வேதிப் பிணைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. இரு முனை திருப்புத் திறன் என்றால் என்ன?

  2. கார்பன்டையாக்சைடு மூலக்கூறின் நேர்க்கோட்டு வடிவமானது இரண்டு முனைவுற்ற பிணைப்புகளை கொண்டுள்ளது. எனினும் மூலக்கூறு பூஜ்ஜிய இருமுனை திருப்புத்திறனை பெற்றுள்ளது ஏன்?

  3. BeCl2 மற்றும் MgCl2 ஆகியவற்றில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக .

  4. பிணைப்பு ஆற்றல் வரையறு.

  5. ஹைட்ரஜன் வாயுவானது ஈரணு மூலக்கூறாகும், அதேசமயம் மந்த வாயுக்கள் ஓரணு வாயுக்களாகும்- மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கையின் அடிப்படையில் விளக்குக.

  6. x- அச்சை மூலக்கூறு அச்சாகக் கருதினால், பின்வருவனவற்றுள் எவை சிக்மா பிணைப்பை உருவாக்கக்கூடும்?
    i) 1s மற்றும் 2py
    ii) 2Px மற்றும் 2Px
    iii) 2px மற்றும் 2pz
    iv) 1s மற்றும் 2pz

  7. எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.

  8. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று அதிகபட்ச பிணைப்புத் தரத்தைக் கொண்டுள்ளது?
    \(\mathrm{N}_{2}, \mathrm{~N}_{2}^{+}\) அல்லது \(\mathrm{~N}_{2}^{-}\)

  9. அயனிப் பிணைப்பிலுள்ள சகப்பிணைப்புத் தன்மையை விளக்குக.

  10. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

  11. ஒற்றை எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகளை நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடின் லூயிஸ் வடிவமைப்பை எழுதுக.

  12. பெர்ரொசயனைடு அயனியில் உள்ள பிணைப்பு எவ்வகையானது என விளக்குக.

  13. அமோனியா BF3 உடன் நிகழ்த்தும் பிணைப்பை விளக்குக.

  14. பிணைப்புக் கோணம் வரையறு. அதை எவ்வாறு கண்டறியலாம்.

  15. எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வேதிப் பிணைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Chemical Bonding Two Marks Questions )

Write your Comment