+1 Public March 2019 Official Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

    (a)

    2 மோல்கள் HCl (g)

    (b)

    0.5 மோல்கள் HCl (g)

    (c)

    1.5 மோல்கள் HCl (g)

    (d)

    1 மோல்HCl (g)

  2. பின்வருவனவற்றுள் எதற்கு ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாடு சிக்கலானது?
    I. ஹைட்ரஜன் II. நைட்ரஜன் இவற்றுள்

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  3. கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
    காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

    (d)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது

  4. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    அதிகமாகிப் பின் குறைகிறது

    (d)

    குறைந்து பின் அதிகரிக்கிறது

  5. கூற்று : பொதுவாக கார  மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாகுக்கின்றன.
    காரணம் : சூப்பர் ஆக்சைடுகளில் O மற்றும் O அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது.    

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிக்கான சரியான விளக்கமாகும்.   

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல. 

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு  

    (d)

    கூற்று சரி காரணம் இரண்டும்  தவறு. 

  6. 400K ல் 71.0 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு

    (a)

    22.04 dm3

    (b)

    2.24 dm3

    (c)

    0.41 dm3

    (d)

    19.5dm3

  7. சரியான சமன்பாட்டை தேர்ந்தெடு 

    (a)

    \(\eta={T_1-T_2\over T_1}\times 100\)

    (b)

    \(\eta={T_1T_2\over T_1+T_2}\times 100\)

    (c)

    \(\eta={T_1+T_2\over T_1}\times 100\)

    (d)

    \(\eta={T_1-T_2\over T_1T_2}\times 100\)

  8. N2(g) மற்றும் H2(g) ஆகியவற்றிலிருந்து NH3 உருவாதல் ஒரு மீள் வினையாகும்
    N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat இவ்வினையின் மீது வெப்பநிலை உயர்வினால்
    ஏற்படும் விளைவு என்ன?

    (a)

    சமநிலையில் மாற்றமில்லை

    (b)

    அம்மோனியா உருவாதலுக்கு சாதகமாக உள்ளது.

    (c)

    சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்.

    (d)

    வினையின் வேகம் மாறாது.

  9. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது

    (a)

    வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன

    (b)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.

    (c)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  10. நிறம் கொண்ட கரிமச் சேர்மங்களின் நிறத்தை நீக்கப் பயன்படுவது

    (a)

    விலங்கு கரித்தூள்

    (b)

    கார்பன்

    (c)

    கரி

    (d)

    அசுச்சிவப்புக் கதிர்கள்

  11. பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?

    (a)

    sp2

    (b)

    spd2

    (c)

    sp3

    (d)

    sp2d

  12. சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு

    (a)

    CnHn

    (b)

    CnH2n

    (c)

    Cn H2n–2

    (d)

    Cn H2n+2

  13. ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது   

    (a)

    அல்கேன் 

    (b)

    ஆல்கீன் 

    (c)

    ஆல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  14. பின்வருவனவற்றை பொருத்துக.[குடிநீருக்கானது]

      பண்பியல்புகள்    விரும்பத்தக்க எல்லை 
    A . pH  1. 6.5 to 8.5
    நைட்ரேட்  2. 45 ppm 
    C. குளோரைடு  3. 250 ppm 
    D. சல்பேட்  4. 200 ppm 
    (a)
    A    B    C    D  
    1 2 3 4
    (b)
    A    B    C    D  
    1 3 4 2
    (c)
    A    B    C    D  
    1 4 3 2
    (d)
    A    B    C    D  
    1 2 4 3
  15. 250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி

    (a)

    0.2 M

    (b)

    0.01 M 

    (c)

    0.02 M

    (d)

    0.04 M

  16. 6 x 2 = 12
  17. எது அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டுள்ளது?
    (i) 1 மோல் எத்தனால் (ii) 1 மோல் பார்மிக் அமிலம் (iii) 1 மோல் H2O

  18. செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

  19. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

  20. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  21. சமநிலை மாறிலி மதிப்பு
    \({ K }_{ c }=\frac { { [{ NH }_{ 3 } }]^{ 4 }{ [{ O }_{ 2 } }]^{ 7 } }{ { [NO] }^{ 4 }{ [{ H }_{ 2 }O }]^{ 6 } } \) கொண்ட ஒரு சமநிலை வினை க்கான , தகுந்த சமன்செய்யப்பட்ட வேதி சமன்பாட்டை தருக.

  22. எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  23. உர்ட்ஸ் வினையை எழுது.    

  24. மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  25. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  26. 6 x 3 = 18
  27. விதைச்சிதைவு வினையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  28. பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?

  29. டியூட்ரியத்தின் பயன்களைக் கூறுக.

  30. ஒரு உலோகத்தினை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்யும் போது ஹைட்ரஜன் உருவாகிறது. ஒரு மாணவன் இந்த வினையின் மூலம் 154.4x10-3 கனஅளவுள்ள வாயுவினை 742 mm Hg அழுத்தத்தில் மற்றும் 298K வெப்பநிலையில் சேகரிக்கிறான் எனக் கருதவும்.மாணவன் சேகரித்த ஹைட்ரஜன் வாயுவின் நிறை என்ன?

  31. பின்வரும் தரவுகளிலிருந்து எத்திலீனை ஹைட்ரஜனேற்றம் செய்யும் வினையின் என்தால்பி மதிப்பை காண்க. C-H, C-C, C=C மற்றும் H-H ஆகிய பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்கள் முறையே 414,347,618 மற்றும் 435 kJ mol-1

  32. 1 atm NO மற்றும் 1 atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்டு NO ன் வளிமண்டல ஆக்ஸிஐனேற்ற வினை 
    \(2NO(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\)
    ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52 atm எனில் இவ்வினைக்கான Kp ன் மதிப்பை காண்க.    

  33. 0.2175 g நிறையுள்ள, சல்பரை கொண்டுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் முறைப்படி அளந்தறியப்பட்டு 0.5825g BaSO4 யைக் கொடுக்கிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள S ன் சதவீதத்தினை கணக்கிடுக.

  34. காட்டர்மான் வினையை எழுதுக.

  35. குளிர்ப்பிரதேசங்களில் பயணிக்கும் கார்களின் ரேடியேட்டர்களில், உறைதடுப்பானாக எத்திலீன் கிளைக்காலை (C2H2O2) பயன்படுத்த முடியும். கார் ரேடியேட்டர்களில், பயன்படுத்தப்பட்டுள்ள, 20 நிறை சதவீத கிளைக்காலின் நீர்க் கரைசலிலிருந்து பனிக்கட்டி படிகங்கள் உருவாகி பிரியும்போது உள்ள வெப்பநிலையை கணக்கிடுக. நீரின் Kf = 1.86 K Kg mol-1 மதிப்பு மற்றும் எத்திலீன் கிளைக்காலின் மோலார் நிறை 62 g mol-1.

  36. 5 x 5 = 25
  37. எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

  38. அமைதி நிலையில் உள்ள ஒரு எலக்ட்ரான் 100V மின்னழுத்த வேறுபாட்டைக் கொண்டு முடுக்குவிக்கப்படும் போது, அந்த எலக்ட்ரானின் டிபிராக்ளி அலைநீளத்தைக் கண்டறிக.

  39. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

  40. இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.

  41. C2H5OH(l)+3O2(g)\(\rightarrow \)2CO2(g)+ 3H2O(l) என்ற வினைக்கு திட்ட என்தால்பி மாற்ற மதிப்பை கணக்கிடுக.C2H5OH(l),2CO2(g) மற்றும் H2O(l) ஆகியவற்றின் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே 277,-393.5 மற்றும் -285.5kJ mol -1

  42. பின்வரும் வினையினைக் கருதுக.
    Fe3+(aq) + SCN(aq) ⇌ [Fe(SCN)]2+(aq)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x10-3m மற்றும் 8x10-4m என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2x10-4m சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.

  43. BF3 லூயிஸ் வடிவமைப்பை வரைந்து, அது எவ்வாறு எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதிவிலக்கினைப் பெற்றுள்ளது என விவரி.

  44. இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.

  45. தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
    (i) வினைதிறன்
    (ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை.  

  46. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
    KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment