11th Third Revision Exam 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    6.022 × 1023

    (b)

    \(\frac{6.022\times10^{22}}{1.7}\)

    (c)

    \(\frac{6.022\times10^{24}}{1.7}\)

    (d)

    \(\frac{6.022\times10^{23}}{1.7}\)

  2. ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை மற்றும் நுண்துகளின் ஈரியல்பு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது எது?

    (a)

    மரபு இயக்கவியல்

    (b)

    குவாண்டம் இயக்கவியல்

    (c)

    நியூட்டனின் இயக்கவியல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  3. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  4. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

    (a)

    25% பாராவும் 75% ஆர்த்தோவும்

    (b)

    1% பாரா 99% ஆர்த்தோ

    (c)

    75% பாராவும் 25% ஆர்த்தோவும்

    (d)

    99% பாரா 1% ஆர்த்தோ

  5. நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

    (a)

    Ca(CN)3

    (b)

    CaN2

    (c)

    Ca(CN)2

    (d)

    Ca3N2

  6. கீழ்காணும் கூற்றுகளை கருதுக.
    i) காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட மலை உச்சியில் குறைவு 
    ii) வாயுக்கள் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன.
    iii) காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரசமட்டம் அதிகரிக்கின்றது
    சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    I மற்றும் II 

    (b)

    II மற்றும் III 

    (c)

    I மற்றும் III 

    (d)

    I, II மற்றும் III 

  7. q=0 என்பது 

    (a)

    வெப்பமாறா செயல்முறை 

    (b)

    வெப்பநிலை மாறா செயல்முறை 

    (c)

    திறந்த அமைப்பு 

    (d)

    மூடிய அமைப்பு 

  8. A + B ⇌ C என்ற சமநிலையில் உள்ள மீள்வினையினைக் கருதுவோம், A மற்றும் B ஆகிய வினைபடுபொருட்களின் செறிவினை இருமடங்காக உயர்த்தினால், சமநிலை மாறிலியின் மதிப்பு

    (a)

    இருமடங்காகும்

    (b)

    நான்கில் ஒரு பங்காகிறது

    (c)

    பாதியாகும்

    (d)

    மாறாமலிருக்கும்

  9. பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

    (a)

    XeF4

    (b)

    AlCl3

    (c)

    SF6

    (d)

    SCl2

  10. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

    (a)

    நீராவி வாலை வடித்தல்

    (b)

    பின்ன வாலை வடித்தல்

    (c)

    கொதிநிலை மாறா வாலை வடித்தல்

    (d)

    வகையீட்டு வடித்து இறக்குதல்

  11. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் தொகுதியினைக் குறிப்பிடாதது எது?

    (a)

    BF3, H2O, NH2-

    (b)

    AlCl3, BF3, NH3

    (c)

    CN-, RCH2-, ROH

    (d)

    H+, RNH3+, :CCl2

  12. (A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.

    (a)

    CH3(CH2)3Br

    (b)

    CH3(CH2)5 Br

    (c)

    CH3(CH2)3 CH(Br)CH3

    (d)

    \({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)

  13. ஹேலோ அமிலங்கள் ஆல்கஹாலுடன் புரியும் வினையின் வேகத்தின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    (a)

    \(HI>HBr>HCI\)

    (b)

    \(HCI>HBr>HF\)

    (c)

    \(HBr>HI>HCI\)

    (d)

    \(HF>HCI>HBr\)

  14. பின்வருவனவற்றுள் கலைக் கொள்ளிக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    சோடியம் குளோரேட் 

    (b)

    சோடியம் ஆர்சின்ட் 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  15. பின்வருவனவற்றுள் எந்த ஒரு வாயுவானது மிகக்குறைந்த ஹென்றி விதி மாறிலி மதிப்பைப் பெற்றுள்ளது?

    (a)

    N2

    (b)

    He

    (c)

    CO2

    (d)

    H2

  16. 6 x 2 = 12
  17. ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.

  18. செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

  19. பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
    (i) Na  (ii) Ba  (iii) Fe

  20. ஒரு கார உலோகம் (X) அதன் நீரேற்றிய சல்பேட் X2SO4.10H2O ஐ உருவாக்குகிறது.அந்த உலோகம் சோடியமாகவோ அல்லது பொட்டாசியமாகவோ இருக்க வாய்ப்புள்ளதா?

  21. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

  22. பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
    (i) SF6
    (ii) PCl5

  23. கார்பாக்சில் நீக்க வினையை எழுதுக.    

  24. ஒருவர் தான் பயன்படுத்திய நீரினால் மலமிளக்குதல் விளைவால் பாதிக்கப்பட்டார் எனில் அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?

  25. A என்ற திடப்பொருள் மற்றும் அதன் மூன்று கரைசல்கள் (i) ஒரு தெவிட்டிய கரைசல், (ii) ஒரு மீ தெவிட்டிய கரைசல் ஆகியன உன்னிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த கரைசல் என்ன வகையானது என எவ்வாறு கண்டறிவாய்?

  26. 6 x 3 = 18
  27. பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக 
    (i) உலோக இடப்பெயர்ச்சி வினை 
    (ii) அலோக இடப்பெயர்ச்சி வினை 

  28. பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
    [அ] 

         

    [ஆ] 

         

    [இ]

         

    [ஈ]

         

    இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.

  29. கனநீரின் பயன்களைத் தருக

  30. எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?

  31. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.

  32. பின்வரும் சமநிலை வினைகளின் சமநிலை மாறிலிகளைத் தொடர்புபடுத்துக.
    \((i){ N }_{ 2 }+{ O }_{ 2 }\rightleftharpoons { 2NO;K }_{ 1 }\\ (ii)2NO+{ O }_{ 2 }\rightleftharpoons 2NO_{ 2 };{ K }_{ 2 }\\ (iii){ N }_{ 2 }+2O_{ 2 }\rightleftharpoons { 2NO }_{ 2 };{ K }_{ 3 }\)
     

  33. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

  34. குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
    அ. ஹலேஜனேற்றம் 
    ஆ. நைட்ரோ ஏற்றம் 
    இ.சல்போனேற்றம் 
    ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை 

  35. தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
    (அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
    (b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.

  36. 5 x 5 = 25
  37. ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
    AS2S3+ HNO3 + H2\(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO

  38. துகள் ஒன்றின் நிலையில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையின் அளவீடானது அதன் டீபிராக்ளி அலைநீளத்திற்குச்  சமம் எனில், அதன் திசைவேகத்தில் ஏற்படும் குறைந்த பட்ச நிச்சயமற்றத் தன்மை திசைவேகத்தின் 1/4\(\pi\)  மடங்குக்குச் சமம் எனக் காட்டுக.

  39. பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (D) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (E) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (F) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D, E மற்றும் F யைக் கண்டறிக. வினைகளை விளக்குக

  40. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
    அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
    ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
    இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

  41. வினைகளின் தன்னிச்சை தன்மை மீது வெப்ப நிலையின் விளைவை எடுத்துக்காட்டுடன் விவரி.

  42. 5000C ல், \({ Ca }{ CO }_{ 3 }(s)\rightleftharpoons CaO(S)+{ CO }_{ 2 }(g)\) என்ற வினையில் CO2ன் பகுதி அழுத்தம்
    1.017 × 10–3 atm ஆகும். இவ்வினை யில் 6000Cல், KP க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் \(\triangle\)H 181KJ mol-1 மேலும் கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் இதன் மதிப்பு மாறுவதில்லை.

  43. நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.

  44. பின்வருவனவற்றை விளக்குக.
    (i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
    (ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
    (iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு

  45. +E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.

  46. 100 கிராம் கார்பன் டைசல்பைடில் 2.56 கிராம் சல்பர் கரைக்கப்பட்டுள்ளது. இந்த கரைசல் 319. 692 K இல் கொதிக்கிறது. கரைசலில் சல்பரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? CS2 இன் கொதிநிலை 319. 450K. CS2 இன் Kb மதிப்பு 2.42 K Kg mol-1என கொடுக்கப்பட்டுள்ளது.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Chemistry 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment