11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. மெக்னீசியம் கார்பனேட்டில் அடங்கியுள்ள தனிமங்களின் சதவீத இயைபினைக் கண்டறிக. 90% தூய்மையான 1 kg CaCo3 ஐ வெப்பப்படுத்தும் போது உருவாகும் CO2 ன் நிறையை கிலோகிராமில் கணக்கிடுக

  2. தனிம பகுப்பாய்வில் ஒரு சேர்மம் பின்வரும் தரவுகளை தருகிறது.Na = 14.31%, S = 9.97% H= 6.22%, O= 69.5% சேர்மத்திலுள்ள ஹைட்ரஜன் முழுவதும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து படிக நீராக இருக்கிறது, எனில் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் காண்க. சேர்மத்தின் மூலக்கூறு நிறை 322.

  3. எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

  4. ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.

  5. ஆக்ஸிஜவனற்ற எண் முறை விரிவாக விளக்குக.

  6. நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.

  7. 140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.

  8. போர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.

  9. அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரியின் முக்கியக் கூறுகள் யாவை?

  10. அயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பினை விவரி.

  11. பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள Kமற்றும் Cl அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å

  12. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

  13. இணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலையை வரையறுத்து அதில் காணப்படும் ஆவர்த்தன தன்மையை விளக்குக.

  14. பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (D) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (E) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (F) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D, E மற்றும் F யைக் கண்டறிக. வினைகளை விளக்குக

  15. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

  16. ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.  

  17. தொழில் முறையில் ஹைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? 

  18. மூன்றாம் வரிசையை சேர்ந்த காரமண் உலோகம் (A), ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் வினைப்பட்டு முறையே சேர்மங்கள் (B) மற்றும் (C) ஐ தருகின்றன.இது AgNO3 கரைசலுடன் உலோக இடபெயர்ச்சி வினைக்குட்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. (A) ,(B), (C),மற்றும் (D) ஐ கண்டுபிடி.

  19. கால்சியம் ஆக்ஸைடு தயாரித்தலை விளக்கி அதன் பண்புகளை எழுதுக. 

  20. சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை விளக்குக.

  21. லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

  22. இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.

  23. CaCl2 உருவாதல்செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.

  24. ஒரு நல்லியல்பு வாயுவிற்கு \(\triangle H \) க்கும் \(\triangle U \) க்கும் இடையே உள்ள தொடர்பை வருவி. சமன்பாட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் விளக்குக.

  25. 400k வெப்பநிலையில் பின்வரும் வினையின் சமநிலை மாறிலி keq மதிப்பை காண்க 
    \(2NOCl(g)⇌2NO(g)+Cl_2(g),\)
    \(\triangle H^0=77.2KJ mol^{-1};\)

    மற்றும் \(\triangle S^0=122JK^{-1}mol^{-1}\)

  26. அக ஆற்றலின் சிறப்பியல்புகளை பட்டியலிடுக.

  27. N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக

  28. 298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
    N2O4(g) ⇌ 2NO2(g);
    வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.

  29. HI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .

  30. நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.

  31. ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.

  32. 0.185g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுன் சேர்ந்து 0.320g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க (Ag=108, Br=80)

  33. இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.

  34. ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

  35. வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  36. பீனாலின்  அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.

  37. மீத்தேன் குளோரினுடன் புரியும் வினையின் வினை வழிமுறையை எழுதுக.       

  38. நைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.

  39. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.

  40. இயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் விதியிலிருந்து எவ்வாறு எதிர் விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடுத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment