வெப்ப இயக்கவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. 2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு

  (a)

  -250R

  (b)

  -500R

  (c)

  500R

  (d)

  +250R

 2. 0°C வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் 15.68L மீத்தேன் மற்றும் புரோப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதேவெப்ப அழுத்தநிலையில் 32L ஆக்சிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்  

  (a)

  – 889 kJ

  (b)

  – 1390 kJ

  (c)

  – 3180 kJ

  (d)

  – 653.66 kJ

 3. ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது

  (a)

  வெப்பநிலை மாறா விரிவடைதல் 

  (b)

  வெப்பநிலை மாறா சுருங்குதல்

  (c)

  வெப்பம் மாறா விரிவடைதல் 

  (d)

  வெப்பம் மாறா சுருங்குதல்

 4. ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் 4.8 kJ mol-1. அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு 16 J K–1 mol–1 எனில் அந்த திரவத்தின் கொதிநிலை

  (a)

  323 K

  (b)

  270 C

  (c)

  164 K

  (d)

  0.3 K

 5. ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol-1 மற்றும் 100 JK-1mol-1 எனில் , எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.

  (a)

  300 K

  (b)

  30 K

  (c)

  100 K

  (d)

  200 C

 6. பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு

  (a)

  நிறை

  (b)

  கனஅளவு

  (c)

  என்தால்பி

  (d)

  நிறை/கனஅளவு

 7. பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?

  (a)

  அகஆற்றல்

  (b)

  என்தால்பி

  (c)

  என்ட்ரோபி

  (d)

  உராய்வு ஆற்றல்

 8. q=0 என்பது 

  (a)

  வெப்பமாறா செயல்முறை 

  (b)

  வெப்பநிலை மாறா செயல்முறை 

  (c)

  திறந்த அமைப்பு 

  (d)

  மூடிய அமைப்பு 

 9. பொதுவாக தன்னிச்சையான செயல் முறையின் ஒழுங்கற்ற தன்மை 

  (a)

  பொதுவாக அதிகரிக்கும் 

  (b)

  பொதுவாக குறையும் 

  (c)

  பூஜ்ஜியம் 

  (d)

  முடிவிலி 

 10. 8 x 2 = 16
 11. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

 12. பொருண்மைசாரா பண்பை இரண்டு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.

 13. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு 

 14. எரிதல் என்தால்பியை வரையறு 

 15. படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?

 16. வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை கூறு.

 17. வேலையின் சிறப்பியல்புகள் யாவை?

 18. பாம் கலோரி மீட்டரின் பயன்களை பட்டியலிடுக.

 19. 5 x 3 = 15
 20. நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.

 21. ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.

 22. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.

 23. வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.

 24. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

 25. 2 x 5 = 10
 26. அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.

 27. கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வெப்ப இயக்கவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Thermodynamics Model Question Paper )

Write your Comment