ஹைட்ரஜன் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது

  (a)

  ஹைட்ரஜன் அயனி, H3O+ கரைசலில் தனித்து உள்ளது

  (b)

  டைஹைட்ரஜன் ஒடுக்க வினைபொருளாக செயல்படுகிறது

  (c)

  ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.

  (d)

  அயனி உப்புகளில், எப்போதும் ஹைட்ரஜன் நேர் அயனியாகக் காணப்படுவதில்லை

 2. அயனி ஹைட்ரைடுகள் உருவாவதற்கு காரணமானவை.

  (a)

  ஹேலஜன்கள்

  (b)

  சால்கோஜென்கள்

  (c)

  மந்த வாயுக்கள்

  (d)

  தொகுதி 1 – தனிமங்கள்

 3. வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை

  (a)

  பெலேடியம், வெனேடியம்

  (b)

  கார்பன், நிக்கல்

  (c)

  மாங்கனீசு, லித்தியம்

  (d)

  நைட்ரஜன், குளோரின்

 4. நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி

  (a)

  சோடியம் தயோ சல்பேட்

  (b)

  பொட்டாசியம் பெர்மாங்கனேட்

  (c)

  ஹைட்ரஜன் பெராக்சைடு

  (d)

  EDTA

 5. நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த

  (a)

  சோடியம் அலுமினியம் சிலிகேட்

  (b)

  கால்சியம் அலுமினியம் சிலிகேட்

  (c)

  ஜிங்க் அலுமினியம் பேரேட்

  (d)

  லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு

 6. 1.5 N H2O2 ன் கனஅளவுச் செறிவு

  (a)

  1.5

  (b)

  4.5

  (c)

  16.8

  (d)

  8.4

 7. கனநீர் பயன்படுவது

  (a)

  அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி

  (b)

  அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  எதுவும் இல்லை

 8. நீரானது

  (a)

  கார ஆக்ஸைடு

  (b)

  அமில ஆக்ஸைடு

  (c)

  ஈரியில்பு ஆக்ஸைடு

  (d)

  இவை எதுவுமில்லை

 9. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

  (a)

  அதிகரிக்கிறது

  (b)

  குறைகிறது

  (c)

  அதிகமாகிப் பின் குறைகிறது

  (d)

  குறைந்து பின் அதிகரிக்கிறது

 10. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

  (a)

  2 புரோட்டான் மட்டும்

  (b)

  ஒரு நியூட்ரான்

  (c)

  ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்

  (d)

  2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்

 11. 6 x 2 = 12
 12. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஏன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை?

 13. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

 14. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
  (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
  (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

 15. இடைச் செருகல் ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது ஏன்?

 16. கனநீரை மின்னாற் பகுத்தவை விளக்குக.

 17. ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக. 

 18. 6 x 3 = 18
 19. 4-வது வரிசையில் உள்ள தனிமங்களின் ஹைட்ரைடுகளின் எதிர்பார்க்கப்படும் வாய்ப்பாட்டினை எழுதுக. வாய்ப்பாட்டின் போக்கு (trend) என்ன? இவ்வரிசையில் முதல் இரண்டு தனிமங்கள் மற்றவற்றிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றன?

 20. ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க

 21. நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?

 22. கனநீரின் பயன்களைத் தருக

 23. டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக

 24. டியூட்ரியத்தின் பயன்களைக் கூறுக.

 25. 2 x 5 = 10
 26. மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.

 27. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - ஹைட்ரஜன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Hydrogen Model Question Paper )

Write your Comment