தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்

  (a)

  bibibiium

  (b)

  bididium

  (c)

  didibium

  (d)

  bibibium

 2. A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2,3p5 ஆகும்.இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.

  (a)

  AB

  (b)

  AB2

  (c)

  A2B

  (d)

  எதுவும் இல்லை

 3. பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

  (a)

  குளோரின்

  (b)

  நைட்ரஜன்

  (c)

  சீசியம்

  (d)

  புளூரின்

 4. மூன்றாம் வரிசையினுடைய முதல் அயனியாக்கும் ஆற்றலின் வரிசை

  (a)

  Na > Al > Mg > Si > P

  (b)

  Na < Al < Mg < Si < P

  (c)

  Mg > Na > Si > P > Al

  (d)

  Na < Al < Mg < P < Si

 5. பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?

  (a)

  Al < O < C < Ca < F

  (b)

  Al < Ca < O < C < F

  (c)

  C < F < O < Al < Ca

  (d)

  Ca < Al < C < O < F

 6. பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

  (a)

  புரோமின்

  (b)

  குளோரின்

  (c)

  அயோடின்

  (d)

  ஹைட்ரஜன்

 7. நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்

  (a)

  ஹைட்ரஜன்

  (b)

  சோடியம்

  (c)

  ஆர்கான்

  (d)

  புளூரின்

 8. முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு

  (a)

  1s2, 2s2, 2p6,3s1

  (b)

  1s2, 2s2, 2p6,3s2

  (c)

  1s2, 2s2, 2p6,3s2, 3p6,4s1

  (d)

  1s2, 2s2, 2p6,3s2,3p1

 9. பின்வரும் தனிமங்களுள் இரண்டாவதாக அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

  (a)

  குளோரின்

  (b)

  புளூரின்

  (c)

  ஆக்ஸிஜன்

  (d)

  சல்பர்

 10. கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை

  (a)

  s>p>d>f

  (b)

  s>p>f>d

  (c)

  f>d>p>s

  (d)

  f>p>s>d

 11. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

  (a)

  பொதுவாக அதிகரிக்கின்றது

  (b)

  பொதுவாக குறைகின்றது

  (c)

  எவ்வித மாற்றமுமில்லை

  (d)

  முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது

 12. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?

  (a)

  Be மற்றும் Mg

  (b)

  Li மற்றும் Mg

  (c)

  Be மற்றும் B

  (d)

  Be மற்றும் Al

 13. ஃப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ப்ளுரின்

  (a)

  அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  (b)

  குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  (c)

  அதே அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 14. CI- அயனியின் கடைசி எலக்ட்ரானின் Z செயலுறு மதிப்பு.

  (a)

  8.75

  (b)

  5.75

  (c)

  6.75

  (d)

  7.75

 15. குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட பண்புகள் திரும்ப அமைவது

  (a)

  இயற்பியல் பண்புகள்

  (b)

  வேதிப்பண்புகள்

  (c)

  காந்தப்பண்புகள்

  (d)

  ஆவர்த்தன பண்புகள்

 16. ஆற்றல் மட்டங்கள் அதிகரிப்பின் விளைவு

  (a)

  அணுக்கரு சுமையைக் குறைக்கிறது

  (b)

  அணு ஆரத்தை அதிகரிக்கச் செய்கிறது

  (c)

  அணு ஆரத்தை குறைக்கிறது

  (d)

  அயனியாக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது

 17. பின்வருவனவற்றுள் எலக்ட்ரான் நாட்டம் ஒரு

  (a)

  வெப்ப உமிழ்வினை

  (b)

  வெப்ப மாறா வினை

  (c)

  அழுத்தம் மாறா வினை

  (d)

  வெப்ப கொள் வினை

 18. பின்வரும் IE மதிப்பு ஒப்பீட்டை கவனி
  I. Mg > Na
  II. F >O
  III. Be > Li
  IV. F > Ne
  இவற்றுள், தவறான ஒப்பீடு எது?

  (a)

  I, II

  (b)

  II, IV

  (c)

  II

  (d)

  IV

 19. கூற்று (A): F ஐவிட Cl- எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகம்
  காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை

  (a)

  கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

  (b)

  (A) என்பது சரியான கூற்று (R) என்பது தவறான விளக்கம்

  (c)

  (A) சரி, (R) சரி, (R) என்பது சரியான விளக்கம்

  (d)

  (A) தவறு, (R) தவறு

 20. A, B மற்றும் C தனிமங்களின் முதல் அயனியாக்கும் ஆற்றல் (IE1) மற்றும் அயனியாக்கும் ஆற்றல் (IE2) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  தனிமம்  A B C
  IE1 kJ mol-1 2370 522 1680
  IE2 kJ mol-1 5250 7298 3381

   மேற்கண்ட எந்த தனிமம் அதிக வினைபுரியும் உலோகம்?

  (a)

  A

  (b)

  B

  (c)

  C

  (d)

  A மற்றும் C

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry Periodic Classification Of Elements One Marks Model Question Paper )

Write your Comment