வெப்ப இயக்கவியல் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில் 

    (a)

    \(\Delta\)H>\(\Delta\)U

    (b)

    \(\Delta\)H-\(\Delta\)U=0

    (c)

    \(\Delta\)H+\(\Delta\)U=0

    (d)

    \(\Delta\)H<\(\Delta\)U

  2. 2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு

    (a)

    -250R

    (b)

    -500R

    (c)

    500R

    (d)

    +250R

  3. மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே,  360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் C-C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்

    (a)

    170 kJ mol–1

    (b)

    50 kJ mol–1

    (c)

    80 kJ mol–1

    (d)

    220 kJ mol–1

  4. ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது

    (a)

    வெப்பநிலை மாறா விரிவடைதல் 

    (b)

    வெப்பநிலை மாறா சுருங்குதல்

    (c)

    வெப்பம் மாறா விரிவடைதல் 

    (d)

    வெப்பம் மாறா சுருங்குதல்

  5. ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்

    (a)

    w=-Δu

    (b)

    w=Δu+ΔH

    (c)

    Δu=0

    (d)

    w=0

  6. Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596kj மற்றும் -1134 kJ எனில் 2AI+Cr2O3 ⟶ 2Cr+Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு

    (a)

    -1365 kJ

    (b)

    2730 kJ

    (c)

    -2730 kJ

    (d)

    -462 kJ

  7. தன்னிச்சையான வினைகள் நிகழும் விதம் 

    (a)

    என்ட்ரோபி அதிகரிக்கும் 

    (b)

    வினைவெப்பம் எதிர்குறியீடு 

    (c)

    கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறியீடு 

    (d)

    இவை அனைத்தும் 

  8. எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது? 

    (a)

    S=+Ve

    (b)

    S=-ve

    (c)

    H=+ve

    (d)

    T2>T1

  9. cgs முறையில் என்ட்ரோபியின் அலகு 

    (a)

    Cal K-1mol-1

    (b)

    Cal K-1

    (c)

    JK-1

    (d)

    Cal mol-1

  10. திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் \(\triangle G^o\)ஆனது சமநிலை மாறிலி kp உடன் கொண்டுள்ள தொடர்பு 

    (a)

    \(\triangle G^o =- RT \ In \ K_p\)

    (b)

    \(k_p =({e \over RT})\triangle G^o\)

    (c)

    \(k_p ={-\triangle G \over RT} \)

    (d)

    \(k_p ={\triangle G \over RT} \)

  11. 5 x 2 = 10
  12. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  13. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு 

  14. எரிதல் என்தால்பியை வரையறு 

  15. படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?

  16. வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை கூறு.

  17. 5 x 3 = 15
  18. நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  19. ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.

  20. தன்னிச்சை செயல்முறைகள் என்றால் என்ன ? தன்னிச்சை செயல்முறைகளுக்கான நிபந்தனைகளை தருக 

  21. 4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .

  22. சயனமைடை  (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
    \(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)

  23. 3 x 5 = 15
  24. CaCl2 உருவாதல்செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.

  25. ஒரு நல்லியல்பு வாயுவிற்கு \(\triangle H \) க்கும் \(\triangle U \) க்கும் இடையே உள்ள தொடர்பை வருவி. சமன்பாட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் விளக்குக.

  26. 3.67 லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்திலீன் மற்றும் மீத்தேன் வாயுக்கலவையை 250C மற்றும் 1 வளிமண்டல அழுத்தத்தில் முழுமையாக எரிக்கும் போது 6.11L கார்பன்டைஆக்ஸைடு வாயுவை உருவாக்குகிறது. எரிதலின் போது வெளிப்படும் வெப்பத்தின் அளவை kJ அலகில் கணக்கீடுக.ΔHC (CH4) = − 890 kJ mol−1 மற்றும் ΔHC (C2H4)= −1423 kJ mol−1

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் Chapter 7 வெப்ப இயக்கவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 7 Thermodynamics Model Question Paper )

Write your Comment