கரைசல்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. காற்றில் உள்ள நைட்ரஜனின் பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் 300K வெப்பநிலையில் அதன் ஹென்றி விதி மாறிலி மதிப்பு 7.6 × 104 atm. 300 K வெப்பநிலையில், காற்றை நீரின் வழியாக குமிழிகளாக செலுத்தும்போது, கிடைக்கும் கரைசலில், நைட்ரஜன் வாயுவின் மோல் பின்ன மதிப்பு என்ன?

    (a)

    1 × 10–4

    (b)

    1 × 10–6

    (c)

    2 × 10–5

    (d)

    1 × 10–5

  2. 350 K வெப்பநிலையில் நீரில், நைட்ர ன் வாயுவின் கரைதிறனுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 8 × 104 atm. காற்றில் நைட்ரஜனின் மோல் பின்னம் 0.5 ஆகும். 350K வெப்பநிலை மற்றும் 4 atm அழுத்தத்தில் 10 மோல்கள் நீரில் கரையும் காற்றிலுள்ள நைட்ரஜனின் மோல் எண்ணிக்கை

    (a)

    4 × 10–4

    (b)

    4 × 104

    (c)

    2 × 10–2

    (d)

    2.5 × 10–4

  3. ஒரு இருகூறு நல்லியல்புக் கரைசலில், தூய திரவக் கூறுகள் 1 மற்றும் 2 இன் ஆவிஅழுத்தங்கள் முறையே P1 மற்றும் P2 ஆகும். x1 என்பது கூறு 1 இன் மோல் பின்னம் எனில், 1 மற்றும் 2 ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கரைசலின் மொத்த அழுத்தம்

    (a)

    P1 + x1 (P2 – P1)

    (b)

    P2 – x1 (P2 + P1)

    (c)

    P1 – x2 (P1 – P2)

    (d)

    P1 + x2 (P- P2)

  4. பின்வரும் இருகூறு திரவ கலவைகளில் எது, ரெளல்ட் விதியிலிருந்து நேர்குறி விலக்கத்தை காட்டுகிறது?

    (a)

    அசிட்டோன் + குளோரோஃபார்ம்

    (b)

    நீர் + நை ட்ரிக் அமிலம்

    (c)

    HCl + நீர்

    (d)

    எத்தனால் + நீர்

  5. ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.

    (a)

    கரைப்பானின் மோல் பின்னம்

    (b)

    கரைபொருளின் மோல் பின்னம்

    (c)

    கரைபொருளின் மோல் எண்ணிக்கை

    (d)

    கரைப்பானின் மோல் எண்ணிக்கை

  6. 3 x 2 = 6
  7. ”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.

  8. வெளிப்புற பூச்சாக பயன்படும் ஐயோடோபோவிடோன் புரைதடுப்பான் கரைசலானது 10% w/v அயோடோபோவிடோனைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் அளவான 1.5 மி.லி உள்ள அயோடோபோவிடோனின் அளவைக் கணக்கிடுக.

  9. ஏன், கோடைக்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் இருப்பதைக் காட்டிலும், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில், நீர்வாழ் விலங்குகள் வசதியாக உணர்கின்றன விளக்குக.

  10. 3 x 3 = 9
  11. 500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?

  12. 0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.

  13. 200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1

  14. 2 x 5 = 10
  15. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.

  16. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
    KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரைசல்கள் Book Back Questions ( 11th Chemistry - Solutions Book Back Questions )

Write your Comment