அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?

 2. n = 4க்கு சாத்தியமான ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுக. 

 3. 2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.

 4. சரிபாதியளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் நிலைப்புத்தன்மை பெறுதல் p- ஆர்பிட்டாலைக் காட்டிலும் d – ஆர்பிட்டாலில் அதிகமாக உள்ளது. ஏன்?

 5. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

  (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
  (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

 6. ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக

 7. 5400Å பச்சை நிற ஒளியின் அலை நீளத்திற்கு சமமான டிபிராக்ளி அலைநீளத்தினைப் பெற 54g டென்னிஸ் பந்து எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும்?

 8. பின்வரும் ஒவ்வொன்றிற்கும், துணைக்கூட்டின் குறியீடு, அனுமதிக்கப்பட்ட m மதிப்புகள் கள் மற்றும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைத் தருக.
  i) n = 4, l =2, ii) n =5, l = 3 iii) n=7, l=0

 9. Mn2+ மற்றும் Cr3+ ஆகியனவற்றின் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

 10. ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
  i) புரோட்டான்களின் எண்ணிக்கை
  ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
  iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Quantum Mechanical Model Of Atom Two Marks Back Questions )

Write your Comment