11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 85
    85 x 1 = 85
  1. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு _______ ஆகும்.

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  2. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  4. கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.

    (a)

    தவளை

    (b)

    மீன்

    (c)

    பறவைகள்

    (d)

    பூனை

  5. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.  

    (a)

    டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை  

    (b)

    செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.   

    (c)

    செல்சுவர் ஓரடுக்கல் ஆனது 

    (d)

    லீப்போபாலிசாக்கரைட்டுகள் கொண்ட செல்சுவர்      

  6. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

    (a)

    சலமான்டர்   

    (b)

    தவளை 

    (c)

    தண்ணீர் பாம்பு 

    (d)

    மீன்

  7. நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி______.

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறவைகள்

    (c)

    ஊர்வன

    (d)

    கடற்பஞ்சுகள்

  8. சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

    வரிசை – I வரிசை – II 
    (p) நத்தை  (i) பேய் மீன்
    (q) டென்டாலியம்  (ii) கைடான்
    (r) கீட்டோபிளூரா (iii) ஆப்பிள் நத்தை
    (s) ஆக்டோபஸ் (iv) தந்த ஓடு (Tusk shell)
    (a)
    P Q R S
    ii  iii iv
    (b)
    P Q R S
    iii iv  ii 
    (c)
    P Q R S
    ii  iv  iii 
    (d)
    P Q R S
    i ii iii iv
  9. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

    (a)

    ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்

    (b)

    பென்னாடுலா – கடல் விசிறி

    (c)

    ஆடம்சியா - கடல் பேனா

    (d)

    கார்கோனியா – கடல் சாமந்தி

  10. கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.

    (a)

    உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

    (b)

    சுவாசத்திற்கு பயன்படுகிறது

    (c)

    உணவூட்டத்திற்கு பயன்படுகிறது

    (d)

    நீரோட்டத்தை உருவாக்குகிறது

  11. விலங்குலகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி எது?

    (a)

    தொகுதி: மெல்லுடலிகள்

    (b)

    தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

    (c)

    தொகுதி: அன்னலிடா

    (d)

    தொகுதி: துளையுடலிகள்

  12. தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.

    (a)

    இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது

    (b)

    கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது

    (c)

    உணவைப் பிடித்து கடத்துகிறது

    (d)

    சுவாசத்தில் பங்கு கொள்கிறது

  13. துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

    (a)

    பின்னோக்கு வளர் உருமாற்றம்

    (b)

    மறைமுக கருவளர்ச்சி

    (c)

    டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.

    (d)

    இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.

  14. எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.

    (a)

    உணவுக் குழல்

    (b)

    மூச்சுக் குழல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்

  15. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.

    (a)

    இறுக்கமான சந்திப்புகள்

    (b)

    ஒட்டும் சந்திப்புகள்

    (c)

    இடைவெளி சந்திப்புகள்

    (d)

    மீள் தன்மை சந்திப்புகள்

  16. பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

    (a)

    பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்

    (b)

    செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்

    (c)

    செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

    (d)

    செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

  17. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது _______.

    (a)

    13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

    (b)

    14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

    (c)

    12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

    (d)

    14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

  18. பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை_______.

    (a)

    நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திப்பில், தோராயமாக 150

    (b)

    முன்குடல் மற்றும் நடுக்குடல் சந்திப்பில் ,தோராயமாக 150.

    (c)

    அரைவைப்பையினைச் சூழ்ந்து 8.

    (d)

    பெருங்குடல் மற்றும் மலக்குடல் சந்திப்பில் 8.

  19. தவளையின் சிறுநீரகம் _______.

    (a)

    ஆர்க்கிநெஃப்ராஸ்

    (b)

    புரோநெஃப்ராஸ்

    (c)

    மீசோநெஃப்ராஸ்

    (d)

    மெட்டாநெஃப்ரோஸ்

  20. மண்புழுவில் மேலுதடு எனப்படுவது

    (a)

    பெரிஸ்டோமியம்

    (b)

    புரோஸ்டோமியம்

    (c)

    பைஜிடியம்

    (d)

    மெட்டமியர்

  21. மண்புழுவில் கருமுட்டை கூட்டை உருவாகும் சுரப்பி செல்கள் இங்கு காணப்படுகிறது.

    (a)

    பெரிஸ்டோமியம் 

    (b)

    புரோஸ்டோமியம்

    (c)

    கிளைடெல்லம்

    (d)

    பைஜிடியம்

  22. கரப்பான்பூச்சியில் யூரிகோஸ் சுரப்பியின் பணி

    (a)

    நொதிகளைச் சுரப்பது

    (b)

    ஹார்மோன்களைச் சுரப்பது

    (c)

    இனபெருகச் செல்களைச் சுரப்பது

    (d)

    கழிவு நீக்கத்தில் ஈடுபடுகிறது

  23. கரப்பான்பூச்சியில் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைக் கூட்டை சுரப்பது

    (a)

    கொல்லேட்ரியல் சுரப்பிகள்

    (b)

    காளான் வடிவச் சுரப்பி

    (c)

    யூட்ரிகுலார் சுரப்பு

    (d)

    கான்குளோபேட் சுரப்பி

  24. தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____ 

    (a)

    வலது ஆரிக்கிள்கள்

    (b)

    சைனஸ் வினோஸஸ்

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    வென்ட்ரிகிள்

  25. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது_______.

    (a)

    குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்

    (b)

    இரைப்பை சுவர்

    (c)

    பெருங்குடல்

    (d)

    குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

  26. சரியான இணைகளை உருவாக்குக

    வரிசை –I வரிசை –II 
    P) சிறுகுடல் i) 23 செ.மீ
    Q) பெருகுடல் ii) 4 மீட்டர்
    R) உணவுக்குழல் iii) 12.5 செ.மீ
    S) தொண்டை iv) 1.5 மீ
    (a)
    P Q R S
    iv ii i iii
    (b)
    P Q R S
    ii iv i iii
    (c)
    P Q R S
    i iii ii iv
    (d)
    P Q R S
    iii ii iv
  27. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

    (a)

    இன்சுலின் உற்பத்தி

    (b)

    நச்சு நீக்கம்

    (c)

    கிளைக்கோஜின் சேமிப்பு

    (d)

    பித்த நீர் உற்பத்தி

  28. ஹாஸ்டிரா இங்கு காணப்படுகின்றன. இவைகள் பைபோன்ற அமைப்புகள்

    (a)

    முன் சிறுகுடல்

    (b)

    இடைச் சிறுகுடல்

    (c)

    பின் சிறுகுடல்

    (d)

    மலக்குடல்

  29. சரியானவற்றைப் பொறுத்துக.

    வ. எண் வரிசை I   வரிசை II
    1 கணையம் a. வார்டனின் நாளம் 
    2. மேலண்ணச் சுரப்பி b. பர்தோலின் நாளம்
    3. நாவடிக் சுரப்பி c. ஸ்டென்சன் நாளம்
    4. கீழ்த் தாடை சுரப்பி d. விர்தங் நாளம் 
    (a)
    1 2 3 4
    d c b a
    (b)
    1 2 3 4
    a c d b
    (c)
    1 2 3 4
    d b a c
    (d)
    1 2 3 4
    e a b d
  30. உட்கிரகிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்த இரத்த நாளத்தின் மூலம் சிறுகுடலில் இருந்து கல்லீரலை அடைகிறது. 

    (a)

    கல்லீரல் சிரை

    (b)

    கல்லீரல் போர்ட்டல் சிரை 

    (c)

    கல்லீரல் தமனி 

    (d)

    கல்லீரல்போர்ட்டல் தமனி

     

  31. பெருங்குடலில் காணப்படும் இணைவாழ் பாக்டீரியாவில், நார்பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.

    (a)

    சோடியம்

    (b)

    இரும்பு தனிமம்

    (c)

    கழிவுப் பொருள்

    (d)

    வைட்டமின் K

  32. பித்தக் கற்கள் எதனால் ஆனது?

    (a)

    பித்த உப்புகள்

    (b)

    பித்த நிறமிகள்

    (c)

    பித்த நீர்

    (d)

    கொலஸ்டிரால்

  33. பாலுவின் உடல் எடை 80 கிலோகிராம் மற்றும் அவருடைய உயரம் 1.7 மீட்டர் ஆகும். அவருடைய உடல் எடைக் குறியீட்டைக் கண்டுபிடி

    (a)

    25.3

    (b)

    27.6

    (c)

    26.4

    (d)

    24.6

  34. உட்சுவாசத்தின் போது உதரவிதானம் ______.

    (a)

    விரிவடைகிறது 

    (b)

    எந்த மாற்றமும் இல்லை 

    (c)

    தளர்ந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது 

    (d)

    சுருங்கித் தட்டையாகிறது 

  35. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை ______.

    (a)

    கார்பானிக் அமிலம் 

    (b)

    ஆச்சிஹீமோகுளோபின் 

    (c)

    கார்பமினோஹீமோகுளோபின் 

    (d)

    கார்பாக்சி ஹீமோகுளோபின் 

  36. பத்தி I இல்நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு

    பத்தி- I பத்தி-II
    P) ஆஸ்துமா i) அடிக்கடி உருவாகும்
    மார்புசளி
    Q) எம்ஃபைசீமா ii) காற்று நுண்ணறைகளில்
    வெள்ளையணுக்கள் குழுமுதல்
    R) நிமோனியா iii) ஒவ்வாமை
    (a)
    P Q R
    iii ii i
    (b)
    P Q R
    iii i ii
    (c)
    P Q R
    ii iii i
    (d)
    P Q R
    ii i iii
  37. குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.

    (a)

    குரல்வளை

    (b)

    தொண்டை

    (c)

    உணவுக்குழல்

    (d)

    மூச்சுக்குழல்

  38. திசுக்களில் CO2 ன் பகுதி அழுத்தம் _________________ மி,மீ பாதரசம்.

    (a)

    45

    (b)

    40

    (c)

    90

    (d)

    0.3

  39. இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.

    (a)

    6

    (b)

    8

    (c)

    10

    (d)

    12

  40. கார்பானிக் அன்ஹைட்ரேஸ் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது .

    (a)

    பிளாஸ்மாவில்

    (b)

    நுண்காற்றறையில் 

    (c)

    நுரையீரல்

    (d)

    இரத்த சிவப்பணுக்களில்

  41. நுரையீரல்கள் மற்றும் எழும்புகளைப் பாதிக்கும் நோய் 

    (a)

    எம்ஃபைசீமா

    (b)

    காசநோய்

    (c)

    நிமோனியா

    (d)

    ஆஸ்துமா

  42. நிணநீரின் பணி யாது?

    (a)

    மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

    (b)

    CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

    (c)

    செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

    (d)

    இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

  43. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

    (a)

    A

    (b)

    B

    (c)

    AB

    (d)

    O

  44. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

    (a)

    50

    (b)

    100

    (c)

    150

    (d)

    400

  45. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    அல்புமின் 

    (b)

    குளோபுலின் 

    (c)

    ஃபைப்ரினோஜன் 

    (d)

    புரோத்ராம்பின் 

  46. சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____ 

    (a)

    எலும்பு மஜ்சை  

    (b)

    கல்லீரல் 

    (c)

    தண்டு செல்கள் 

    (d)

    சிறுநீரகம் 

  47. கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்த வெள்ளை அணுக்கள் 

    (c)

    இரத்தத் தட்டுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  48. நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம் 

    (a)

    வலது ஆரிக்கிள் 

    (b)

    வலது வெண்ட்ரிக்கிள் 

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    இடது வெண்ட்ரிக்கிள்

  49. மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ  பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.

    (a)

    60

    (b)

    70

    (c)

    80

    (d)

    90

  50. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன

    (b)

    நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்

    (c)

    DNA அல்லது RNA- வை கொண்டுள்ளன

    (d)

    நொதிகள் காணப்படுகின்றன

  51. தொல்லுட்கரு உயிரிகளில் காணப்படாத பண்பு எது? 

    (a)

    உட்கரு காணப்படுகிறது 

    (b)

    ரைபோசோம் காணப்படுகிறது 

    (c)

    எமைட்டாசிஸ் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது 

     

     

     

    (d)

    செல் நுண்ணுறுப்புகள் காணப்படுவதில்லை. 

  52. பாக்டீரியாவை உயிர்எதிர் பொருட்களிலிருந்து பாதுகாப்பது

    (a)

    பிளாஸ்மிட்

    (b)

    ஃபிம்ரியே

    (c)

    கிளைக்கோகேலிக்ஸ்

    (d)

    பாலிசோம்

  53. கடலின் சிவப்புநிறத்திற்கு [செங்கடல்] காரணமான சயனோபாக்டீரியா எது?

    (a)

    நாஸ்டாக்

    (b)

    சைடோனீமா

    (c)

    டிரைக்கோடெஸ்மியம் எரித்ரேயம்

    (d)

    அனபீனா 

  54. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஸ்கோகனியுறுப்புகள் வகைகளில் தவறான ஜோடியை கண்டுபிடி.

     

    (a)
    வ.எண் ஆஸ்கோ கனி வகை வடிவம் 
    அ. அப்போதீசியம்     கோப்பை வடிவம்
    (b)
    வ.எண் ஆஸ்கோ கனி வகை வடிவம் 
    ஆ. சூடோதீசியம்    பை வடிவம்
    (c)
    வ.எண் ஆஸ்கோ கனி வகை வடிவம் 
    இ.  கிளிஸ்டோதீசியம் முழுமையாக மூடியது
    (d)
    வ.எண் ஆஸ்கோ கனி வகை வடிவம் 
    ஈ. பெரிதீசியம்  குடுவை வடிவம்
  55. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை ______.

    (a)

    7

    (b)

    14

    (c)

    42

    (d)

    28

  56. இந்த வகை வாழ்க்கை சுழற்சி உயிரிகளில் வித்தகத் தாவர நிலை (2n) ஒங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன்பெற்று சார்பின்றி வாழ்கின்றன.

    (a)

    இரட்டைமடிய கேமீட் உயிரி

    (b)

    ஒற்றை இரட்டை மடிய கேமீட்  உயிரி

    (c)

    ஒற்றை மடிய கேமீட்  உயிரி

    (d)

    இரட்டை ஒற்றை மடிய கேமீட்  உயிரி

  57. இராட்சத கடல் பாசிக்கு எடுத்துக்காட்டு 

    (a)

    யூலோத்ரிக்ஸ்

    (b)

    ஊடோகோணியம்  

    (c)

    கிளாமிடோமோனஸ்

    (d)

    லாமினேரியா

  58. தங்கப்பழுப்பு நிறமியான ஃபியுக்கோஸாந்தின் இந்த வகுப்பு பாசியில் காணப்படுகிறது.

    (a)

    குளோரோஃபைசி 

    (b)

    ஃ பியோஃபைசி

    (c)

    ரோடோஃபைசி 

    (d)

    யூக்ளினோஃபைசி 

  59. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  60. மேக்னோலியோஃபைட்கள் என்பது _____ தாவரங்களாகும்.

    (a)

    மூடுவிதைத்தாவரங்களாகும்

    (b)

    பலகாய்ப்புத் தாவரங்களாகும்

    (c)

    திறந்த விதைத்தாவரங்களாகும்

    (d)

    ஒரு காய்ப்புத் தாவரங்கள்

  61. தாவரத்தின் தண்டு கிளைத்தலை நிர்ணயிப்பது எது?

    (a)

    நுனி ஆக்குத்திசுக்கள்

    (b)

    இடையாக்கு திசுக்கள்

    (c)

    பக்க ஆக்குதிசுகள்

    (d)

    நிரந்தர திசுக்கள்

  62. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இது புறத்தோன்றியாகும்.

    (a)

    முதன்மை வேர்கள் மற்றும் பக்கக்கிளைகள்

    (b)

    பக்கவேர்கள் மற்றும் இலைத்தொகுதி

    (c)

    பக்கக்கிளைகள் மற்றும் பக்க வேர்கள்

    (d)

    பக்கக்கிளைகள் மற்றும் இலைகள்

  63. பொருத்துக: இலை அடுக்கமைவு வகைகளை அதனைப் பெற்றுள்ள தாவரத்தோடு பொருத்துக.

    வ.எண் இலை அடுக்கமைவு வகை தாவரத்தின் பெயர்
    I. மூவிலை அடுக்கமைவு a. கலோட்ராபிஸ்
    II. வட்டஇலை அடுக்கமைவு b. நீரியம்
    III. குறுக்கு மறுக்கு எதிரிலைமைவு c. சிடியம்
    IV. ஒரு போக்கு எதிரிலை அடுக்கமைவு d. அலமாண்டா
    (a)

    I. b, II. d, III. a, IV. c

    (b)

    I. b, II. c, III. d, IV. a

    (c)

    I. b, II. c, III. d, IV. b

    (d)

    I. b, II. d, III. c, IV. a

  64. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    இணையாச் சூலகஇலை சூலகம்

    (b)

    பல சூலகஇலை சூலகம்

    (c)

    இணைந்த சூலகஇலை சூலகம்

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  65. சைம் வகை மஞ்சரியில் காணப்படாத பண்பு எது? 

    (a)

    மஞ்சரி அச்சு வரம்புடைய வளர்ச்சியுடையது.

    (b)

    மலர்தல் மையம் நோக்கியது.

    (c)

    முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும். 

    (d)

    மலர்கள் அடி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும்.

  66. சிறுகதிர் மஞ்சரியில் லெம்மா எனப்படுவது __________ ஆகும்.

    (a)

    பூக்காம்புச் செதில் 

    (b)

    மஞ்சரி அடிச்செதில்  

    (c)

    பூவடிச்செதில் 

    (d)

    நிறமற்ற பூவிதழ்கள் 

  67. கொட்டைக் கனியில் உண்ணும்பகுதி 

    (a)

    சூற்பை 

    (b)

    பூத்தளம் 

    (c)

    பூக்காம்பு 

    (d)

    பூவிதழ்கள் 

  68. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்_______.

    (a)

    சீரோஃபிஜியா

    (b)

    தெவிஷியா 

    (c)

    டட்டுரா

    (d)

    சொலானம்

  69. ஒத்த பண்புகளோடு அமைந்த குடும்பங்களின் தொகுப்பு  

    (a)

    வரிசை 

    (b)

    துறை 

    (c)

    பிரிவு 

    (d)

    பேரினம் 

  70. குரோமோசோம்களின் பண்புகள் மாறும் நிகழ்வுகளில் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு, சிக்கல்களை களைவது _____ எனப்படும்     

    (a)

    வேதிமுறை வகைப்பாடு 

    (b)

    மூலக்கூறு வகைப்பாடு

    (c)

    குருதி நீர்ச்சார் வகைப்பாடு   

    (d)

    கேரியோடாக்ஸானமி       

  71. சோலானம்  டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி    

    (a)

    வேர் 

    (b)

    தண்டு 

    (c)

    மொட்டு 

    (d)

    சல்லிவேர்கள் 

  72. ஸ்கேப்பிஜிரஸ் வகை மஞ்சரி இத்தாவரத்தில் காணப்படுகிறது          

    (a)

    அல்லியம் சட்டைவம் 

    (b)

    அல்லியம் சீபா 

    (c)

    அலோ வீரா 

    (d)

    அஸ்பாரக்ஸ் அ ∴பிஸினாலிஸ்      

  73. பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

    பட்டியல் I பட்டியல் II
    அ) தைலாய்டுகள் (i) தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
    ஆ) கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
    இ) சிஸ்டர்னே (iii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
    ஈ) குரோமாட்டின் (iv) மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (iv) (ii) (i)
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    (iv ) (iii) (i) (i i)
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (iv) (i) (ii)
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (i) (iv) (ii)
  74. தாவரசெல்லின் செல்சுவர் பாகம் குறித்த அனைத்து வாக்கியங்களும் சரியானது.இதனைத் தவிர.      

    (a)

    செல்சுவர் உருவாக்கத்தில் முதலில் உருவாக்குவது  முதன்மை சுவர்   

    (b)

    பாரன்கைமா மற்றும் ஆக்குத்திசுக்களில் இரண்டாம் நிலைசுவர் காணப்படுகிறது.       

    (c)

    இரண்டாம் நிலைசுவரில் S1,S2,S3 அடுக்குகள் உள்ளன    

    (d)

    சைட்டோபிளாசா பகுப்பின்போது மையத்தட்டு உருவாகிறது     

  75. வழவழப்பான எண்டோபிளாசா வலையின் பணியல்ல     

    (a)

    தீமை விளைவிக்கும் சில வேதிச் சேர்மங்களை நொதிகள் மூலம் நீக்குகிறது     

    (b)

    லிப்பிடில் கரையும் மருந்துப் பொருட்களை நொதிகள் மூலம் நீக்குகிறது.    

    (c)

    நச்சுப் பொருட்களை நீக்க உதவும் நொதிகளைப் பெற்று இருக்கிறது.    

    (d)

    புரதச் சேர்க்கை நடைபெறும் இடமாக உள்ளது  

  76. ரைபோசோமின் இரு துணை அலகுகளும் ஓட்டியிருப்பது _______ செறிவைப் பொருத்தது.           

    (a)

    Ca2+ 

    (b)

    Mn2+ 

    (c)

    Mg2+ 

    (d)

    Mo2+ 

  77. தவறான வாக்கியத்தை கண்டுபிடி.                 

    (a)

    பீட்ருட் செல்களின் வாக்குவோல்களில் ஆந்தோசையோனின் நிறமி அதிகம் உள்ளது.

    (b)

    விலங்கு செல்களில் வாக்குவோல்கள் டோனோபிளாஸ்ட்டு எனும் சவ்வினால் சூழப்பட்டுள்ளது

    (c)

    சவ்வூடு பரவல் மூலம் நீர் செல்லைச் சென்றடைய வாக்குவோல்கள் உதுவுகின்றன.

    (d)

    சுக்ரோஸ் சேர்மங்கள் தாவர வாக்குவோல்களில் சேமிப்பு பொருளாக காணப்படுகிறது

  78. யூகேரியோட்டிக் குரோமோசோமில் (DNA) எந்த நிலையில் mRNA எடுத்தால் நடைபெறுவதில்லை         

    (a)

    இடைக்கால நிலை 

    (b)

    பகுப்பிடைக்காலம்     

    (c)

    அனாஃபேஸ்    

    (d)

    டீலோஃபேஸ்    

  79. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்.

    (a)

    குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

    (b)

    குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

    (c)

    குரோமோசோம்கள் பிரிவுறாது

    (d)

    குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

  80. குரோமோசோமில் அதன் மரபுப் பொருள் இரட்டிப்படைவது

    (a)

    செல்பகுப்பின் போது 

    (b)

    இரு உட்கரு பகுப்புகளுக்கிடையே 

    (c)

    செல்பகுப்பிற்கு முன்பு 

    (d)

    இரு சைட்டோபிளாச பகுப்புகளுக்கிடையே 

  81. ஒத்திசைவு குரோமோசோம்கள் இத்துணை நிலையில் இணை சேர்கின்றன?

    (a)

    லெப்டோடீன்

    (b)

    சைக்கோட்டீன்

    (c)

    பாக்கிடீன்

    (d)

    டிப்லோட்டீன்

  82. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.

    (a)

    லைகேஸ்சுகள் 

    (b)

    லையேஸ்கள் 

    (c)

    ஹைட்ரோலேசுகள்

    (d)

    ஐசோமியரேசுகள்

  83. இதன் அடிப்படை N-அசிட்டைல் குளுக்கோசமைன் எனப்படும் நைட்ரஜன் கொண்ட குளுக்கோஸ் வழித்தோன்று பொருள் எது?

    (a)

    கைட்டின் 

    (b)

    கிளைக்கோஜன் 

    (c)

    பெக்டின் 

    (d)

    தரசம் 

  84. பிரக்டோஸ்கள் ஆன பாலிமர் _______ ஆகும்.

    (a)

    அகார்  அகார் 

    (b)

    ஹெபரின் 

    (c)

    இனுலின் 

    (d)

    கைட்டின் 

  85. எந்த வகை RNA அதிகக் கரையும் தன்மையுடையது.

    (a)

    mRNA 

    (b)

    tRNA 

    (c)

    rRNA 

    (d)

    RNA 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment