக்கும் கால்வாய்கள்

  (d)

  அண்மைய சுருண்ட நுண்குழல்

 5. சேகரிப்பு நாளத்திலுள்ள நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் ______ வெளியேறுகிறது.

  (a)

  இடையீட்டு திரவம்

  (b)

  எதிர்மறை

  (c)

  நீர் ஊடுருவல்

  (d)

  நீர்த்த சிறுநீர்

 6.  ______ வெளியேற்ற சிறுநீரகங்கள் தவறுவதால் யூரியா போன்றவை உடலில் தேங்கி சிறுநீர் வெளியேற்றம் பெருமளவில் குறைகிறது.

  (a)

  சிறுநீர்வெளிவிடு நாள அழற்சி

  (b)

  உட்சிறுநீரக அழற்சி

  (c)

  நைட்ரஜன் கழிவுப் பொருள்

  (d)

  யுரேமியா

 7. தசைச்சுருக்கத்திக்கான ATPயேஸ் நொதி உள்ள இடம்

  (a)

  ஆக்டினின்

  (b)

  ட்ரோப்போனின்

  (c)

  மையோசின்

  (d)

  ஆக்டின்

 8. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது 

  (a)

  கெளட் 

  (b)

  மயஸ்தீனியா கிரேவிஸ்

  (c)

  எலும்புப்புரை

  (d)

  ஆஸ்டியோமலேசியா

 9. மனிதனில் உள்ள பந்து கிண்ண மூட்டுகளின் எண்ணிக்கை

  (a)

  2

  (b)

  4

  (c)

  5

  (d)

  8

 10. இவ்விடத்தில் ATP யை சிதைக்கும் ATP யேஸ் நொதியும் உள்ளது.

  (a)

  கனமான

  (b)

  இலகுவான

  (c)

  தலைப்பகுதி

  (d)

  இரு ஆக்டின்

 11. ஆக்டின் இழைகளுடன் இணைந்த ________ இரு பக்கத்தில் இருந்தும் உள்நோக்கி இழுக்கப்படுவதால் சார்கோமியர் நீளம் குறைகின்றது.

  (a)

  குறுக்குப்பால அமைப்பு

  (b)

  ஆக்டின் இழைகள்

  (c)

  விசைத்தாக்கம்

  (d)

  Z கோடுகள்

 12. ஏகுரோமியன் நீட்சியின் கீழுள்ள பள்ளம் _____________ ஆகும்.

  (a)

  கையெழும்பு பொருந்து குழிவு

  (b)

  மேற்கை எலும்பு

  (c)

  ஒலிகிரனான் நீட்சி

  (d)

  மணிக்கட்டுக் கால்வாய்

 13. பல தசைநோய்களின் ஒன்றிணைந்த தொகுப்பு ________ என்பதாகும்.

  (a)

  தசைப்பிடிப்பு

  (b)

  தசைச் சிதைவுநோய்

  (c)

  டச்சீன் தசைச் சிதைவு

  (d)

  மூட்டுவலி

 14. கூற்று: Na+K+ மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வு நிலை மின்னழுத்தத்தை (Resting potential) உண்டாக்குகிறது.
  கரணம்; Na+K+ சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி, காரணம் தவறு

  (d)

  கூற்று காரணம் இரண்டும் தவறு

 15. _______ ஆக்ஸான் மேட்டிலிருந்து தான் நரம்புத்தூண்டல் தோற்றுவிக்கப்படுகிறது.

  (a)

  சைட்டோபிளாசம்

  (b)

  நிஸ்ஸல் துகள்கள் 

  (c)

  ஆக்ஸான்

  (d)

  இயக்கு நியூரான்கள் 

 16. இவ்வகையில் ஒரு ஆக்ஸான் மற்றும் ஒரு டென்ட்ரைட் மட்டுமே இருக்கும்.

  (a)

  நரம்பு செல் இடைவெளி

  (b)

  பல முனை நியூரான்கள்

  (c)

  இரு முனை நியூரான்கள்

  (d)

  ஒரு முனை நியூரான்கள்

 17. தேவையான அளவு சோடியம் அயனிகள் செல்லினுள் சென்ற பின், மின்னழுத்தம் உச்ச நிலையை அடைதல் ________ என்று பெயர்.

  (a)

  செயல்நிலை மின்னழுத்தம்

  (b)

  மின்முனைப்பியக்க நீக்கம்

  (c)

  உச்ச மின் அழுத்தம்

  (d)

  கூர்முனை மின்னழுத்த அளவு

 18. உணர்ச்சி மற்றும் இயக்குச் செயல்களை ஒருங்கினைக்கும் மையமாக ________ விளங்குகிறது.

  (a)

  இணை பரப்பு

  (b)

  எபிதலாமஸ்

  (c)

  தலாமஸ்

  (d)

  ஹைப்போதலாமஸ் 

 19. இன்பம், வலி, கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பகுதி முதன்மைப் பங்கு வகிப்பதால் லிம்பிக் மண்டலத்தை ______ என்பர்.

  (a)

  உணர்ச்சி மூளை

  (b)

  முளைத்தண்டு

  (c)

  கார்ப்போரா குவார்ட்ரிஜெமினா

  (d)

  நடுமூளை

 20. _________கண்ணின் நிறம் உள்ள பகுதியாகும்.

  (a)

  கோராய்டு உறை

  (b)

  ஐரிஸ்

  (c)

  வட்டத்தசைகள்

  (d)

  ஆரத்தசைகள்

 21. குச்சி மற்றும் கூம்பு செல்களிலுள்ள நிறமிப்பகுதியில் ரென்டினால் என்னும் வைட்டமின் A வழிபொருளும், ________என்னும் புரதமும் காணப்படுகிறது.

  (a)

  ஃபோவியா சென்ட்ராலிஸ்

  (b)

  குருட்டுப்புள்ளி

  (c)

  ஆபிசின்

  (d)

  செயல்நிலை மின்னழுத்தம்

 22. உணர்மயிரிழைகளாலும் ஆதரவு செல்களாலும் ஆன உணர்ச்சிப்பகுதி_______ 

  (a)

  ஆட்டோலித் துகள்கள்

  (b)

  ஆம்புல்லா

  (c)

  கிறிஸ்டா ஆம்புல்லாரிஸ்

  (d)

  ஆட்டோலித்திக் படலம்

 23. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.   

  (a)

  ஒழுங்குப்படுத்துதல் 

  (b)

  உடல் சமநிலை பேணுதல் 

  (c)

  ஒருங்கிணைப்பு 

  (d)

  ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

 24. பாராதைராய்டு சுரப்பி

  (a)

  இரத்த கால்சிய அளவை குறைக்கிறது

  (b)

  இரத்த கால்சியம் அளவை அதிகரிக்கிறது

  (c)

  ஆஸ்டியோபிளாஸ்ட்டுகளின் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது

  (d)

  இவை அனைத்தும்

 25. ஹைப்போதலாமஸின் _____ தேரோட்டரோபின் சுரப்பைத் தூண்டுகிறது.

  (a)

  மெலானோசைட்டுகள்

  (b)

  வளர்ச்சி ஹார்மோன்கள்

  (c)

  புரத உற்பத்தி விகிதம்

  (d)

  தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன்

 26. மெலனோசைட் செல்களில் மெலனின் உற்பத்தி அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு அமில உற்பத்தி மற்றும் இன்சுலின் உற்பத்தி ஆகியவற்றை இந்த ஹார்மோன் தூண்டுகிறது.

  (a)

  அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன்

  (b)

  ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்

  (c)

  லூட்டினைசிங் ஹார்மோன்

  (d)

  லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்

 27. ஆல்ஃபா செல்கள் _____ என்ற ஹார்மோனை சுரக்கின்றது.

  (a)

  குளுக்ககான்

  (b)

  இன்சுலின்

  (c)

  சொமட்டோஸ்டேடின் 

  (d)

  குளுக்ககான்

 28. பீட்டாசெல்கள் ______ என்ற ஹார்மோனை சுரக்கின்றது.

  (a)

  குளுக்ககான்

  (b)

  இன்சுலின்

  (c)

  சொமட்டோஸ்டேடின்

  (d)

  குளுக்ககான்

 29. கை எலும்புகள் கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி பெறுகின்றன.

  (a)

  குள்ளத்தன்மை

  (b)

  இராட்சத தன்மை

  (c)

  அக்ரோமெகாலி

  (d)

  கிரிட்டினிசம்

 30. _________ ஹார்மோன் சுரப்பு உயர்கிறது.

  (a)

  நேர்மறை பின்னூட்ட முறை

  (b)

  எதிர்மறை பின்னூட்ட முறை

  (c)

  பெப்டைடு ஹார்மோன்கள்

  (d)

  இரண்டாம் தூதுவர் அமைப்பு

 31. தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம் இதில் பயன்படுகிறது. 

  (a)

  கடல் மீன் வளர்ப்பு 

  (b)

  மீன் பிடித்தலில் 

  (c)

  மீன் வளர்ப்பில் 

  (d)

  உள்நாட்டு மீன்வளர்ப்பில்  

 32. கூற்று: மிகச் சிறந்த முத்து "லிங்கா முத்து" எனப்படும். இது கடற்சிப்பியிலிருந்து கிடைக்கிறது.
  காரணம்: மேன்டிலின் எபிதிலிய அடுக்கிலிருந்து தொடர்ந்து சுரக்கும் நேக்ரி உள்நுழையும் அயல் பொருளை சுற்றி படிகிறது.

  (a)

  கூற்று சரியானது, காரணம் தவறு.

  (b)

  கூற்றும் காரணமும் தவறானது

  (c)

  கூற்று தவறானது ஆனால், காரணம் சரியாக உள்ளது.

  (d)

  கூற்றும் காரணமும் சரியானது

 33. பாலமீன், மடவை ஆகியவை ______ 

  (a)

  மிகை உப்பு நீர் உயிரிகள் வளர்த்தல்

  (b)

  உப்பு நீர் இறால்

  (c)

  உள்ளூர் நன்னீர் மீன் வகைகள்

  (d)

  நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர் நீர் மீன்கள்

 34. ____ எனும் எறி வலையைக் கொண்டு மீன் கருமுட்டைகள் பொரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றது.

  (a)

  பென்சிஜால்

  (b)

  பொரிப்புக்குழி

  (c)

  பொரிப்புக்குளம்

  (d)

  பொரிப்பக ஹாப்பா

 35. வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களை உள்நாட்டில் வளர்க்கும் முறைக்கு _____ என்று பெயர்.

  (a)

  கூட்டு மீன் வளர்ப்பு

  (b)

  வெளிநாட்டு மீன் வளர்ப்பு

  (c)

  வெளிநாட்டு மீன் வகைகள்

  (d)

  மேற்பரப்பில் உணவீட்டும் வகை

 36. உயர் மதிப்பு முத்துக்களுக்கு _____ என்று பெயர்.

  (a)

  முத்து வங்கிகள்

  (b)

  லிங்கா முத்துக்கள்

  (c)

  பல அடுக்குகள்

  (d)

  பிரித்தெடுக்கப்பட்டு

 37. இவற்றின் ஆக்ரோஷமான சண்டையிடும் பண்பு, உறுதியான உடல், கம்பீரமான தோற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

  (a)

  இரு பயன்பாட்டு இனங்கள்

  (b)

  பிராம்மா

  (c)

  அசீல்

  (d)

  அலங்கார வகைகள்

 38. பல்வேறு வண்ணங்களில் உள்ள இவை கோழிக் கண்காட்சிகளில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன.

  (a)

  சில்க்கி

  (b)

  பண்ணைக்கோழி வளர்ப்பு முறை

  (c)

  சிறந்த முட்டையிடும் கோழிகளைத் தேர்ந்தெடுத்தல்

  (d)

  முட்டைகளைத் தேர்ந்தெடுத்தல்

 39. லார்வாக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஓம்புயிரி  தாவரத்தை நோக்கி செல்லும் தன்மை _____ எனப்படும்      

  (a)

  கருவுருதலுக்குப் பின்

  (b)

  வாரங்களுக்குப் பின்

  (c)

  ஸ்வார்மிங்

  (d)

  நீண்ட வடிவில்

 40. இம்முறையில் தாவரங்கள் அடுக்கின் மீது அடுக்காக கோபுரம் போன்று அமைக்கப்படுகின்றது. 

  (a)

  ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்

  (b)

  செங்குத்து நீரோட்ட வளர்ப்பு

  (c)

  நீர்சேமிப்பு

  (d)

  மண்

 41. இம்முறையில்  தாவரங்களின் கழிவுகளும் இறந்த பாகங்களும் மீன்களின் உணவாகப் பயன்படுத்துவதால் துணை உணவு வழங்குவது குறைகின்றது. 

  (a)

  பூச்சிக்கொல்லி 

  (b)

  களைகள் 

  (c)

  மீன்களுக்கான செயற்கை உணவு 

  (d)

  செயற்கை உரப் பயன்பாடு  

 42. நீர்வாழ் உயிரி வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் ________ முதல் புழக்கத்தில் உள்ளது.

  (a)

  போனிசியன்கள் காலம்  

  (b)

  நீர் வாழ் உயிரி வளர்ப்பு 

  (c)

  நீர் வாழ் உயிரி வளர்த்தல் 

  (d)

  மீன் வளர்த்தல் 

 43. இருவிதையிலைத் தாவரங்களில் ஓட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால் இருவிதையிலை தாவரங்களில்

  (a)

  வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது

  (b)

  இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.

  (c)

  சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது.

  (d)

  கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.

 44. புரோட்டோசைலக் கூறுகள் வெளிப்புறத்தை நோக்கியும், மொட்ட சைலக் கூறுகள் உள் நோக்கியும் அமைந்திருப்பது ______ எனப்படும்..

  (a)

  வெளி நோக்கி சைலம்

  (b)

  லிப்ரிஃபார்ம் நார்கள்

  (c)

  இடியோபிளாஸ்ட்கள்

  (d)

  ஸ்கிலிரைடுகள்

 45. சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  வெளி நோக்கி சைலம்

  (b)

  லிப்ரிஃபார்ம் நார்கள்

  (c)

  இடியோபிளாஸ்ட்கள்

  (d)

  ஸ்கிலிரைடுகள்

 46. வேரின் வெளிப்புற அடுக்கு பிளிஃபெரஸ் அடுக்கு அல்லது ______ எனப்படும்.

  (a)

  எபிபிளமா

  (b)

  இலைத்துளை கீழறை

  (c)

  ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்

  (d)

  பாஸ்ட் நார்கள்

 47. இருவிதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிபாட்டில் முதல் நிலை சைலம்

  (a)

  மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.

  (b)

  நசுக்கப்படும்

  (c)

  நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.

  (d)

  முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

 48. 60 வருடப் பழைய ஹோலோடைப் தட்டைப்புழு ------------------- கனடா பால்சத்தில் பொதிக்கப்பட்டுள்ளது. 

  (a)

  லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

  (b)

  ஃபெல்லோஜென் 

  (c)

  செதில்பட்டை 

  (d)

  பரவலான துளைக்கட்டை 

 49. ------------------ ஆரோ ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆகும்.

  (a)

  லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

  (b)

  ஃபெல்லோஜென்  

  (c)

  செதில்பட்டை 

  (d)

  ஏபிஸ் பால்சாமியா 

 50. ஒன்றுடன் ஒன்று மேற்கவிந்து செதில் அடுக்காகத் தோன்றினால் அது ------------------ எனப்படுகிறது.

  (a)

  லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

  (b)

  ஃபெல்லோஜென் 

  (c)

  செதில்பட்டை 

  (d)

  பரவலான துளைக்கட்டை 

 51. முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?

  (a)

  விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்

  (b)

  விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்

  (c)

  உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்

  (d)

  மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை

 52. நீரியல்  திறன் (ir ) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது இதனுடைய அலகு _________ ஆகும். 

  (a)

  புகையூட்டம் 

  (b)

  பொது கரைப்பான் 

  (c)

  பாஸ்கல் 

  (d)

  ஊடக உட்திறன் 

 53. செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் உள்ள ஈர்ப்பு  ______ எனப்படுகிறது. 

  (a)

  புகையூட்டம் 

  (b)

  பொது கரைப்பான் 

  (c)

  பாஸ்கல் 

  (d)

  ஊடக உட்திறன் 

 54. செல்சவ்வின் மூலம் செல்சுவரை நோக்கி உண்டாக்கப்படும் இவ்வழுத்தம் ________ எனப்படும். 

  (a)

  விறைப்பு அழுத்தம் 

  (b)

  சாறு 

  (c)

  நிராவிப்போக்கு 

  (d)

  நீராவிப்போக்கின் இழுவிசை 

 55. சரியானவற்றைப் பொருத்துக.

    தனிமங்கள்   பணிகள்
  A மாலிப்டினம் 1 பச்சையம்
  B துத்தநாகம் 2 மெத்தியோனின்
  C மெக்னீசியம் 3 ஆக்சின்
  D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
  (a)

  A-1 B-3 C-4 D-2

  (b)

  A-2 B-1 C-3 D-4

  (c)

  A-4 B-3 C-1 D-2

  (d)

  A-4 B-2 C-1 D-3

 56. கால்மோடுலின் என்பது  ______  அளவி மாற்றியமைக்கும் புரதம்.

  (a)

  கனிமங்கள் 

  (b)

  கால்சியத்தின் 

  (c)

  குளோரின் 

  (d)

  நிக்கல் 

 57.  ____  அயனி சமநிலைக்கு உதவுகிறது.

  (a)

  கனிமங்கள் 

  (b)

  கால்சியத்தின் 

  (c)

  குளோரின் 

  (d)

  நிக்கல் 

 58. ____ துணை அலகுகள் இணைப்பிற்குத் தேவைப்படுகிறது.

  (a)

  ஹாஸ்டோரியம் 

  (b)

  கூட்டுயிர் 

  (c)

  சல்பர் டை ஆக்ஸைடு 

  (d)

  ரைபோசம் 

 59. ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

  (a)

  ஒளியின் நீராற்பகுத்தல் PS I உடன் தொடர்புடையது

  (b)

  PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.

  (c)

  PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.

  (d)

  PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.

 60. ஒளியால் நீரை பிளந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய _____ தாவரங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு.

  (a)

  ஹைட்ரஜன்

  (b)

  ஒளியின் நீராற்பகுப்பு

  (c)

  ஸ்ரோமா

  (d)

  தைலக்காய்டு

 61. லாமெல்லாக்கள் (அ) தைலகாய்டுகள் உட்பரப்பில் சிறிய கோளவடிவ அமைப்புகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு ______ என்று பெயர்.

  (a)

  கிரானம் லாமெல்லே

  (b)

  ஸ்ட்ரோமா லாமெல்லே

  (c)

  குவாண்டோசோம்கள்

  (d)

  புரதம்

 62. கார்பாக்சிலேஸ் ஆக்ஸிஜினேஸ் நொதியானது இவ்வுலகில் அதிகமாக காணப்படும் ________ ஆகும்.

  (a)

  கிரானம் லாமெல்லே

  (b)

  ஸ்ட்ரோமா லாமெல்லே

  (c)

  குவாண்டோசோம்கள்

  (d)

  புரதம்

 63. இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  (a)

  3

  (b)

  4

  (c)

  6

  (d)

  8

 64. CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.

  (a)

  சுவாசித்தல் 

  (b)

  ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

  (c)

  இணைப்பு வினை 

  (d)

  குளுக்கோ நியோஜெனிசிஸ் 

 65. மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரண இணைவுச் செயலை கண்டறிந்தமைக்காக பீட்டர் மீட்செல் என்றன் இங்கிலாந்து உயிர் வேதியாலருக்கும் ________ வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

  (a)

  1987

  (b)

  1878

  (c)

  1978

  (d)

  1985

 66. முளைக்க வைத்த பார்லி மற்றும் திராட்சை நொதித்தலின் வாயிலாக _______ எத்தனாலாக மாறுகிறது. 

  (a)

  வீரிய சுவாசம் 

  (b)

  செல்லின் ஆற்றல் நிலையம்

  (c)

  பைருவேட் 

  (d)

  ஈஸ்ட் 

 67. தாவரங்களின் விதை உறக்கம்

  (a)

  சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

  (b)

  வளமான விதைகளை உருவாக்குதல்

  (c)

  வீரியத்தை குறைகிறது

  (d)

  விதைச்ச்சிதைவை தடுக்கிறது

 68. 1955-ல் பெரெய்ன் மற்றும் குழுவினரால் _______ எனும் வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.           

  (a)

  ஜிப்ரில்லா பியூஜிகுராய்         

  (b)

  ஜிப்ரலின்     

  (c)

  ஜிப்ரலிக் அமிலம்     

  (d)

  செல்சுவாச வீதம்  

 69. _____ எனும் திரவம் தொடர்ந்து ஏத்திலினை உற்பத்தி செய்வதால் கனி பழுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.        

  (a)

  ஏத்தாப்ன்   

  (b)

  ஜிப்ரலின்    

  (c)

  ஜிப்ரலிக் அமிலம்     

  (d)

  செல்சுவாச வீதம்  

 70. செல்லின் இடை அடுக்கு முதலாம் நிலை சுவர் _________ மற்றும் _______ நொதியின் செயல்பாட்டினால் கரைந்து விடுவதால் உதிரும் அடுக்கு உருவாகி செல்கள் தளர்வடைகிறது.      

  (a)

  ஜிப்ரில்லா பியூஜிகுராய்

  (b)

  பெக்டினேஸ் மற்றும் செல்லுலேஸ்        

  (c)

  ஜிப்ரலிக் அமிலம்    

  (d)

  செல்சுவாச வீதம்    

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Biology Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment