வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. 40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு மீதமுள்ள வாயுவின் கனஅளவு

  (a)

  40 மி.லி CO2 வாயு

  (b)

  40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

  (c)

  60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு

  (d)

  120 மி.லி CO2 வாயு

 2. கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022 

  (a)

  கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க

  (b)

  கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல

  (c)

  கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு

  (d)

  கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு

 3. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

  (a)

  102 g

  (b)

  27 g

  (c)

  270 g

  (d)

  78 g

 4. 1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.

  (a)

  0%

  (b)

  4.4%

  (c)

  16%

  (d)

  8.4%

 5. STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுவுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

  (a)

  2 மோல்கள் HCl (g)

  (b)

  0.5 மோல்கள் HCl (g)

  (c)

  1.5 மோல்கள் HCl (g)

  (d)

  1 மோல்HCl (g)

 6. கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு (MnO4- + 2H2O+3e-→ MnO2 +4OH-)

  (a)

  31.6

  (b)

  52.7

  (c)

  79

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 7. பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

  (a)

  5 மோல்கள் நீர்

  (b)

  90 மோல்கள் நீர்

  (c)

  \(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்

  (d)

  6.022×1024 நீர் மூலக்கூறுகள்

 8. சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் பின்வரும் எதிர்மின் அயனிகளின் ஏறுவரிசை SO42-, SO32- , S2O42-, S2O62- is

  (a)

  SO32- < SO42- < S2O42-< S2O62-

  (b)

  SO42- < S2O42- < S2O62-< SO32-

  (c)

  S2O42- < SO32- < S2O62-< SO42-

  (d)

  S2O62- < S2O42- < SO42-< SO32-

 9. அவகாட்ரோ எண் மதிப்பை 6.022 × 1023 லிருந்து 6.022 x 1020 க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது

  (a)

  சமன் செய்யப்பட்ட சமன்பாட்டில் வேதிக்கூறுகளின் விகிதம்

  (b)

  ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்களின் விகிதம்

  (c)

  கிராம்களில் நிறையின் வரையறை

  (d)

  1 மோல் கார்பனின் நிறை

 10. 50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?

  (a)

  3.59 g

  (b)

  7 g

  (c)

  14 g

  (d)

  28 g

 11. பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?

  (a)

  புரப்பீன்

  (b)

  ஈத்தைன்

  (c)

  பென்சீன்

  (d)

  ஈத்தேன்

 12. கீழ்கண்டவற்றைக் கவனி:
  I. அழுத்தம் II. வெப்பநிலை 
  இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?

  (a)

  I. மட்டும் 

  (b)

  II. மட்டும் 

  (c)

  இரண்டும் 

  (d)

  இரண்டும் இல்லை 

 13. சேர்மங்களின் பண்புகளை அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?

  (a)

  சோடியம் 

  (b)

  குளோரின் 

  (c)

  கார்பன்டை ஆன்சைடு 

  (d)

  அனைத்தும் 

 14. ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?

  (a)

  1.66 u 

  (b)

  2.016u 

  (c)

  3.14u 

  (d)

  4.56u 

 15. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

  (a)

  பொருளின் அளவினை குறிக்க SI அலகு முறையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அலகு 'மோல்' ஆகும்.

  (b)

  6.022x 1023 உட்பொருட்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிப்பிட்ட மோல் எனும் அலகைப் பயன்படுத்தலாம்.

  (c)

  12 g C-12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடைப்படைத் துக்கல்களைப் பெற்றுள்ளன ஒரு அமைப்பில் உள்ள பொருளின் அளவு ஒரு மோல் எனப்படும் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும். 

 16. அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த பொதுவாக அமில நிக்கிகள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் யாவை?

  (a)

  மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு

  (b)

  மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு

  (c)

  மெக்னீசியம் சல்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட் 

  (d)

  மெக்னீசியம் ஹைட்ராக்சைடு  மற்றும் கால்சியம் கார்பனேட் 

 17. அவகாட்ரோ எண்ணின் அலகு

  (a)

  g mol-1

  (b)

  kg/mol

  (c)

  amu 

  (d)

  அலகு இல்லை 

 18. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு 

  (a)

  72 லிட்டர் 

  (b)

  15 லிட்டர் 

  (c)

  22.4 லிட்டர் 

  (d)

  11.35 லிட்டர் 

 19. பின்வரும் சமன்பாட்டை கவனி:
  S + 3F2 \(\rightarrow \)SF6

  (a)

  (b)

  (c)

  SF6

  (d)

  எதுவுமில்லை 

 20. இணைத்திறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான 10g eq-1. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை 

  (a)

  46 g 

  (b)

  36 g 

  (c)

  52 g 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் Chapter 1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 1 Basic Concepts of Chemistry and Chemical Calculations One Marks Model Question Paper

Write your Comment