கரைசல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்ட றியப்பட்டுள்ள து.. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1

 2. (அ) 300 மி.லி மற்றும் (ஆ) 1 லிட்டர் கரைசலில் 5.6 கிராம் KOH கரைந்துள்ளது எனில், அக்கரைசல்கள் ஒவ்வொன்றின் மோலாரிட்டியைக் கணக்கிடுக.

 3. 2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.

 4. தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
  (அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
  (b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.

 5. 27°C வெப்பநிலையில் A எனும் தூய திரவத்தின் ஆவிஅழுத்தம் 10.0 torr. 20 கிராம் A இல் 1 கிராம் B ஐ கரைப்பதன்மூலம் ஆவிஅழுத்தம் 9.0 torr க்கு குறைக்கப்படுகிறது. A யின் மோலார் நிறை 200 எனில், B யின் மோலார் நிறையை கணக்கிடுக.

 6. 2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறைநிலைத் தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையைக்காண்க.

 7. 6gகிராம்லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில், ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?

 8. 500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?

 9. குளிர்ப்பிரதேசங்களில் பயணிக்கும் கார்களின் ரேடியேட்டர்களில், உறைதடுப்பானாக எத்திலீன் கிளைக்காலை (C2H2O2) பயன்படுத்த முடியும். கார் ரேடியேட்டர்களில், பயன்படுத்தப்பட்டுள்ள, 20 நிறை சதவீத கிளைக்காலின் நீர்க் கரைசலிலிருந்து பனிக்கட்டி படிகங்கள் உருவாகி பிரியும்போது உள்ள வெப்பநிலையை கணக்கிடுக. நீரின் Kf = 1.86 K Kg mol-1 மதிப்பு மற்றும் எத்திலீன் கிளைக்காலின் மோலார் நிறை 62 g mol-1.

 10. 200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரைசல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Solutions Three Marks Questions )

Write your Comment