+1 Full Test Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

    (a)

    Cu+ 2H2SO4 → CuSO4 + SO2+2H2O

    (b)

    C+ 2H2SO4 → CO2+2SO2+2H2O

    (c)

    BaCl2 + H2SO4 → BaSO4+2HCl

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?

    (a)

    ஜிங்க்

    (b)

    காப்பர்

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    ஹீலியம்

  3. முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    1s2, 2s2, 2p6,3s1

    (b)

    1s2, 2s2, 2p6,3s2

    (c)

    1s2, 2s2, 2p6,3s2, 3p6,4s1

    (d)

    1s2, 2s2, 2p6,3s2,3p1

  4. 0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

    (a)

    2.8

    (b)

    8.4

    (c)

    5.6

    (d)

    16.8

  5. RbO2 சேர்மம் ஒரு

    (a)

    சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது

    (b)

    பெராக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது

    (c)

    சூப்பர் ஆக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது

    (d)

    பெராக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது

  6. அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?

    (a)

    குழாயின் நடுப்பகுதியில்

    (b)

    ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்

    (c)

    அம்மோனியா குடுவையருகில்

    (d)

    குழாயின் முழுநீளத்திலும் முழுமையாக 

  7. பொதுவாக தன்னிச்சையான செயல் முறையின் ஒழுங்கற்ற தன்மை 

    (a)

    பொதுவாக அதிகரிக்கும் 

    (b)

    பொதுவாக குறையும் 

    (c)

    பூஜ்ஜியம் 

    (d)

    முடிவிலி 

  8. ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5\(\times\)10மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி

    (a)

    11.5

    (b)

    5

    (c)

    \(\times \) 102

    (d)

    \(\times \) 10-3

  9. பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?

    (a)

    SO2

    (b)

    NO2

    (c)

    CO2

    (d)

    H2O

  10. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

    (a)

    நீராவி வாலை வடித்தல்

    (b)

    பின்ன வாலை வடித்தல்

    (c)

    கொதிநிலை மாறா வாலை வடித்தல்

    (d)

    வகையீட்டு வடித்து இறக்குதல்

  11. கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு

    (a)

    நேர் கோடு

    (b)

    நான்முகி

    (c)

    தள அமைப்பு

    (d)

    பிரமிடு

  12. பின்வருவனவற்றுள் எது அலிபாட்டிக் நிறைவுற்ற ஹைட்ரோகார்பனாகும்.

    (a)

    C8 H18

    (b)

    C9 H18

    (c)

    C8 H14

    (d)

    இவையனைத்தும்

  13. ஒலிஃபின் சேர்மங்களில், மார்கோனிகாவ் சேர்ப்பு HCI வினையில் முக்கியமில்லாதவை 

    (a)

    புரப்பீன் 

    (b)

    பியூட்-1-யீன் 

    (c)

    மெத்தில் புரப்பீன் 

    (d)

    எத்திலீன் 

  14. அடுக்கு மண்டலத்தில் உருவாகும் வினை திறன்மிக்க குளோரின் அணுவும்______ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.

    (a)

    1000

    (b)

    10,000

    (c)

    1,00,000

    (d)

    1,00,000

  15. ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.

    (a)

    கரைப்பானின் மோல் பின்னம்

    (b)

    கரைபொருளின் மோல் பின்னம்

    (c)

    கரைபொருளின் மோல் எண்ணிக்கை

    (d)

    கரைப்பானின் மோல் எண்ணிக்கை

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.

  18. நவீன ஆவர்த்தன விதியை வரையறு.

  19. பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
    (i) Na  (ii) Ba  (iii) Fe

  20. பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?

  21. ஒரு வினையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது Qன் மதிப்பும் மாறாமல் இருக்குமா? விவரி.

  22. அயனிப் பிணைப்பை வரையறு.

  23. பென்சீலிருந்து வளைய ஹெக்சேன் எவ்வாறு தயாரிப்பாய்?      

  24. பனிப்புகை வரையறு.

  25. 500 மி.லி, 0.250 M NaOH கரைசலை தயாரிக்க தேவையான 6M NaOH கரைசலின் கனஅளவு எவ்வளவு?

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

  28. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  29. ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க

  30. பாயிலின் விதியினை தருக.

  31. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.

  32. சமநிலை மாறிலி எனப்படுவது எது?

  33. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii. p-டைகுளோரோ பென்சீன்
    iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  34. காட்டர்மான் வினையை எழுதுக.

  35. 2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. P0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. அயனி - எலக்ட்டரான் முறையை பற்றி விரிவாக எழுதுக.

    2. விடுபட்ட குவாண்டம் எண்கள் / துணை ஆற்றல் மட்டங்களைக் கண்டறிக.

      n l m துணை ஆற்றல் கூடு
      ? ? 0 4d
      3 1 0 ?
      ? ? ? 5p
      ? ? -2 3d
    1. ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.

    2. கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
      அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும் 
      ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
      இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
      ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும். 

    1. 300k வெப்ப நிலையில்,\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\) என்ற விளை தன்னிச்சையானது எனக்கட்டுக .CO2 மற்றும் CO ஆகியன உருவாவதற்கான திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றங்கள் முறையே -394.4 மற்றும் -137.2KJ mole-1

    2. 1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
      2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
      ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.

    1. BF3 லூயிஸ் வடிவமைப்பை வரைந்து, அது எவ்வாறு எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதிவிலக்கினைப் பெற்றுள்ளது என விவரி.

    2. இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.

    1. +E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.

    2. குறிப்பிட்ட வெப்பநிலையில், தூய பென்சீனின் (C6H6) ஆவி அழுத்தம் 640 mm Hg. 40 கிராம் பென்சீனுடன் 2.2 g ஆவியாகாத கரைபொருள் சேர்க்கப்படுகிறது. கரைசலின் ஆவியழுத்தம் 600 mm Hg எனில், கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல்முழு பாடத் தேர்வு ( 11th Chemistry full portion test )

Write your Comment