வாயு நிலைமை Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது?எவை

  (a)

  அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.

  (b)

  அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.

  (c)

  அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

  (d)

  அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.

 2. கீழ்க்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.

  (a)

  \(\left( P+\frac { a }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

  (b)

  \(\left( P+\frac { na }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

  (c)

  \(\left( P+\frac { an^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

  (d)

  \(\left( P+\frac { n^2a^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

 3. ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

  (a)

  1/3

  (b)

  1/2

  (c)

  2/3

  (d)

  1/3 x 273 x 298

 4. எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?

  (a)

  வாயுவின் வெப்பநிலை

  (b)

  வாயுவின் கன அளவு 

  (c)

  வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  (d)

  அழுத்தம் மற்றும் கனஅளவின் அலகுகள்

 5. 400K 710 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு

  (a)

  22.04 dm3

  (b)

  2.24 dm3

  (c)

  0.41 dm3

  (d)

  19.5dm3

 6. 3 x 2 = 6
 7. a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி 

 8. விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.

 9. அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?

 10. 3 x 3 = 9
 11. பாயிலின் விதியினை தருக.

 12. நமது வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.ஏன்?நிலவில் வளிமண்டலம் ஏன் இல்லை?

 13. ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 60 மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 250சி மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனளவினை கண்டறிக.

 14. 2 x 5 = 10
 15. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

 16. 300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - வாயு நிலைமை Book Back Questions ( 11th Standard Chemistry - Gaseous State Book Back Questions )

Write your Comment