வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. 40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு மீதமுள்ள வாயுவின் கனஅளவு

  (a)

  40 மி.லி CO2 வாயு

  (b)

  40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

  (c)

  60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு

  (d)

  120 மி.லி CO2 வாயு

 2. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

  (a)

  102 g

  (b)

  27 g

  (c)

  270 g

  (d)

  78 g

 3. 6.3g சோடியம் பை கார்பனேட்டை, 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்தபின், மீதமுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை

  (a)

  3

  (b)

  0.75

  (c)

  0.075

  (d)

  0.3

 4. பின்வரும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச்சிதைவு வினை?

  (a)

  3Mg (s) + N2 (g) → Mg3N2 (s)

  (b)

  P4 (s) + 3 NaOH+ 3H2O → PH3(g) + 3NaH2PO2 (aq)

  (c)

  Cl2 (g)+ 2KI(aq) → 2KCl(aq) + I2

  (d)

  Cr2O3 (s) + 2Al (s) → Al2O3(s) + 2Cr(s)

 5. பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

  (a)

  5 மோல்கள் நீர்

  (b)

  90 மோல்கள் நீர்

  (c)

  \(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்

  (d)

  6.022×1024 நீர் மூலக்கூறுகள்

 6. 0° C மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு 5.6 L கனஅளவை அடைத்துக்கொள்கிறது எனில், அந்த வாயு

  (a)

  NO

  (b)

  N2O

  (c)

  CO

  (d)

  CO2

 7. 8 x 2 = 16
 8. ஒப்பு அணு நிறை வரையறு

 9. சமான நிறை வரையறு

 10. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

 11. STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

 12. ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.

 13. பருப்பொருள் - வரையறு.

 14. மோல் - வரையறு 

 15. கிராம் சமான நிறை வரையறு.

 16. 6 x 3 = 18
 17. 10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?

 18. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.

 19. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

 20. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

 21. விதைச்சிதைவு வினையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 22. வரையறு: சமமான நிறை.

 23. 2 x 5 = 10
 24. பின்வருவனவற்றின் மோலார் நிறைகளைக் காண்க.
  i) யூரியா[CO(NH2)2]
  ii) அசிட்டோன் [CH3COCH3]
  iii) போரிக் அமிலம்[H3BO3]
  iv) கந்தக அமிலம்[H2SO4]

 25. அயனி எலக்ட்ரான் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க.
  i) KMnO4 + SnCl2+HCl → MnCl2 + SnCl4 + H2O + KCl
  ii) C2O42- + Cr2 O72- → Cr3+ + CO2
  iii) Na2S2O3 + I2 → Na2S4O6 + NaI
  iv) Zn +NO3- → Zn2+ + NO

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Basic Concepts of Chemistry and Chemical Calculations Model Question Paper )

Write your Comment