ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
   

 2. A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.

 3. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

 4. (A) மற்றும் (B) ஆகியன C2H4Cl2 என்ற வாய்ப்பாடுடைய இரு மாற்றியங்கள். சேர்மம் (A) ஆனது நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. சேர்மம் (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H6O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (D) ஐத் தருகிறது. A, B, C மற்றும் D ஐக் கண்டறிக, வினைகளை விளக்குக.

 5. காட்டர்மான் வினையை எழுதுக.

 6. பென்சீன் டையசோனியம் குளோரைடு பொட்டாசியம் அயோடைடுடன் புரியும் வினை யாது?

 7. அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது? 

 8. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

 9. பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
  (i) எத்திலின் குளோரைடு 
  (ii) எத்திலிடின் டைகுளோரைடு 

 10. குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
  அ. ஹலேஜனேற்றம் 
  ஆ. நைட்ரோ ஏற்றம் 
  இ.சல்போனேற்றம் 
  ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Haloalkanes And Haloarenes Three Marks Questions )

Write your Comment