11th Full Test Exam ( Important Question )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75
    15 x 2 = 30
  1. STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

  2. ''சேர்மங்களின் பண்புகள் அவற்றின் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும்" இக்கூற்றை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.

  3. ஆக்சிஜனேற்ற எண்ணை எவ்வாறு கண்டறிவாய்?

  4. ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
    i) புரோட்டான்களின் எண்ணிக்கை
    ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
    iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.

  5. ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

  6. உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?

  7. 0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?

  8. ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக. 

  9. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  10. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  11. a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி 

  12. அமுக்கத்திறன் காரணி வரையறு. 

  13. பொருண்மைசாரா பண்பை இரண்டு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.

  14. எரிதல் என்தால்பியை வரையறு 

  15. கீழ்க்காணும் அமைப்புகளுக்கு என்ட்ரோபி மாற்றம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
    1.வெப்பநிலை மாறா மற்றும் அழுத்தம் மாறா செயல்முறை 
    2.வெப்பநிலை மாறா மற்றும் கனஅளவு மாறா செயல்முறை 

  16. 15 x 3 = 45
  17. ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  18. வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.

  19. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  20. போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?

  21. பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
    [அ] 

         

    [ஆ] 

         

    [இ]

         

    [ஈ]

         

    இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.

  22. அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்டத்தினை பாதிக்கும் காரணிகளுள் முக்கியமான ஒரு காரணி அணுவின் எலக்ட்ரான் அமைப்பு - விளக்குக.

  23. "தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.

  24. கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

  25. கனநீரின் பயன்களைத் தருக

  26. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
    (i) மெக்னீசிய பால்மம்
    (ii) கடுங்காரம்
    (iii) சுண்ணாம்பு
    (iv) எரி பொட்டாஷ்
    (v) சலவை சோடா
    (vi) சோடா சாம்பல்
    (vii) ட்ரோனா(trona)

  27. தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.

  28. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?

  29. வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.

  30. ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?

  31. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி முழு தேர்வு வினா விடை12th Standard Chemistry Model Full Test Question Paper )

Write your Comment