11th Public Exam March 2019 Model Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

  (a)

  102 g

  (b)

  27 g

  (c)

  270 g

  (d)

  78 g

 2. பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

  (a)

  s>p>d>f

  (b)

  f>d>p>s

  (c)

  d>p>s>f

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 3. கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை

  (a)

  s>p>d>f

  (b)

  s>p>f>d

  (c)

  f>d>p>s

  (d)

  f>p>s>d

 4. பின்வரும் தனிமங்களை கவனி.
  I. Li  II. Na  III. K   IV. Ca
  இவற்றுள், மிகவும் இலேசானது எது?

  (a)

  I

  (b)

  II

  (c)

  III

  (d)

  IV

 5. கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை

  (a)

  BaCO3 > SrCO3 > CaCO3 > MgCO3

  (b)

  MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3

  (c)

  CaCO3 > BaCO3 > SrCO3 > MgCO3

  (d)

  BaCO3 > CaCO3 > SrCO3 > MgCO3

 6. எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?

  (a)

  வாயுவின் வெப்பநிலை

  (b)

  வாயுவின் கன அளவு 

  (c)

  வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  (d)

  அழுத்தம் மற்றும் கனஅளவின் அலகுகள்

 7. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

  (a)

  H=G-TS

  (b)

  G=H-TS

  (c)

  \(G= \triangle E- T\triangle S\)

  (d)

  G=V-TS

 8. X ⇌ Y +Z மற்றும் A ⇌ 2B என்ற வினைகளில் KP1 மற்றும் KP2 ன் மதிப்புகள் 9:1 என்ற விகிதத் தில் உள்ள து. X மற்றும் A ன் பிரிகை வீதம் மற்றும் தொடக்கச் செறிவு சமமாக இருந்தால், சமநிலையில் மொத்தம் அழுத்தம் P1 மற்றும் P2 வின் விகிதம்

  (a)

  36:1

  (b)

  1:1

  (c)

  3:1

  (d)

  1:9

 9. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

  (a)

  NH4Cl

  (b)

  NH3

  (c)

  NaCl

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 10. கற்பூரம் முறையில் தூய்மை செய்யப்படுகிறது.

  (a)

  படிகமாக்கல்

  (b)

  எளிய காய்ச்சி வடித்தல்

  (c)

  பின்னப் படிகமாக்கல்

  (d)

  பதங்கமாதல்

 11. -I விளைவினை காட்டுவது

  (a)

  -Cl

  (b)

  -Br

  (c)

  both (a) and (b)

  (d)

  -CH3

 12. பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 

  (a)

  டிரான்ஸ் -2- குளோரோ  -3- அயடோ -2- பெ ன்டேன்

  (b)

  சிஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பெ ன்டேன்

  (c)

  டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பென்டீன்

  (d)

  சிஸ் -2- குளோரோ   3- அயடோ -2- பென் டீன்

 13. குளோரோபிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக் அமிலம் ______ உடன் சேர்க்கப்படுகிறது.  

  (a)

  குளோரோஃபார்ம்  

  (b)

  கார்பன் டெட்ரா குளோரைடு 

  (c)

  குளோரின் 

  (d)

  இவை அனைத்தும் 

 14. சாதாரண மழை நீரின் pH மதிப்பு 

  (a)

  5.6

  (b)

  6.5

  (c)

  7

  (d)

  8.5

 15. கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத் திற்கான சரியான சமன்பாடு

  (a)

  \(\alpha =\frac { n(i-1) }{ n-1 } \)

  (b)

  \({ \alpha }^{ 2 }=\frac { n(i-1) }{ (n-1) } \)

  (c)

  \({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)

  (d)

  \({ \alpha }=\frac { n(1-i) }{ n(1-i) } \)

 16. 6 x 2 = 12
 17. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

 18. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.

 19. பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
  [அ] நீராற்பகுத்தல்
  [ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
  [இ] நீரேற்ற வினைகள்
  (i) KMnO4 + H4O2
  (ii) CaO + H2O

 20. தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு

 21. வினைகுணகத்தின் எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?

 22. பிணைப்பு நீளம் என்பதை வரையறு.

 23. பென்சீனின் ஹைட்ரஜனேற்ற  வினையை எழுதுக.          

 24. இந்திய தரநிலை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடிநீருக்கான தரநிலை அளவுகளை குறிப்பிடுக.

 25. ஹென்றி விதியைக் கூறி விளக்குக

 26. 6 x 3 = 18
 27. கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
  மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?

 28. பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
  [அ] 

       

  [ஆ] 

       

  [இ]

       

  [ஈ]

       

  இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.

 29. நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?

 30. சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மனமற்ற வாயு அது நல்லியல்புத்தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50ல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.

 31. சயனமைடை  (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
  \(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)

 32. சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?

 33. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

 34. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

 35. ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்ட றியப்பட்டுள்ள து.. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1

 36. 5 x 5 = 25
 37. எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

 38. துகள் ஒன்றின் நிலையில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையின் அளவீடானது அதன் டீபிராக்ளி அலைநீளத்திற்குச்  சமம் எனில், அதன் திசைவேகத்தில் ஏற்படும் குறைந்த பட்ச நிச்சயமற்றத் தன்மை திசைவேகம் / 4π க்குச் சமம் எனக் காட்டுக.

 39. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

 40. 300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.

 41. 128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்தும் போது \(\triangle U\) மற்றும்  \(\triangle H\) மதிப்புகளைக் கணக்கிடுக.தோராயமாக CV மற்றும் CP மதிப்புகள் முறையே 21J mol-1 k-1 மற்றும் 29J mol-1 k-1 (வேறுபாடானது 8J mol-1 k-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்.)

 42. 1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
  2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
  ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.

 43. கார்பன் டை ஆக்ஸைடிற்கான சாத்தியமான இருவடிவங்களை வரைந்து, எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரான்களின் பங்கீடு சீராக அமைந்துள்ளது எனக் கூறுக.

 44. கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?

 45. பின்வருவனவற்றை விளக்குக.
  (i) நேர் மீசோமெரிக் விளைவு
  (ii) -I விளைவு 

 46. 128 கிராம் நாஃப்தலினை 39 கிராம் பென்சீனுடன் சேர்த்து, நல்லியல்பு திரவக் கரைசலை உருவாக்கும்போது, ஆவிநிலையிலுள்ள பென்சீன் மற்றும் நாஃப்தலீனின் மோல் பின்னங்களை கணக்கிடுக. 300 K வெப்பநிலையில், தூய பென்சீனின் ஆவிஅழுத்தம் 50.71 mmHg மற்றும் தூய நாஃப்தலீனின் ஆவிஅழுத்தம் 32.06 mmHg

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment