" /> -->

11th Revision Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

  I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  15 x 1 = 15
 1. 50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?

  (a)

  3.59 g

  (b)

  7 g

  (c)

  14 g

  (d)

  28 g

 2. பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

  (a)

  s>p>d>f

  (b)

  f>d>p>s

  (c)

  d>p>s>f

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 3. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

  (a)

  பொதுவாக அதிகரிக்கின்றது

  (b)

  பொதுவாக குறைகின்றது

  (c)

  எவ்வித மாற்றமுமில்லை

  (d)

  முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது

 4. 0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

  (a)

  2.8

  (b)

  8.4

  (c)

  5.6

  (d)

  16.8

 5. கார உலோக ஹேலைடுகளின் , அயனித் தன்மையின் ஏறுவரிசை

  (a)

  MF < MCl < MBr < MI

  (b)

  MI < MBr < MCl < MF

  (c)

  MI < MBr < MF < MCl

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 6. ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன.பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்சிஜனின் பின்ன அளவு 

  (a)

  3/8

  (b)

  1/2

  (c)

  1/8

  (d)

  1/4

 7. வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை 

  (a)

  விரிவாக விளக்குகிறது 

  (b)

  கணிதவியல் முறைப்படி விளக்குகிறது 

  (c)

  இயற்பியல் முறைப்படி விளக்குகிறது 

  (d)

  விளக்குவதில்லை 

 8. SO2 மற்றும் O2 லிருந்து உருவாகும் SO3ன் இரண்டு மோல்களுக்கு சமநிலை மாறிலி
  K1,ஒரு மோல் SO3 சிதைவுற்று SO2 மற்றும் O2 ஐ தரும் வினையின் சமநிலை மாறிலி

  (a)

  1/K1

  (b)

  \({ K }_{ 1 }^{ 2 }\)

  (c)

  \({ \left( \frac { 1 }{ { K }_{ 1 } } \right) }^{ 1/2 }\)

  (d)

  \(\frac { { K }_{ 1 } }{ 2 } \)

 9. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

  (a)

  NH4Cl

  (b)

  NH3

  (c)

  NaCl

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 10. குழாய் வண்ணப்பிரிகை எக்கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது?

  (a)

  பரப்புக் கவர்ச்சி

  (b)

  பக்கீட்டு முறை

  (c)

  உறிஞ்சுதல்

  (d)

  பிரிகையடைதல்

 11. -I விளைவினை காட்டுவது

  (a)

  -Cl

  (b)

  -Br

  (c)

  both (a) and (b)

  (d)

  -CH3

 12. வாயு நிலையில் உள்ள புரோமினுடன் உடனடியா க வினை புரியும் சேர்ம த்தின் வாய்பாடு

  (a)

  C3H6

  (b)

  C2H2

  (c)

  C4H10

  (d)

  C2H4

 13. ஏத்திலிட்டி டை குளோரைடு ஜிங்க் தூளுடன் வினைபட்டு தருவது 

  (a)

  மெத்தனால் 

  (b)

  மெத்திலீன் 

  (c)

  எத்தனால் 

  (d)

  எத்திலீன் 

 14. குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்? 

  (a)

  1 ppm  மேல் 

  (b)

  2 ppm மேல் 

  (c)

  3 ppm மேல் 

  (d)

  50 ppm மேல் 

 15. சமமோலார் NaCl மற்றும் KCl கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. NaCl கரைசலின் உறை நிலை –2oC,எனில் எதிர்பார்க்கப்படும் KCl கரைசலின் உறைநிலை மதிப்பு

  (a)

  –2oC

  (b)

  – 4oC

  (c)

  – 1oC

  (d)

  0oC

 16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. ஒப்பு அணு நிறை வரையறு

 18. முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?

 19. ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

 20. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

 21. சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?

 22. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

 23. உர்ட்ஸ் - பிட்டிங் வினையை எழுதுக.        

 24. பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
  (i) BOD மற்றும் COD
  (ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்

 25. 370.28 K வெப்பநிலையில், 0.25m குளுக்கோஸ் கரைசலானது ஏறத்தாழ இரத்தத்திற்கு சமமான சவ்வூடுபரவல் அழுத்தத்தை கொண்டுள்ள து. இரத்தத்தின் சவ்வூடு பரவல் அழுத்தம் என்ன?

 26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 3 = 18
 27. இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

 28. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?

 29. கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

 30. சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மனமற்ற வாயு அது நல்லியல்புத்தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50ல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.

 31. ΔS=0.2 JK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக 

 32. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

 33. 0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.

 34. அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது? 

 35. 2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. P0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?

 36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  5 x 5 = 25
  1. ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.

  2. துகள் முடுக்குகளைக் கொண்டு புரோட்டான்களை முடுக்குவிக்க இயலும். அத்தகைய முடுக்குவிக்கப்பட்ட 2.85 ×108 ms-1 வேகத்தில் இயங்கும் புரோட்டான் ஒன்றின் அலை நீளத்தினை (\(\overset { 0 }{ A } \)ல்) கணக்கிடுக. (புரோட்டானின் நிறை 1.673 × 10-27 Kg).

  1. ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து (B) என்ற அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறி

  2. கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
   அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும் 
   ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
   இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் கோடையில் குளிர்காலத்தை விட காற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
   ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும். 

  1. 300k வெப்ப நிலையில்,\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\) என்ற விளை தன்னிச்சையானது எனக்கட்டுக .CO2 மற்றும் CO ஆகியன உருவாவதற்கான திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றங்கள் முறையே -394.4 மற்றும் -137.2KJ mole-1

  2. மொத்த அழுத்தம் 1.00 bar மற்றும் 800Kல் 1 மோல் A2(g) மற்றும் 1 மோல் B2(g) யினை கொண்டு
   ஒரு மூடிய கலன் நிரப்பப்படுகிறது. K = 1 என்று கொடுக்கப்பட்டுள்ள வினையில், சமநிலையில்,
   கலவையிலுள்ள பகுதிப் பொருள்களின் அளவினை கணக்கிடுக.
   A2(g) + B2(g) ⇌ 2AB(g)

  1. மீத்தேனின் இனக்கலப்பை விவரி.

  2. கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?

  1. பின்வரும் சேர்கை வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.
   (i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
   (ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை
   (iii) தனி உறுப்பு சேர்கை வினை  

  2. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
   KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வு ( 11th Chemistry Revision Test )

Write your Comment