வாயு நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. கட்டுப்பாடற்ற விரிவடைத லின் போது ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை குறைவதில்லை ஏனெனில் மூலக்கூறுகள்

  (a)

  எதிர்மாறு வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையில் உள்ளது 

  (b)

  ஒன்றுக்கொன்று கவர்ச்சி விசையை செலுத்துவதில்லை 

  (c)

  இயக்க ஆற்றல் இழப்பிற்கு சமமான வேலையை செய்யும் 

  (d)

  ஆற்றல் இழப்பின்றி மோதுகின்றன.

 2. ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

  (a)

  1/3

  (b)

  1/2

  (c)

  2/3

  (d)

  1/3 x 273 x 298

 3. எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?

  (a)

  வாயுவின் வெப்பநிலை

  (b)

  வாயுவின் கன அளவு 

  (c)

  வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  (d)

  அழுத்தம் மற்றும் கனஅளவின் அலகுகள்

 4. வாயுமாறிலியின் மதிப்பு 

  (a)

  0.082dm3atm.

  (b)

  0.987 cal mol-1 K-1

  (c)

  8.3 J mol-1K-1

  (d)

  8 erg mol-1K-1

 5. ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மற்றும் கனஅளவு இருமடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரம்ப அழுத்தத்தின் மாற்றம்

  (a)

  4P

  (b)

  2P

  (c)

  P

  (d)

  3P

 6. நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு

  (a)

  CH4(g)

  (b)

  NH3(g)

  (c)

  H2(g)

  (d)

  N2(g)

 7. 25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27யில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?

  (a)

  HBr

  (b)

  HCl

  (c)

  HF

  (d)

  HI

 8. ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

  (a)

  லிண்டே முறை 

  (b)

  ஜூல் -தாம்சன் விளைவு 

  (c)

  கிளாட் முறை 

  (d)

  கார்னாட் முறை 

 9. 7 x 2 = 14
 10. கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாத்திரைகளின் பெயர்களைத் தந்து விளக்குக. 

 11. ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக

 12. விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.

 13. காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?

 14. அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?

 15. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

 16. அமுக்கத்திறன் காரணி வரையறு. 

 17. 6 x 3 = 18
 18. பாயிலின் விதியினை தருக.

 19. நமது வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.ஏன்?நிலவில் வளிமண்டலம் ஏன் இல்லை?

 20. எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?

 21. ஒரு வாயு 192 நொடியில் சுவரிலுள்ள ஒரு துளையின் வழியே விரைவுகின்றது. N2 வாயு அதே வெப்ப அழுத்த நிலையில் விரவ எடுக்கும் நேரம் 84 நொடி எனில் வாயுவின் மோலார் நிறை என்ன?

 22. வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.

 23. பாயில் விதியின் விளைவுகளை எழுதுக.

 24. 2 x 5 = 10
 25. இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.

 26. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - வாயு நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Gaseous State Model Question Paper )

Write your Comment