அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    26

    (b)

    22

    (c)

    30

    (d)

    24

  2. 45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்

    (a)

    6.67x1015J

    (b)

    6.67x1011J

    (c)

    4.42x10-18J

    (d)

    4.42x1015J

  3. E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  4. அணுவானது நேர்மின்சுமையுடைய கோளம் போன்ற அமைப்பில் உள்ளது. அக்கோளத்தில் எதிர்மின்சுமையுடைய எலக்ட்ரான்கள் பொதிந்து உள்ளது. இது பின்வருவனவற்றுள் யாரால் முன்மொழியப்பட்டது.

    (a)

    ஷ்ரோடிங்கர்

    (b)

    J.J. தாம்சன்

    (c)

    ரூதர்போர்டு

    (d)

    போர்

  5. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை ஜிங்க் திரையின் மீது செய்யப்பட்டது.

    (b)

    ரூதர்போர்டின் α-சிதறல் வெள்ளி தகட்டின் மீது செய்யப்பட்டது

    (c)

    ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை முடிவு தாம்சனின் அணுமாதிரி தவறானது என நிரூபித்தது

    (d)

    a & b சரி

  6. 7 x 2 = 14
  7. ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?

  8. n = 4க்கு சாத்தியமான ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுக. 

  9. 2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.

  10. சரிபாதியளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் நிலைப்புத்தன்மை பெறுதல் p- ஆர்பிட்டாலைக் காட்டிலும் d – ஆர்பிட்டாலில் அதிகமாக உள்ளது. ஏன்?

  11. ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக

  12. 5400Å பச்சை நிற ஒளியின் அலை நீளத்திற்கு சமமான டிபிராக்ளி அலைநீளத்தினைப் பெற 54g டென்னிஸ் பந்து எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும்?

  13. பின்வரும் ஒவ்வொன்றிற்கும், துணைக்கூட்டின் குறியீடு, அனுமதிக்கப்பட்ட m மதிப்புகள் மற்றும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைத் தருக.
    i) n = 4, l =2, ii) n =5, l = 3 iii) n=7, l=0

  14. 7 x 3 = 21
  15. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  16. ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.

  17. போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?

  18. டி -பிராக்ளே அலைநீளம் எதற்கு முக்கியத்துவம் உடையது? எதற்குப் புறக்கணிக்கத்தக்கது?

  19. எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது. இந்த கண்டுபிடிப்பு எதை உருவாக்க காரணமாக அமைந்தது?

  20. ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.

  21. பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?

  22. 2 x 5 = 10
  23. 140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.

  24. பரிமாற்ற ஆற்றலை எடுத்துக்காட்டுகள் விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் Chapter 2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி முக்கிய வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 2 Quantum Mechanical Model of Atom Important Question Paper )

Write your Comment