இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

    (a)

    102 g

    (b)

    27 g

    (c)

    270 g

    (d)

    78 g

  2. பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

    (a)

    5 மோல்கள் நீர்

    (b)

    90 மோல்கள் நீர்

    (c)

    \(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்

    (d)

    6.022×1024 நீர் மூலக்கூறுகள்

  3. பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?

    (a)

    புரப்பீன்

    (b)

    ஈத்தைன்

    (c)

    பென்சீன்

    (d)

    ஈத்தேன்

  4. மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு

    (a)

    சீமன் விளைவு

    (b)

    மறைத்தல் விளைவு

    (c)

    காம்ப்டன் விளைவு

    (d)

    ஸ்டார்க் விளைவு

  5. பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

    (a)

    குளோரின்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    சீசியம்

    (d)

    புளூரின்

  6. கனநீர் பயன்படுவது

    (a)

    அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி

    (b)

    அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவும் இல்லை

  7. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

    (a)

    சோடியம்

    (b)

    மெக்னீசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    அலுமினியம்

  8. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  9. 1000 மீ3 கனஅளவுள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவியபுட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது.இதற்கு வாயுக்களின் எந்த பண்பு காரணமாக அமைகிறது?

    (a)

    பாகுத்தன்மை 

    (b)

    அடர்த்தி 

    (c)

    விரவுதல் 

    (d)

    எதுவுமில்லை

  10. P,Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு 

    (a)

    P

    (b)

    Q

    (c)

    R

    (d)

    S

  11. இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.

    (a)

    என்ட்ரோபி குறையும்

    (b)

    என்தால்பி அதிகரிக்கும்

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்

    (d)

    கட்டிலா ஆற்றல் குறையும்

  12. பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?

    (a)

    அகஆற்றல்

    (b)

    என்தால்பி

    (c)

    என்ட்ரோபி

    (d)

    உராய்வு ஆற்றல்

  13. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?

    (a)

    PH3

    (b)

    (CH3)2

    (c)

    BH3

    (d)

    NH3

  14. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    மூன்று

    (b)

    நான்கு

    (c)

    பூஜ்ஜியம்

    (d)

    கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது

  15. ClF3 இன் வடிவம்

    (a)

    முக்கோணசமதளம்

    (b)

    பிரமிடுவடிவம்

    (c)

    'T' வடிவம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  16. 6 x 2 = 12
  17. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  18. செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

  19. தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு

  20. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  21. எரிதல் என்தால்பியை வரையறு 

  22. பை (π) பிணைப்பு என்றால் என்ன?

  23. 6 x 3 = 18
  24. 10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?

  25. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  26. இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  27. நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?

  28. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  29. பாயிலின் விதியினை தருக.

  30. 5 x 5 = 25
  31. அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.

  32. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

  33. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக

  34. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

  35. கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Term II Model Question Paper )

Write your Comment